.
அலுவலகம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகும்…….
“உயரதிகாரிகளின் ஆணவ, அலட்சியப் பேச்சு”
“சக ஊழியர்களின் அரசியல் தந்திரங்கள்”
“வராக் கடன்”
போன்ற தொழில் சார்ந்த எண்ணங்களை உன் மனம் இடையறாது உற்பத்தி செய்துகொண்டேயிருக்கிறது.
இதனால்…..
“பொன் மாலைப் பொழுது, பௌர்ணமி நிலா, தென்றல் காற்று”
“குழந்தையின் மழலை”
“மனைவியின் காதல், ஊடல்”
போன்ற எந்த உயிர்ப்பான விசயங்களையும் அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறது.
இடையறாத இந்த எண்ண ஓட்டங்களின் வேகம் நேரம் செல்லச் செல்ல அதிகமாகி…….
தூக்கத்திலும் கூட தொடர்கிறது.
ஆழ்ந்த உறக்கம் வருவதேயில்லை. புத்துணர்ச்சியைத் தர வேண்டிய தூக்கம் ஆழ்ந்த சோர்வைத் தருகிறது. இதன் பாதிப்பு ஒவ்வொரு நாளும் தொடர்கிறது.
இதேபோல…..
உன் வாழ்வில் நடந்துவிட்ட, நீ மறக்க நினைக்கிற கசப்பான அனுபவங்களை மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்துகொண்டேயிருக்கிறது.
இதனால் உன் நிகழ்கால செயல்கள் தடைபடுகின்றன. அடிவயிற்றில் பீதியினால் ஏற்படுகிற ஒரு ரசாயன மாற்றம். எப்போதும் எதையோ இழந்ததைப் போல ஜீவனற்ற நடைப்பிணமாய் நகரத்தொடங்குகிறாய்.
உன் வாழ்வில் ஆடல், பாடல், நகைச்சுவை, படைப்பாற்றல் என எதுவுமே இல்லாமல் போகிறது. வாழ்க்கை வெறுத்துப்போகிறது. விரக்தி மேலிடுகிறது. தற்கொலை எண்ணங்கள் தலைதூக்குகின்றன.
இந்தக் கால மனிதனுக்கு இதுபோன்ற மன அழுத்தங்கள் ஏராளம். அவனுக்கு கண்மூடி அமர்ந்து உள்ளே உற்று கவனிக்கிற தியான முறைகள் பயன் தராது என்கிறார் ஓஷோ.
அவன் மனதில் காமம் முதற்கொண்டு பல்வேறு அடக்கப்பட்ட விஷயங்கள் உணர்ச்சி முடிச்சுகளாய் குவிந்து கிடக்கின்றன. அவை அனைத்தும் முதலில் வெளியேற்றப்பட வேண்டும். அதன் பிறகே தியானம் அவனுக்குக் கைகூடும்.
நவீன மனிதனுக்கேற்ற முறையில் ஓஷோவால் நுட்பமாய் வடிவமைக்கப்பட்ட தியானயுக்திகளை கற்கும் அற்புதமானதொரு வாய்ப்பு நம் ஜோர்புத்தனில்…
நாளை முதல்……
# ஓஷோ_மன்சூர்
No comments:
Post a Comment