Saturday, April 23, 2016

சோம்பு கஷாயம் (கர்ப்பிணி பெண்களுக்கு) 

          

சோம்பு கஷாயம்

தேவையானவை

சோம்பு - 3 தேக்கரண்டி,

பனைவெல்லம் (கருப்பட்டி) - ஒரு எலுமிச்சை அளவு,

வெண்ணெய் - ஒரு எலுமிச்சை அளவு

தண்ணீர் - ஒன்றரை டம்ளர் (300 மிலி)
    செய்முறை

சோமபை வெறும் வாணலியில் போட்டு சடசடவென பொரியும் வரை கருகாமல் பொரிக்கவும்.

பொரிந்தவுடன், தண்ணீரை ஊற்றவும்.

தண்ணீர் கொதித்து ஒரு டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விடவும்.

இறக்கி வடிகட்டி, கருப்பட்டி, வெண்ணெய் சேர்த்து ஆற்றி, பொறுக்கும் சூட்டில் குடிக்கவும்.

பிரசவவலி இல்லாமல் பொய்யான வலி (சூடு வலி) ஆக இருந்தால் இந்த கசாயம் குடிச்சா சரி ஆகிடும், உண்மையிலே பிரசவ வழியாக இருந்தால் குறையாமல் வலித்துக் கொண்டே இருக்கும்.

http://activitiesofkids.blogspot.in/2014/06/blog-post_13.html

No comments:

Post a Comment