ஈசனே நின் திருவருளை உணராமல்
நேற்றைய கனவுகளை அடைய இன்று முயன்றுகொண்டு
நாளைய மலத்தை வெளியேற்ற இன்று சுவையென்று நினைத்து எதைஎதையோ நாடி உண்டுகொண்டு
நாளைய பிணங்களுக்காக உழைத்துக்கொண்டு, அதனிடம் நல்லபெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தால் என்னுடைய ஆசைகளை அடக்கிகொண்டு நடித்து,
நாற்றமும் அசுத்தமும் கொண்டு உடலுடன் உறவுகொள்ள
எதைஎதையோ செய்துகொண்டு,
மானம், கவுரவம், என்று பிறக்கும்போது இல்லாத ஒன்றை இப்பொது இருப்பதாக நினைத்துகொண்டு,
அது நிலைக்கும், இது காப்பாற்றும், என்று எதைஎதையோ நம்பிக்கொண்டு அதன் பின்னே ஓடிக்கொண்டு,
இல்லாத ஒன்றை இருப்பதாக கருதிக்கொண்டு அதையெல்லாம் பேணி காக்கிறேன் என்று அலைந்துகொண்டு,
என்றும் எப்போதும் உடனிருந்து மேல்கூறிய யாவும் அற்பமானது என்று அறிந்தும் !! அதை அருளியாவது இவனை மகிழ்விப்போம் என்று தன்னை வெளிக்காட்டாமல் அருளிய வள்ளலே !!!
நின்னை என்னுளே உணர்த்தியபோதும் பொய்யை விட்டு விலக முடியாமல் இருக்கின்றனே பெருமானே ???!!
மெய்யுடன் லயிக்கும் மேன்மை வேண்டி......
No comments:
Post a Comment