ஒருநாள் ஒரு சென்(Zen) சன்யாசி, ரின்சாய்(Rinzai) என்பவர் கோவிலில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவர் ஆன்மீக சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது, யாரோ ஒருவன் அவரை பேசவிடாமல் தொந்தரவு செய்து கொண்டிருந்தான். அதனால் ரின்சாய்(Rinzai) தன் உரையை நிறுத்திவிட்டு “என்ன சமாச்சாரம்?”என்றார். அதற்கு அவன் எழுந்து நின்று “ஆத்மா என்றால் என்ன?” என்று கேட்டான். ரின்சாய்(Rinzai) தன்னுடைய குச்சியை கையில் எடுத்துக்கொண்டு, அங்கு உட்கார்ந்து இருப்பவர்களை தனக்கு வழிவிடும்படி சொன்னார். அந்த நபர் நடுங்கத் தொடங்கினான். அவன் இதுதான் விடையாக இருக்கும் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
ரின்சாய்(Rinzai) அவன் அருகில் வந்து, அவன் கழுத்தை தன் இரு கைகளாலும் பிடித்து நெரிக்கத் துவங்கினார். அவனுடைய கண்கள் பிதுங்கி வெளியே வந்தன. ஆனாலும் அவர் அழுத்திக்கொண்டே “நீ யார்? கண்களை மூடிக்கொள்! ”என்றார். அந்த நபர் தன் கண்களை மூடிக்கொண்டான். ரின்சாய்(Rinzai)“நீ யார்?” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அந்த நபர் தன் கண்களைத் திறந்து, சிரித்துவிட்டு, அவரை வணங்கினார். அவன் “நீங்கள் உண்மையாகவே ஆத்மா என்றால் என்ன என்பதற்கு பதிலளித்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்றான்.
ஒரு சாதாரண நுணுக்கம்
No comments:
Post a Comment