Monday, April 4, 2016

வாழ்க்கைக் கண்ணோட்டம்:

தத்துவம் என்றால் என்ன? மிக எளிமையாகச் சொல்வதென்றால், வாழ்க்கையைப் பற்றிய விளக்கம், கண்ணோட்டம். உதாரணத்துக்கு, இந்த வாழ்க்கையில் நாம் பட்டுக் கொண்டிருக்கும் கஷ்டநஷ்டங்களுக்குக்காரணம் நம்முடைய தலைவிதி என்று பெரும்பாலோர் நினைக்கிறார்கள். அது ஒரு தத்துவ வெளிப்பாடு.இல்லை இந்தக் கஷ்டநஷ்டங்களுக்குக் காரண காரியங்கள் இருக்கின்றன என்று சிறுபான்மையோர் நினைக்கிறார்கள், அதுவும் ஒரு தத்துவ வெளிப்பாடுதான்.இப்படி வாழ்வின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு தத்துவ நோக்கு பின்னிப் பிணைந்துள்ளது. நாளுக்கு நாள் நம்முடைய உணவுப் பழக்கம், உடை, இருப்பிடம் என்று எல்லாமே மாறிக் கொண்டேயிருப்பதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. அந்தத் தத்துவமே அரசு நிர்வாகத்தைக் கட்டமைக்கிறது, செயல்படுத்துகிறது. தத்துவத்தின் பார்வையைப்பொறுத்தே அந்தத் தத்துவம் யாருக்கானது, அதன் நோக்கம் என்ன என்று தெரிந்துகொள்ள முடியும். முதலாளித்துவத் தத்துவம் முதலாளிகளுக்குச் சார்பான அரசியல், சட்டம், நீதி, கல்வி ஆகியவற்றைத்தான்செயல்படுத்தும்.போலியான ஜனநாயக நடைமுறைகள் மூலம் மக்களை ஏமாற்றும். எனவே, சாமானியர்கள் இந்த முதலாளித்துவத்தின் அசுர நிதி மூலதனப் பசிக்கு இரையாவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், எல்லாத் தத்துவங்களும் தங்கள் கருவுக்குள்ளேயே, அதற்கு மாற்றான தத்துவத்தின் விதைகளைக் கொண்டிருக்கும்.மருத்துவத் தத்துவம்எல்லாவற்றிலும் இருப்பதைப் போல மருத்துவத்துக்கும் ஒரு தத்துவப் பார்வை உண்டு. அதுதான் அந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்கிறது.சித்தா, ஆயுர்வேதம், யுனானி போன்ற மருத்துவ முறைகள் நிலப்பிரபுத்துவத் தத்துவப் பார்வை கொண்டவை என்றால், ஆங்கில மருத்துவ முறை முதலாளித்துவத் தத்துவப் பார்வை கொண்டது. நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தில் மருத்துவம் புனிதமானதாகக் கருதப்பட்டது. அது மந்திரத்தன்மை கொண்டதாகவும், ரகசியமாகச் செய்ய வேண்டியதாகவும் கருதப்பட்டது. அந்த மருத்துவ ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அப்படிப் பகிர்ந்து கொண்டால், அது பலிக்காது என்றும் நம்பப்பட்டது. நிலப்பிரபுத்துவத்தின் உற்பத்தி உறவுகளைப் போலவே, மருத்துவமும் மதிப்பு மிக்கதாக இருந்தது. மனிதர்களின் தனித்துவத்துக்கு முக்கியத்துவம் அளித்தது.ஆங்கில மருத்துவ முறை முதலாளித்துவத் தத்துவப் பார்வை கொண்டது. அதற்குச் சந்தைதான் முக்கியம். எல்லாவற்றையும் விற்கவோ, வாங்கவோ முதலாளித்துவம் முயலும். பேராசை கொண்ட அதன் லாப வெறிக்கு எதுவும் பொருட்டல்ல. அதன் உற்பத்தி உறவுகள் சந்தையோடு தொடர்புடையவை என்பதால், அது எதையும் மதிக்காது. எந்த விழுமியங்களையும் ஏற்காது. அப்படியே தன்னுடைய சந்தைத் தேவைகளுக்கேற்ப மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டேயிருக்கும். அதற்கு எல்லாமே, எல்லாருமே பண்டங்கள்தான். எப்படி மனிதர்களுக்காகப் பொருட்களையும் பொருட்களுக்காக மனிதர்களையும் உருவாக்குகிறதோ,அதேபோல நோய்களுக்காக மருந்துகளையும் மருந்துகளுக்காகநோய்களையும் அது உற்பத்தி செய்யும்.மாற்று மருத்துவம்உதாரணத்துக்கு, இப்போது பிரசவம் என்றாலே அது சிசேரியன்தான் என்றாகிவிட்டது.இது திட்டமிட்டுப் பணம் பறிப்பதற்கான செயலாக மாறிவிட்டது. நாற்பது வயதுக்கு மேல் உள்ள பெண்களில் பாதிப் பேருக்குக் கர்ப்பப்பையை எடுத்துத் தூரப் போட்டாகிவிட்டது. சம்பந்தமில்லாமல் கூட்டம் கூட்டமாகத் தடுப்பூசிகளைப் போடச் செய்வது... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். மனிதன் ஒரு முழுமையான இயங்கியல் உயிரினம் என்பதை மறுத்து, அவனை ஒரு எந்திரமாகப் பாவித்து எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து வேலை பார்க்கிறது ஆங்கில மருத்துவம். எதிர்காலத்தில் ஒரு சமூகத்தையே ஊனமுள்ளதாக்குகிற வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. சிலர் மட்டும் செல்வத்தில் கொழிக்க, பெரும்பான்மை மக்கள் தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழக்கின்றனர். இது அதன் தத்துவப் பார்வையின் அடிப்படையில் உருவான நடைமுறை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.ஆனால், நமக்குத் தேவை மானுடமயமான தத்துவப் பார்வை கொண்ட மருத்துவம். அது, அடிப்படையில் சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். தெளிவான தத்துவ நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். எந்த ரகசியங்களோ,மர்மங்களோ இல்லாததாக, இயற்கையின் விதிகளுக்கு ஏற்பச் செயல்படுகிற மருத்துவமாக இருக்க வேண்டும். பக்கவிளைவுகள் இல்லாத எளிமையான, இனிமையான, முழுமையான நலனை மீட்டுத் தர வேண்டும். சுருக்கமாக, அதுமக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும்.உணவே மருந்தாக அமையவேண்டும்.By.pp

No comments:

Post a Comment