காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்ப்பறன்றோ
நாட்டார் நமைமறித்து நகைபுரியப் பார்த்தாலும்
காட்டானை மேலேறி என் கண்ணம்மா
கண்குளிரப் பாரேனோ.
--அழுகணி சித்தர்.
தன்னை வெளிக்காட்டாத அறிவைப் பற்றிக்கொண்டு,
வீடுபேறு எனும் கடை நிலையை அடைய முயற்சி
செய்யும்போது, மயக்க நிலையில் உள்ள ஐம்புலன்கள்
எங்களை மீறி, உன்னால் வீடுபேறு அடையமுடியுமா
என்று தடுக்க முயற்சி மேற்கொள்ளும். இருந்தாலும்
நான் அறிவின் துணையோடு நிச்சயமாக வீடுபேறு
அடைந்தே தீருவேன். வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment