Wednesday, May 4, 2016

கோபத்தை வெல்ல ரமணர் சொன்ன வழி!

★       ★

பகவான் ஸ்ரீரமண மகரிஷியிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட இளைஞன் ஒருவன் ஒரு நாள் அவரிடம் வந்து, தன்னை ஒருவர் அடிக்கடி திட்டுவதாகவும், அதனால் தனக்குக் கோபம் வருவதாகவும், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டான்.

ரமணர் அதற்கு, ‘‘நீயும் அவனோடு சேர்ந்து உன்னையே திட்டிக் கொள்!’’ என்றார். வாலிபன் திகைத்தான்.

அதற்கு பகவான் அவனைப் பார்த்து, ‘‘உன்னைத் திட்டுபவன் உன் உடம்பைப் பார்த்துத்தானே திட்டுகிறான். கோப தாபங்களுக்கு இடமான இந்த உடலை விட நமக்குப் பெரிய விரோதிகள் யார் இருக்கிறார்கள்?!

ஒருவர் நம்மைத் திட்டுகிறார் என்றால் அவர் நம்மைத் தட்டி எழுப்புகிறார், உஷார்படுத்துகிறார் என்று அர்த்தம். அப்போது நாமும் அவருடன் சேர்ந்து கொண்டு இந்த உடம்பைத் திட்டித் தீர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு திட்டியவரை நாம் திருப்பித் திட்டுவதால் என்ன பயன்?

நம்மைத் திட்டுபவர்கள் நமது நண்பர்களே. திட்டுபவர்களின் மத்தியில் நாம் இருப்பது நல்லது. அப்படி இல்லாமல் நம்மைப் புகழ்பவர்கள் மத்தியில் இருந்தால், நாம் ஏமாந்துதான் போக வேண்டும்!’’ என்று கோபத்தை வெல்லும் வழியை அவனுக்குக் கூறினார்   பகவான் ஸ்ரீரமணமகரிஷி.

Thanks : ogt...×+
(நாளை ரமண மகரிஷி யின்66ஆவது ஆராதனை)

No comments:

Post a Comment