Monday, April 18, 2016

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்..!

பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம் என்பதை நிறையப் பேர் மறந்து போய் விட்டார்கள். ஆனால் மெடிக்கல் ஷாப்பிலும், டாக்டர்களிடமும் போய் வாங்கி சாப்பிடும் மருந்துகளை விட இந்த அனுபவ மருந்துகள் கொடுக்கும் பலன்கள் அலாதியானவை.

அனைவருக்கும் சாதாரணமாக வரும் காய்ச்சல், இருமல், தலைவலி, உடல் வலி உள்ளிட்ட சில பொதுவான பிரச்சினைகளுக்கு நமது வீட்டிலேயே எப்போதும் மருந்து தயாராக இருக்கிறது. நிறையப் பேருக்கு இது தெரியாது. தெரி்நதவர்கள் அனைவரிடத்திலும் கூறும் நல்ல பழக்கத்தை வைத்துக் கொள்வதில்லை.
அஜீரணமா, வயிற்று வலியா, தலைவலியா, எந்த உபாதையாக இருந்தாலும், நம்மூர் பாட்டி வைத் தியத்துக்கு ஈடே இல்லை.

நாம தான், கொஞ்சம் தலை வலி என்றாலும், உடனே ஆங்கில
மாத்திரையை தேடுகிறோம்; ஆனால், அமெரிக்காவில், இப்போதெல்லாம், நம்மூர் பாட்டி வைத்தியம் தான் பிரபலமடைந்து வருகிறது.

கையடக்கமான பாட்டில்களில் இஞ்சி, கற்றாழை, பூண்டு போன்றவற்றை பொடியாகவும், சாறாகவும் தயார் செய்து விற்கின்றனர்.

உடல் வலி சிகிச்சை நிபுணர் ஜாக்கப் டிடெல்பம், "1...2...3... போச் வலி' என்று, பாட்டி வைத்தியத்தைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு மருத்துவ புத்தகமே, எழுதி விட்டார்.

"அலோபதிக் (ஆங்கில) மருத்துவத்தில் இல்லாத மருந்துகளே இல்லை. அவற்றிலும் ஒரே மாதிரியான சத்துக்கள், ரசாயனங்களை செயற்கையாக வைத்துத் தான் தயாரிக்கிறோம். ஆனால், மூலிகை, தாவர பொருட்களில் இந்த சத்துக்கள், ரசாயன தன்மைகள் இயற்கையாக கிடைக்கும். அதனால், நான் இயற்கை மூலிகை மருந்துகளை என் நோயாளிகளுக்கு கொடுக்கிறேன்!' என்றார் டாக்டர் ஜாக்கப்.

"உடலில் எந்த கோளாறையும், வலிகளையும் போக்கும் வல்லமை படைத்தது ஐந்து இயற்கை மூலிகை பொருட்கள் தான்!' என்றும் அவர் கூறுகிறார்.

இஞ்சி : மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூட்டை பிடித்துக்கொண்டு அவஸ்தைப்பட வேண்டாம்.

கற்றாழை: சூட்டுக்கட்டி, தீக்காயம் என்றால், உடனே டாக்டரை பார்க்க ஒடுகிறோம். அவர், "ஆயின்ட் மென்ட்' தருவார்; "ஆன்டி பயாடிக்' மாத்திரை தருவார். ஆனால், பல ஆண்டுக்கு முன் இதெல்லாம் இருந்ததா? அப்போ தெல்லாம் கற்றாழை சாறு தான். அதைக் காயத்தில் போட்டால், அடுத்த நாளே வடு காணாமல் போய்விடும்.

"இப்போது பலருக்கும் இதை, "ஆலுவேரா' என்று தெரியுமே தவிர, கற்றாழை தான் அது என்று புரியாது; முகம் பளபளப்பது முதல் சரும அழகுக்கும், "ஆலு வேரா' ஆயின்ட்மென்ட், ஜெல் என்று ஏதேதோ வந்து விட்டது. கடைகளில் அழகான பாட் டில்களில் அடைத்து தரு வதை பயன்படுத்துவதை விட, நீங்களே, கற்றாழையை வளர்க்கலாம்; தேவைப்படும்போது பயன்படுத்தலாம்!' என்றும் கூறுகிறார் ஜாக்கப்.

