Tuesday, April 26, 2016

பட்டா மாறுதல் நாம் தமிழர் கட்சி

அனைவருக்கும்
வணக்கம்!

என்
பெயர் பிரகாஷ்.
திருப்பூர்
பி.என் ரோடு
ராமையா காலணி யில் வசிக்கிறேன்.

என் இடத்திற்கு பட்டா மாறுதல் செய்திட  vao 3000ரூ லஞ்சமாகக் கேட்டார்.

அப்போது என் நண்பர் துரை என்பவரிடம் கூற அவர்

" கையூட்டுஊழல் ஒழிப்பு பாசறை"
பற்றியும் அவர்கள்
"லஞ்சம் தராமல் "

அரசு அலுவலகத் தேவைகளைபெற உதவுவதாகவும் கூறினார்.

அதன்படி 15.04.16அன்று

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை (நாம் தமிழர் கட்சி)
அலுவலகம்
சென்று அதன் ஒருங்கிணைப்பாளர்
நேர்மை மிகு செ.ஈசுவரன் அவர்களிடம் இது பற்றி கூற

அவரோ என்னிடம் விபரங்களை கேட்டு விட்டு

சரி நீங்கள் போய் அவர் கேட்ட பணத்தை கொடுத்து பட்டா மாறுதலை பெற்றுக்கொண்டு வாங்க

அப்புறம் அந்த பணத்த திருப்பி வாங்கிக்கலாம் என்று  கூறினார்.

எனக்கோ ஏன்தான் இங்கு வந்தோம் என்ற எண்ணி கொண்டு வந்துவிட்டேன்.

அதன் பின் மறுநாள் 16.04.16 அன்று 3000ரூபாய் vaoவிடம் கொடுத்தேன்.

அதைப் பெற்ற உடனேயே அவர் என்னை 20ந்தேதி வரச்சொன்னார்.

அதன்படி 20.04.16 அன்று நான் vao அலுவலகம் சென்றதும்

தயாராக இருந்த எனது  பட்டா மாறுதலை vao என்னிடம் வழங்கிவிட்டார்.

பிறகு அரைமனதுடன்  நேற்று (25.04.16) காலை

மீண்டும்
மேற்படி 
நேர்மை மிகு செ.ஈசுவரன் அவர்களிடம் சென்று இது பற்றி கூறினேன்.

என்னிடம் Vao யின் தொடர்பு
எண்ணை வாங்கியவர்

அவருக்கே உரித்தான பாணியில் அவரிடம் பேச

Vao மாலை யில் வந்து பணத்தை பெற்று க்கொள்ளுமாறு கூறினார்.

அதன்பேரில் நேற்று மாலை நான் vao அலுவலகம் சென்ற போது எனக்கு நம்பிக்கை யே இல்லை.

"ஆச்சரியம் ஆனால் உண்மை"

இவரா நம்மிடம் பணம் வாங்கியவர் என்பது போல் எண்ணும் வகையில்

என்னை பலமுறை சார் என அழத்துக் குழைந்து

மிரண்டு போனவராக தெரிந்த vao
3000ரூபாயை என்னிடம் திருப்பி தந்தார்.

உண்மையிலேயே இப்படியொரு அமைப்பு இருப்பது கண்டு உளமாற மகிழ்வுற்றேன்.

நான் பெற்ற இன்பம் பெறுக வையகம்

என்பதனால்

இச்சேவை தேவைப்படுவோர்

"கையூட்டு (லஞ்சம்)
ஊழல் ஒழிப்பு பாசறை "

(நாம் தமிழர் கட்சி)
யைத் தொடர்பு கொள்ள

82200 44957
90437 44957
99409 93488
93606 98515
98426 78006

இவர்கள் சொல்வது போல

இனி மாற்றம்
என்பது

சொல்! அல்ல! செயல்!!

1 comment: