கிராமத்து அதிசய வைத்தியரம்மா...!!!
படத்தில் இருக்கும் இந்தபெண்மணி கிராமத்து வைத்தியர்.தலையில் புழுவெட்டு,தலை அரிப்பு,முடிகொட்டுதல் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வல்லவர்.தலையில் புழுவெட்டு இருப்பவர்களின் தலையில் ஏதோ ஒரு என்ணெயை தலையில் தடவியவுடன்,தலையிலிருந்து புழுக்கள் வருகின்றனவாம்.தலைமுடி வளரவும் ஒரு எண்ணெய் கொடுக்கிறாராம்.சிகிச்சை கட்டணமாக வெறும் 30 ரூபாய் மட்டுமே வாங்குகிறாராம்.தலையில் தேய்க்கும் எண்ணெயும் 100 மில்லி 25 ரூபாய்தானாம்.
அதுமட்டுமின்றி காதுவலி,காது அடைப்பு,காதில் நீர்வடிதல் போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறாராம்.விஷக்கடிகளுக்கு மந்திரம் மூல்ம் குணப்படுத்துகிறாராம்.இந்த அம்மையாரிடம் நிறைய ஓலைச்சுவடிகள் இருந்த்தாகவும்,வறுமை காரணமாக எல்லவற்றையும் யாருக்கோ கொடுத்து விட்டதாகவும்,இப்போது அவரிடம் 2 ஓலைச்சுவடிகள் மட்டும் உள்ளதாகவும் தகவல்.
# அம்பாசமுத்திரம்-தென்காசி ரோட்டில்,அம்பாசமுத்திரத்தில் இருந்து ஒருகிலோமீட்டர் தூரத்தில் உள்ள மன்னார்கோவில் என்ற கிராமத்தில் இந்த அதிசய வைத்தியரம்மா இருக்கிறாராம்.அந்தஊரில் இறங்கி,”தலையில் புழு எடுக்கும் அம்மா” என்று யாரைக்கேட்டாலும் வைத்தியர் அம்மாவீட்டை காண்பிபார்களாம்.
இந்த தகவலை என்னுடன் நம் முகநூல் நண்பர் திரு.ராஜராஜ ராஜா அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்..இந்த தகவல் அனைவருக்கும் பயன்படும் என்று கருதி இங்கு பகிர்கிறேன்.இந்த அம்மையாரைப் பற்றி இன்னும் தகவல்கள் தெரிந்தவர்கள் என்னிடம் பகிரலாம்.
No comments:
Post a Comment