மஞ்சள்: உடலில் எந்த வீக்கமாகட்டும், வயிற்று கோளாறாகட்டும் அவற்றை நீக்கும் இயற்கை தன்மை கொண்டது மஞ்சள். சாப்பாட்டில், சிற்றுண்டியில், அன்றாடம் 900 முதல் 1800 மில்லி கிராம் வரை மஞ்சளை பயன்படுத்த வேண்டும்.

குங்கிலியம்: மூட்டு வலி, உடல் வலி போக்க அருமையான நிவாரணி, குங்குகிலியம் இலையின் சாறு. இஞ்சி சாறு போல, இதையும் சாப்பாட்டில் சேர்க்கலாம்; தனியாகவும் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு சாப்பாட்டிலோ, தனியாகவோ மூன்று முறை இந்த சாறை பயன்படுத்தினால், எந்த எலும்புப் பிரச்னையும் பின்னாளில் அண்டாது.

வினீகர்: ஒரு கப் ஆப்பிள் வினீகரை குடித்து வந்தால், உடலில் எந்த வலியும் வராது. தண்ணீரிலோ, மற்ற பானங்களிலோ இரண்டு ஸ்பூன் வினீகரை போட்டு சாப்பிட்டு வரலாம். வலி உள்ள இடங்களில், கர்சீப் மூலம் வினீகரை தொட்டு தடவினால் போதும், வலி போய்விடும். காயத்தை ஆற்றும் அரிய குணம் இதற்கு உள்ளது.

வெங்காயத்தை நறுக்கும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத ஆவி வரும். இந்த ஆவியை நெருப்புச் சுட்ட புண்கள் மீது படும்படி வைத்தால் விரைவில் புண் ஆறும். வெங்காயச் சாற்றில் அமிலத் தன்மை இருப்பதே இதற்குக் காரணம்.

தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும்பங்கு வகிக்கிறது.

கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் சாதாரணமாக வரக்ககூடிய கால் நோயான சேற்றுப்புண்ணிற்கு கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறும்.

தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

துளசி நீர் மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

தொண்டைப் புண்ணுக்குப் பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் முற்றிலும் குணமாகும்.

அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. சாப்பிட்டவுடனே பயனைக் காணலாம்.

சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து அதில் நூறு மில்லி தேங்காய் எண்ணெய்யை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் சொத்தை மறையும்.

நெல்லி இலை, மருதோன்றி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து ஒரு சட்டியிலே போட்டு தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வரவேண்டும். வாய் வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.

வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.

வெங்காயம் ஓர் அருமருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்படும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.

வாழைப்பழங்களில் சோடியம், கால்ஷியம், பொட்டாஷியம் போன்ற பலவகைச் சத்துக்கள் உள்ளன. ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழங்கள் வீதம் சாப்பிட்டு வந்தால் இருதய அழுத்தம் ஏறாமல் சீராக நடைபெற்று வரும்.

கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். கறிவேப்பிலை இரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.

வயிற்றிலுள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் உண்டாகிறது. இந்தக் குடல் புண்தான் அல்சர் எனப்படுவது. இந்த அல்சர் குணமாக வேண்டுமானால் பச்சை வாழைப்பழத்தைச் சாப்பிட்டு வரவேண்டும். குடல்களில் பழுதுபட்ட மெலிசான சவ்வுத் தோல்களைச் சீக்கிரமாக வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடுகிறது பச்சை வாழைப்பழம்.

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.

ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக் கிருமிகள் செத்துப் போகும். பற்கள் எனாமல் சிதையாமல் இருக்கும்.

மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும்.

நுனா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் நாவறட்சி அடங்கும்.

வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். மூளை உற்சாகத்துடன் இருக்கும்.
வெ‌ற்‌றிலையை‌ப் ‌பி‌ழி‌ந்து சாறு எடு‌த்து தே‌ன் கல‌ந்து அரு‌ந்‌தி வர ‌தீராத இரும‌ல் குணமாகு‌ம்.

அ‌திகாலை‌யி‌ல் வெறு‌ம் வ‌யி‌ற்‌றி‌ல் வே‌ப்ப‌ங்‌கொழு‌ந்தை ‌தி‌ன்று வர வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ள்ள ‌
கிரு‌மிக‌ள் ஒ‌ழி‌யு‌ம்.

இர‌ண்டு கர‌ண்டி க‌றிவே‌ப்‌பிலை சா‌ற்றை ஒரு ட‌ம்ள‌ர் மோ‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்தா‌ல்
அ‌ஜீரண‌ம் ‌நீ‌ங்கு‌‌ம்.

