ஞானத்திற்கும் அப்பால்.
வாழ்க்கை மீண்டும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் என்பது நிச்சயமில்லை.
இந்தமுறை அது ஏன் தரப்பட்டுள்ளது என்பதில் கூட நிச்சயமில்ல.
நீ அதற்குத் தகுதியானவனா......???
அதை நீ சம்பாதித்திருக்கிறாயா.....???
உயிர் வாழ்தல் அதை உனக்கு கொடுக்கக் கடமை பட்டுள்ளதா......???
அது ஒரு சுத்தமான பரிசு, உயிர் வாழ்தலின் அதிகமான நிறைவின் மூலம் வரும் பரிசு.
நீ அதற்குத் தகுதியானவனா இல்லையா என்றெல்லாம் அது கவலைப்படுவதில்லை.
அது உனது தகுதிகளை பற்றிக் கேள்வி கேட்பதில்லை.
உனது நன்னடத்தை ஒழுக்கம் இவை பற்றி விசாரிப்பதில்லை.
உன் மீது எந்த வேண்டுகோளையும் விதிப்பதில்லை, எந்தவிதமான விதிமுறைகளும் இன்றி வெறுமனே அது உனக்குத் தரப்படுகிறது.
இந்தப்பரிசு ஒரு வணிகரீதியானது அல்ல.
உன்னிடம் எந்தவித எதிர்ப்பார்ப்புகளையும் அது பதிலுக்குக் கேட்பதில்லை.
உன்னிடம் அதை கொடுத்து நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்று முழு சுதந்திரத்தையும் அது அனுமதிக்கிறது.
~~ஓஷோ~~
No comments:
Post a Comment