பரிசோதிக்கப்படுபவை:* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி.* விந்தணுக்களின் எண்ணிக்கை.* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்.* இயல்பான உயிரணுக்கள்.* பாக்டீரியா போன்றவை.* ரசாயனங்கள் மற்றும் நோய் எதிர்ப்பூக்கிகள்.2 முதல் 6 மில்லி லிட்டர் அளவிலான விந்தணுவில், ஒவ்வொரு மில்லியிலும் 4 கோடி உயிரணுக்கள் இருக்க வேண்டும். இரண்டு கோடி அணுக்களுக்கும் குறைவாக இருந்தால் பிரச்சனை. சில ஆண்கள் இருபது, முப்பது லட்ச அணுக்கள் இருந்தாலே கருத்தரிக்க தகுதியுடன் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அதாவது குறைந்த பட்சம் -நாற்பது மில்லியன் அணுக்கலாவது இருக்கணும் .அதற்க்கு குறைந்தால் நல்லதில்லை. .நூற்று இருபது மில்லியன் அணுக்கள் இருந்தால் மிக நல்லது. இந்த இடைவேளைக்கு உள் இருப்பது சிறந்ததுவிந்தணுவில் 70 சதவிகித அணுக்களாவது ஊர்ந்து செல்ல வேண்டும். அதைவிட குறைவாக இருந்தால், அது குறைபாடான அணுக்களாக கருதப்படும்.விந்துவில் உள்ள அணுக்களில் சுமார் 80 சதவிகித அளவு இயல்பான அணுக்களாக இருக்க வேண்டும்.விந்தில் பாக்டீரியா, வைரஸ் போன்றவை ஒட்டியிருந்தால், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதைஅறிய முடியும். இந்தக் கிருமிகள், அணுக்களை குறைபாட்டுள்ளவையாக மாற்றியிருக்கும்.நோய் எதிர்ப்பூக்கிகள் அதிகமாக இருந்தால், அவை உயிரணுக்களை அந்நிய பொருளாகக் கருதி, கொன்று விட்டிருக்கலாம். எனவே, விந்துப் பரிசோதனைதானே என அலட்சியமாக நினைக்காமல், பரிசோதனையை முழு ஒத்துழைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.சோதனை முடிவுகள் என்னவாக இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை. காரணம், கவலைப்படுவதால் கூட விந்தணுக்கள் குறைபாடு உள்ளவையாக உருவாகின்றன.அடுத்த முறை நல்ல விந்தணுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை அறிய, சிறிது இடைவெளிக்குப் பிறகு இதே பரிசோதனை முறையை மேற்கொள்ளலாம்.(புதிய ஆராச்சிகளின்படிமூன்றில் ஒரு பங்கு ஆண்களுக்கு விந்தணுக்கள் வலுவற்றிருப்பதேஇன்றைக்கு குழந்தையின்மைப்பிரச்சனை எங்கும் தழைத்து வளர்வதன் முக்கிய காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.விந்தணுக்கள் வலிமை இழக்க முக்கியமான ஒரு காரணம் உடலில் வைட்டமின் D குறைவது என்பது இவர்களுடையஆராய்ச்சியின் முடிவாகும். தேவையான அளவு வைட்டமின் D உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றனதம்பதியர் பெற்றோராகும் வாய்ப்பு பிரகாசமடைகிறது.அதற்கு அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் சட்டையைக் கழற்றி ஓரமாய் வைத்து விட்டு கொஞ்சநேரம் வெயிலில் கால்களுக்கு இதமாக நடந்து வருவது தான்!இந்த ஆய்வை நடத்திய போது இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரண்டு மாதங்களில் விந்தணுக்களின் வலிமையும், எண்ணிக்கையும், உருவமும் பல மடங்கு மேம்பட்டதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியை நடத்திய மருத்துவர் கிளார்க்.இந்த சோதனையில் மூலம் 35 விழுக்காடு பேர் குழந்தையின்மைச்சிக்கலையும் தீர்த்திருக்கின்றனர் என்பது வியப்பூட்டுகிறது. அலுவலக அறைகளுக்குள்ளேயே அடைபட்டுக் கிடப்பவர்கள் அவ்வப்போது எழுந்து சாலையோர டீ கடைக்குச் சென்று சுடச்சுட டீயும், வைட்டமின் D யும் பெற்றுக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்குச் சிறந்தது என்பதே இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.புகை, மது, காபி போன்றவற்றை உட்கொள்ளாமலும் அளவான உடற்பயிற்சி மேற்கொள்வதும் என உடலை ஆரோக்கியமாய் காத்துக் கொள்ளும் ஆண்கள் கொஞ்ச நேரம் வெயிலிலும் நடந்து வந்தால் வாழ்க்கை சந்தோஷமாகவும் அமையும்.)காரணங்கள்கருச்சிதைவானது பல காரணங்களால் ஏற்படலாம். அவை யாவும் முற்றிலுமாக அறியப்படவில்லை.தெரிந்த காரணங்களில் சில மரபியல்; கருப்பை; வளரூக்கி சார்ந்த அசாதாரண நிலமைகள், இனப்பெருக்கத் தொகுதியில்ஏற்படும் தொற்றுக்கள், இழைய நிராகரிப்பு போன்றனவாகும்.முதல் மூன்று மாத காலம்அனேகமான மருத்துவத்தில் தோன்றும் மூன்றில் இரு பங்கு தொடக்கம் நான்கில் மூன்று பங்கு கருச்சிதைவானது முதல் மூன்று காலத்திலேயே நிகழ்கின்றது. முதல் 13 கிழமைக்குள் நிகழும் கருச்சிதைவில் அரைவாசியானவற்றில் நிறப்புரி அல்லதுநிறமூர்த்தத்தில் ஏற்படும் அசாதாரணமே காரணமாக உள்ளது.இது தவிர புரோகெஸ்தரோன் (progesterone) வளரூக்கியின் குறைபாடும் கருச்சிதைவுக்குகாரணமாகின்றது. இந்த வளரூக்கியானது மாதவிடாய் வட்டத்தின் பின் அரைவாசிக் காலத்தில் குறைவாக இருப்பின், அந்தப் பெண்களுக்கு புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக முதல் மூன்று மாத காலத்துக்கு வழங்கப்படும். ஆனாலும் புரோகெஸ்தரோன் குறைநிரப்பு பொருளாக வழங்கப்படும்போது, கருச்சிதைவுக்கான இடர் குறைக்கப்படுவதாக ஆய்வுகள்மூலம் சரிவர நிரூபிக்கப்படவில்லை.By.pp.
No comments:
Post a Comment