ப‌ப்பா‌ளி‌‌த் பழ‌த் து‌ண்டை ப‌ல் வ‌லி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் அட‌க்‌கி வை‌க்க ப‌ல் வ‌லி ‌தீரு‌ம்.

ப‌ல் சொ‌த்தையான இட‌த்‌தில‌் ‌கிரா‌ம்பை நசு‌க்‌கி வை‌த்து, வா‌யி‌ல் வரு‌ம் உ‌மி‌ழ்‌நீரை
வெ‌ளியே‌ற்‌றி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ல் ப‌ல் சொ‌த்தை காணாம‌ல் போகு‌ம்.

வா‌ந்‌தி எடு‌த்தவ‌ர்களு‌க்கு, வெறு‌ம் ‌சீரக‌த்தை வறு‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க வை‌த்த ‌
சீரக கஷாய‌‌த்தை‌க் கொடு‌க்க உடனடியாக வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம்.

அவரைப் பிஞ்சை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, ரத்த அழுத்தம் விரைவாக குறையும்.

தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும்.

மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.

மஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட
நகச்சுற்று குணமாகும். அல்லது கொழுந்து வெற் றிலையுடன் சுண் ணாம்பு சேர்த்தும்
கட்டலாம்.

வேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து, வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை
நீங்கும். வேப்ப எண்ணெயை காய்ச்சி,சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.

வாகை மர‌த்‌தி‌ன் பல‌ன்க‌ள் பல உ‌ள்ளன. அதனை‌க் கொ‌ண்டு செ‌ய்யு‌ம் கை வை‌த்‌திய‌ங்க‌ள்
ப‌ற்‌றி அ‌றியலா‌ம்.
வாகை இலையை அரை‌த்து க‌ண் இமைக‌ளி‌ன் ‌மீது வை‌த்து க‌ட்டி வர, க‌ண் ‌சி‌வ‌ப்பு,
க‌ண் எ‌ரி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

வாகை‌ப் ப‌ட்டையை பொடி செ‌ய்து அரை ‌கிரா‌ம் முத‌ல் ஒரு ‌கிரா‌ம் அளவு வரை
வெ‌‌ண்ணெ‌யி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர உ‌ள்மூல‌ம், ர‌த்த மூல‌ம் குணமாகு‌ம்.

வாகை மர‌ப்ப‌ட்டையை தூளா‌க்‌கி மோ‌ரி‌ல் கல‌ந்து கொடு‌‌த்து வர பெரு‌ங்க‌ழி‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

வாகை மர‌த்‌தி‌ன் ‌விதை‌யி‌ல் இரு‌ந்து பெ‌ற‌ப்படு‌கி‌ன்ற எ‌ண்ணெ‌ய், கு‌ஷ‌்ட நோ‌‌ய் பு‌ண்களை
குணமா‌க்கு‌ம் த‌ன்மை கொ‌ண்டது.

அடிப‌ட்ட காய‌த்‌தி‌ன் ‌மீது வாகை மர‌ப்ப‌ட்டையை பொடி‌த்து தூவ ‌விரை‌வி‌ல் காய‌ம் ஆறு‌ம்.

க‌ட்டிக‌ளு‌க்கு எ‌ளிதான கை வை‌த்‌திய‌ம்

‌சில குழ‌ந்தைகளு‌க்கு அடி‌க்கடி க‌ட்டிக‌ள் வ‌ந்து தொ‌ல்லை கொடு‌க்கு‌ம். இத‌ற்கு எ‌ளிதான கை
வை‌த்‌திய‌ம் உ‌‌ள்ளது.

வாகை ‌விதையை பொடி செ‌ய்து பா‌லி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர நெ‌றி‌க்க‌ட்டிக‌ள் ம‌ற்று‌ம்
நெ‌றி‌க்க‌ட்டிகளா‌ல் ஏ‌ற்படு‌ம் கா‌ய்‌ச்ச‌ல் குணமாகு‌ம்.

வாகை மர ‌விதையை ‌நீ‌ரி‌ல் உரை‌த்து பூ‌சி வர, க‌ண் க‌ட்டிக‌ள் கரையு‌ம். இதனையு‌ம்
நெ‌றி‌க்க‌ட்டிக‌ள் ‌மீது‌ம் பூசலா‌ம். ‌‌விரை‌வி‌ல் ந‌ல்ல குண‌ம் பெறலா‌ம்.

