சிகரெட்டை விட ஆபத்தானது ஊதுபத்திகள்: அதிர்ச்சி தகவல்!! f
சிகரெட் புகையில் உள்ள ஆபத்து விளைவிக்கும் மூலக்கூறுகளைக் காட்டிலும், நாம் வீட்டுக்குள் ஏற்றி வைக்கும் ஊதுபத்தி அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் மூலக்கூறுகளுடன் உருவாக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சீனாவின் குவாங்ஸூ நகரில் உள்ள தென் சீனப் பல்கலைக்கழகத்தின் ரோங் சாவ் என்ற ஆய்வாளரின் தலைமையில் சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், சிகரெட் பற்றிய ஆய்வுகளை எடுத்துக்காட்டாக வைத்து ஊதுபத்தி புகையின் பாதிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இந்த திடுக்கிடும் உண்மை தெரியவந்துள்ளது.
சுமார் 64 மூலக்கூறுகளுடன் தயாராகும் ஊதுபத்தியில், இரண்டு மூலக்கூறுகள், மிக மோசமான பாதிப்பை விளைவிக்கும் விஷமான மூலக்கூறுகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பதால், நம்முடைய மரபணுவிலேயே (டி.என்.ஏ.) மாற்றங்கள் ஏற்பட்டுவிடும். இந்த மரபணுவில் ஏற்படும் மாற்றம், குழந்தைகள் விகாரமான தோற்றத்துடன் பிறக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். இந்த மரபணு மாற்றத்தால் புற்றுநோய் வரவும் அதிகமான வாய்ப்புள்ளது.
ஆசிய நாடுகளில் பெரும்பாலான பகுதிகளில் ஊதுபத்தி ஏற்றும் பழக்கம் இருந்து வருகிறது. முக்கியமாக கோவில்களிலும், வீடுகளுக்குள்ளும் இதை ஏற்றுவது பாரம்பரியமான பழக்கமாக காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. எனினும், இந்நாள் வரை, அறிவியல் ரீதியாக இதைப்பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
சிகரெட் புகையினால் வரும் பாதிப்பு பற்றி சுமாராக, ஒரு நூற்றாண்டுக்கும் மேல் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆகையால், இந்த ஊதுபத்தி ஏற்படுத்தும் பாதிப்பைப்பற்றியும் மக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டியது அவசியம் என இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment