குணங்கள்..
...
எது உன் குணம் மனமே
...
உனது குணம் என்று
எதை நினைக்கிறாய் மனமே
...
முன் பிறவியை
நம்ம மறுக்கிறாய் மனமே
ஆனால்
நீ
தாயின் கருவறையில்
இருந்தது
உனக்கு ஞாபகம் இல்லை
...
ஐந்து வயது வரை
என்ன செய்தாய் என
உனக்கு ஞாபகம் இல்லை
..
சிசுவாக இருந்த போது
பார்ப்பதை எல்லாம்
பார்த்து சிரித்தாய்
பொக்கை வாய் கொண்டு
என்ன கண்டு சிரித்தாய்
என உனக்கு
ஞாபகம் இல்லை மனமே
...
ஆனால் இது எல்லாம் உண்மை
...
தூங்கும் போது
நீ யார் என்றும் தெரியவில்லை
ஆனால்
நன்றாக தூங்கினேன் என்கிறாய்
..
பிறகு எப்படி
உயிரின்
ஜென்ம பயணத்தை
அறிவாய் நீ மனமே
...
அந்த
உயிரின் குணம் வேறு
...
உனக்கு
உடல் தந்த
தாய் .. தந்தை .. வழி வந்த
குணம் வேறு
...
பரிசுத்தமான
ஆன்மாவின் குணம் வேறு
...
உடல் சார்ந்த குணம் வேறு
உயிர்கடந்த பயண குணம் வேறு
சிவமாக
ஆதி அந்தமான
ஆன்மாவின் குணம் வேறு
...
உடல் சார்ந்த குணம்
உனது மரபணுவில் உள்ளதே
..
உயிர் சார்ந்த குணம்
உனது
கரு மையத்தில் உள்ளதே
...
ஆன்மாவின் குணம்
சூட்சும உடலில்
அறிவு கொடியில் பறக்கிறது
சிவமாக
சிவ சொருபமாக
....
இதில்
எந்த குணத்தை
உன் குணம் என்பாய் மனமே
Sunday, May 1, 2016
குணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment