Monday, April 18, 2016

ஓம் எனும் மருத்துவம்  !!!

ஓம் எனும் மருத்துவம்  !!!

ஓம் என்ற உச்சரிப்பு உன்னதமானது. இதற்கு ‘பரமாத்மாவே’ ஜீவனாகிய என்னை உன்னோடு சேர்த்துக்கொள்’ என்று அர்த்தம். அதனால் தான் கடவுள் பெயரை உச்சரிக்கும் முன்பும் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா, ஓம் சக்தி, ஓம் முருகா என்று சொல்கின்றோம். இந்த பிரபஞ்சமே ஓம் எனும் அச்சாணியில் தான் சுழன்று கொண்டிருக்கின்றது. எனவே ஓம் என்று சொல்ல… சொல்ல… பஞ்சபூத சக்திகளும் உடலில் ஊடுருவி மின்சக்தி, காந்த சக்தியை உருவாக்குகிறது.
இதனால் நோய்கள் நீங்கி உடலும், உள்ளமும் ஆரோக்கியத்துடன் புத்துணர்ச்சியாக இருக்கும். நோயற்ற வாழ்வை பெற நீங்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியதில்லை. ஓம் என்று சொன்னாலே போதும். அதை எப்படி சொல்வது என்பதை நமது மாலைமலர் மருத்துவர் கமலிஸ்ரீபால் விளக்கமாக கொடுத்துள்ளார்.
ஓம் என்ற இந்த சக்தியான சொல் பல மதங்களின் புனித சொல்லாக கருதப்படுகிறது. வார்த்தையையும், இசையும் சேர்ந்த பாட்டு போல் உச்சரிக்கப்படுகின்றது. மனிதனுக்குள் எப்போதும் தெய்வத் தன்மையும், அசுரத்தன்மையும் போரிட்டுக் கொண்டேதான் இருக்கும். இந்த அசுரத் தன்மையை வெல்லும் சக்தி கொண்டது தான் ‘ஓம்’ என்ற புனித சொல். உச்சரிப்பு, இதனை சற்று சத்தமாகவும் சொல்லலாம் அல்லது மனதிற்குள்ளேயும் சொல்லலாம். மனதில் ‘ஓம்’ என்ற எழுத்தினை கவனத்தில் நிறுத்தியும் தியானம் செய்யலாம். ‘ஓம்’ என்ற உச்சரிப்பு நீண்டு நிதானமாய் சொல்ல வேண்டியது அவசியமாகும்.
இந்த உலகின் சாராம்சம் பூமிதான். பூமியின் சாராம்சம் தான் நீர், தாவரங்கள். இவற்றின் சாராம்சம்தான் மனிதன். மனிதன் என்றாலே சொல், பேச்சு என்ற வெளிப்பாடுதான். இந்த பேச்சின் வெளிப்பாடுதான் ரிக் வேதம் பின்னர் இசையான சாம வேதம். இந்த சாம வேதத்தின் சாராம்ச வெளிப்பாடுதான் ‘ஓம்’ என விவரிக்கப்படுகின்றது.
ஆதிசங்கரர் ஆத்மாவின் அறிகுறி ஒலி வெளிப்பாடுதான் ‘ஓம்’ என குறிப்பிட்டுள்ளார். உயர் சக்தியான பிரம்மம்தான் ‘ஓம்’ எனவும் கூறப்பட்டுள்ளது. ‘ஓம்’ சொல்வது யாகம் செய்வதற்கும், தானம் செய்வதற்கு ஒப்பானது என்றும் விவரிக்கப்படுகின்றது. 3 – இந்த முறையில் ‘ஓம்’ எழுதப்படும் பொழுது முதல் வளைவு விழித்திருக்கும் நிலையையும், ஒரு வளைவு கனவு நிலையையும், கீழ் விளைவு ஆழ்நிலை தியானத்தினையும் குறிப்பிடுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேல் உள்ள புள்ளி துரிய நிலையினை உணர்த்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பு மகா கணபதியின் வடிவமைப்பாக குறிப்பிடப்படுகின்றது.
ஓம் எனும் புனித சத்தம்
அ+உ+ம் என பிரிவு படுகின்றது.
பூமி + ஆகாயம் + தேவ உலகம்
ப்ரம்மா + விஷ்ணு + சிவம்
ரிக் / யஜீர் + சாம வேதங்கள் என்பதினை ‘ஓம்’ உணர்த்துகின்றது.
ஓம் என்பதனை பிரணவ மந்திரம் என்கின்றனர். அதாவது மந்திரங்களுக்கெல்லாம் தலையாய மந்திரம் எனப்படுகின்றது ‘ஓம்’ என்ற சொல். உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.மனச் சோர்வு ஏற்படுகின்றவர்களுக்கு ‘ஓம்’ உச்சரிப்பு பயிற்று விக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து உச்சரிப்பதன் மூலம் சக்தியான இனிமையான குரல் கிடைக்கின்றது என்கின்றனர்.
ஓம் மந்திரம் கடவுளின் ஒலி ரூபம் என்கின்றனர். வார்த்தைகளின் மூலம் ஏற்படும் அதிர்வினைக் கொண்டு உடல் நோய் மனநோய் இவற்றினை தீர்க்கும் முறையினை நம் முன்னோர்கள் குறிப்பாக சித்தர்கள் அறிந்து மனித சமுதாயத்திற்கு அளித்து உள்ளனர். இதனைப் பயன்படுத்தி மக்களும் பயன் பெறலாம்.
‘ஓம்’ என்ற சொல்லினை எந்த குறிப்பிட்ட மதத்தோடும் சொல்ல முடியும். இது உலகில் அனைவருக்கும் சொந்தமானது.
மந்திரம் என்றால் என்ன?
மந்திரம் என்பது எழுத்து வார்த்தையால் ஆனது. இதனை உச்சரிக்கும் போது எழும் சத்தம் உடலில் ஒரு அதிர்வினை உண்டாக்க வல்லது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அதிர்வு உடலில் ஏற்படும். ‘ஓம்’ என்ற சொல்லினை அ + உ+ ம் என்ற பிரிவில் உச்சரிக்கின்றோம். அஅஅ என்று உச்சரிக்கும் போது வயிறு, மார்பு பகுதி நரம்புகளில் அதிர்வு ஏற்படும். ‘ம்ம்ம்’ என்று சொல்லும் பொழுது மூக்கு, தலை, மூளை பகுதியில் அதிர்வு ஏற்படுகின்றது.
அ+உ+ம் மூன்றினையும் இணைத்து ‘ஓம்’ என்று உச்சரிக்கும் போது வயிறு, தண்டு வடல் தொண்டை, மூக்கு, மூளை பகுதிகள் உயிர்ப்பிக்கப்படுகின்றன. ஒலியினால் உருவாகும் சக்தி இவ்விடங்களை புதுப்பித்து பாதுகாக்கின்றது.
பொதுவில் யோகா பயிற்சி செய்பவர்கள் ஓம் சொல்லும் பயிற்சியினை அன்றாடம் யோகா பயிற்சிக்கு முன்னால் மேற்கொள்ளவும். இதனால் அவர்கள் கவனத்திறன் அமைதி, ஆற்றல் திறன் கூடுவதாகவும் மன அழுத்தம் நீங்குவதாகவும் கூறுவர். சில ஆண்டுகளுக்கு முன்னால் இதற்கான விஞ்ஞான ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் ‘ஓம்’ மந்திர பயிற்சி செய்யாதவர்களை அழைத்து சில நிமிடங்கள் ‘ஓம்’ என சொல்லச் சொல்லி அதனை பதிவு செய்தனர். அந்த அலைகள் முறையற்றதாகவும், மூளையின் ஸ்திர தன்மை அற்றதையும் காட்டின.
அவர்களையே ஒரு குறிப்பிட்ட காலம் ‘ஓம்’ பயிற்சிக்கு செய்ய வைத்து பின்னர் அதனை பதிவு செய்தனர். அதன் அலைகள் சீராய், முறையாய் இருந்தன. அவர்களும் அவர்கள் கவனத்திறனும், ஆற்றலும் வெகுவாய் முன்னேறியுள்ளதனை கூறினர். மனதின் முழு அழுத்தமும் ‘ஓம்’ என்ற சொல்லின் உச்சரிப் பில் முழுவதுமாகத் தீர்வதாக ஆய்வில் அறியப்பட்டது. விஞ்ஞான ரீதியாக இது நிரூபணம் செய்யப்பட்டது.
மேலும் தொடர் விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் நடந்தன. தொடர்ந்து ‘ஓம்’ என்று சொல்லும் பயிற்சி செய்ய மனது அமைதி ஆனது, மூச்சு சீரானது. ‘ஓம்’ சொல்லும் வேகமும் அதிக நிதானப்பட்டது. இது இயற்கை மாற்றமாக ஏற்பட்டது. பல தேவையில்லா எண்ணங்கள் நீங்கின. உடல் சக்தி கூடியது.
‘ஓம்’ மூளையின் சக்தி மருந்து :
‘ஓம்’ உச்சரிக்கப்படும் பொழுது ஏற்படும் அதிர்வு வேகம் நரம்பின் மீது நல்ல தாக்குதலை ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக மூளையின் செயல்பாட்டுத் திறன் கூடுகின்றது என இதுவரை கூறியுள்ள விஞ்ஞானம் இந்த ஆய்வினை மேலும் தொடர்கின்றது. வலிப்பு நோய் மிகவும் கட்டுப்படுவதாகவும் அறியப்பட்டுள்ளது. ரத்த நாளங்கள் தடிப்பதும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது, பாதிப்புடையோர் ‘ஓம்’ சொல்வதின் மூலம் நல்ல முன்னேற்றம் பெறுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இன்சுலின் சுரப்பது கூட சீர்படுகின்றது என்கின்றனர். ஒரு சிலவற்றினை மேலும் ஆய்வு கொண்டே நிரூபிக்கப்பட உள்ளது.
இந்த ‘ஓம்’ சத்தமே வெட்ட வெளியில் சூரியினைச் சுற்றி இருப்பதாக நாசா ஆய்வு மையம் கூட கூறியுள்ளது. படிப்பு, விளையாட்டு என எந்த துறையிலும் ‘ஓம்’ நாமம் தினம் சொல்லி பழகுபவர்கள் சிறந்த திறமையினை வெளிக் கொண்டு வருவதினை அனுபவ ரீதியாக அநேக ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
‘ஓம்’ மந்திரம் சொல்வதன் பலன்கள் :
* ஓம் மந்திரம் சொல்லப்படும் போது சுற்று சூழல் சுத்தமாகின்றது.
* பாஸிடிவ் அதாவது ஆக்கப்பூர்வ அதிர்வுகள் ஏற்படுகின்றன.
* நம்மை சுற்றியுள்ள ‘ஆரா’ எனும் ஒளி வட்டம் தூய்மையாகின்றது
* தியான நிலையிலும் அதன்பின் ஆழ்நிலை தியானத்திலும் கொண்டு செல்லும்.
* உடலில் நச்சுப் பொருட்கள் நீங்குகின்றன.
* உடல் தன்னைத் தானே சிகிச்சை அளித்து சீர் செய்கின்றது.
* நினைத்த இலக்கை அடையவும், கவனத்தன்மையினை உண்டாகின்றது.
* வயதானவர்களின் குரல் வளம் காக்கப்படுகின்றது.
* தெளிவுத்தன்மை பிறக்கின்றது.
* பலர் சேர்ந்து குழுவாக இம் மந்திரத்தினை உச்சரிக்கும் பொழுது நிறைந்த சக்தி அவ்விடத்தில் உருவாகின்றது.
* வேண்டாத ஊளைச் சதை குறைகின்றது.
* சரும சுத்தமாகின்றது.
* தண்டு வடம் நிமிர்ந்து உறுதித் தன்மை பெறுகின்றது.
* ஓம் உச்சரிப்பினைக் கேட்டால் கூட அட்ரினல் அளவு குறைகிறது.
* கொலஸ்டிரால் அளவு குறைகின்றது.
* இருதய துடிப்பு படபடப்பின்றி இருக்கின்றது
* உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது
* ஸ்டிரெஸ் ஹார்மோன் அளவு கட்டுப்படுகின்றது.
* மனநிலை சீராவதால் அவரது சொல், செயல் அனைத்தும் பண்பானதாக இருக்கின்றது.
* உடலும், மூட்டுகளும் மென்மையானதாக இருக்கின்றன.
* அமெரிக்க க்ளீவ்லண்ட் பல்கலைக்கழகம் மேற் கூறிய பலன்களை ‘ஓம்’ மந்திர ஆய்வு முடிவுகளாக வெளி யிட்டுள்ளன.
ஓம் மந்திரம் சொல்லும் முறை :
* வீட்டிற்குள் ஒரு அமைதியான இடத்தினை தேர்வு செய்யுங்கள்.
* ஒரு சிறிய பாய் ஒன்றினை அமர பயன்படுத்துங்கள்.
* 15-20 நிமிடம் இதற்கென தனி நேரம் ஒதுக்குங்கள்
* சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்து உங்கள் மூச்சினை கவனியுங்கள். கண்கள் மென்மையாய் மூடி இருக்கட்டும்.
* பின் ‘ஓம்’ என்ற சொல்லினை அ, உயரம் என்ற முறையில் சத்தமாக சொல்லுங்கள்.
* முடிந்த வரை கண்களை மென்மையாய் மூடி மூச்சினை கவனியுங்கள்.
* தினமும் இதனை செய்யுங்கள்.
* ஓம், ஆம் (AUM) என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
* கர்ப்பிணி பெண்கள் ‘ஓம்’ சொல்வதன் மூலம் அவர்கள் ஸ்டிரெஸ் நீங்குவதுடன் அவர்களுக்கு அமைதியான குழந்தைகள் உருவானதாக கூறப்படுகின்றது.
* குழந்தைக்கு தாயின் குரல் தெளிவாக பதிவாகின்றது.
* கர்ப்பிணி பெண்கள் அமைதி படுவதன் மூலம் சுகப்பிரசவம் ஏற்படுகின்றது.
* சொல்ல முடியவில்லை என்றால் ‘கேசட் கேட்பதும் நல்லதே என்று அறிவுறுத்தப்படுகின்றது.
* கருப்பையில் இருக்கும் குழந்தை ஓம் வடிவில்தான் உள்ளது என்பதே ஓம் மந்திர சொல்லுக்கும், மனித வாழ்விற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை உணர்த்தும்.
இன்றே இப்பயிற்சியினை ஆரம்பியுங்கள்

http://kathiravan.com/93357

No comments:

Post a Comment