வாகை‌ப் பூ‌வினை அரை‌த்து‌ப் ப‌ற்று‌ப் போ‌ட்டு வர, க‌ட்டிக‌ள், தடி‌ப்பு, ‌வீ‌க்க‌ம் போ‌ன்றவை
குணமாகு‌ம்.

மேலு‌ம், க‌ட்டிக‌ள் ‌மீது ம‌ஞ்ச‌ள் வை‌த்து ப‌ற்று‌ப் போ‌ட்டு வர ‌விரை‌வி‌ல் க‌ட்டிக‌ள் உடையு‌ம்.

க‌ண் இமைக‌ளி‌ல் க‌ட்டிக‌ள் வ‌ந்தா‌ல், கை ‌விரலை ஒ‌ன்றோடு ஒ‌ன்று தே‌ய்‌த்து அதனா‌ல்
ஏ‌ற்படு‌ம் சூ‌ட்டை உடனடியாக ‌க‌ண் இமைக‌ள் ‌மீது வை‌க்க ‌விரை‌வி‌ல் க‌ட்டி உடையு‌ம்.

அகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல
சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது
சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத்
தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது
பயிரிடப்படுகிறது.

தோற்றம் :

அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும்.
மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும்
வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட
கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக்
கொண்டது செவ்வகத்தி எனவும் அழைக்கப்படும்.

அடங்கியுள்ள பொருட்கள் :

ஈரப்பதம் _ 73 சதம், புரதச்சத்து _ 83 சதம். தாதுஉப்புக்கள் _ 3.1 சதம்,
நார்ச்சத்து _ 2.2 சதம், மாவுச்சத்து _ 12 சதம், கொழுப்புச்சத்து _ 1.4 சதம்
என்ற அளவில் சத்துக்கள் உள்ளன. தாதுஉப்புக்களில் சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ்,
இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை உள்ளன. வைட்டமின் _ ஏ, தயாமின்,
நிபோபிளேவின், நிக்கோடினிக் அமிலம், வைட்டமின் _ சி போன்றவை அடங்கியுள்ளன.

மேலும் மரப்பட்டையில் டானின், பிசின் உள்ளது.
குணங்கள் :

இதற்கு நச்சை நீக்கும் குணமுள்ளதாகையால், பொதுவாக மருந்துண்ணும் காலங்களில்
இதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எப்படிப் பயன்படுத்தலாம்?

இலையை கீரையாக நறுக்கி வதக்கி உண்ணலாம், குழம்பிலிட்டு பயன்படுத்தலாம்.
பூக்களையும் வறுத்து உண்ணலாம், பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம். இலைச்சாறை
தேனில் கலந்து அருந்தலாம்.

மருத்துவப் பயன்கள்

பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் மாறும்

அகத்தி இலைச்சாறை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில்
இருமல், இரைப்பு மாறும்.

இலைச்சாறை உறிய, தலைநீர் இறங்கும்.

அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாறோடு, இதே அளவு தேன்
கலந்து அருந்த, வயிற்றுவலி தீரும்.

இலைகளை அரைத்து அடிபட்ட புண்கள் மேல் கட்டிவர புண் ஆறும்.

அகத்திக்கீரை பொடியை நீர் அல்லது பாலில் கலந்து குடித்துவர, நாள்பட்ட
வயிற்றுவலி மாறும்.

அகத்திக்கீரை பால்சுரப்பைக் கூட்டும்.

இக்கீரையை உணவில் சேர்த்து வர, மலச்சிக்கல் தீரும்.

பூக்களைப் பிழிந்து சாறு எடுத்து நெற்றிப் பொட்டில் பூசிட, தலைவலி மாறும்.

அகத்திப்பூ சாறு ஒரு கரண்டி எடுத்து, இதோடு ஒரு கரண்டி தேன் கலந்து சாப்பிட
இருமல், சளி தீரும்.

அகத்திக்கீரை சாறு இரு துளி மூக்கில் விட தும்மல், ஜலதோஷம் தீரும்.

அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர், ஜலதோஷம் தீரும்.

அகத்தி மரப்பட்டை கஷாயம், காய்ச்சலின்போது உள்ளுக்குக் கொடுக்கப்படுகிறது.

வேர்ப்பட்டையை அரைத்து வாதவலி மேல் பூசிவர வலி மாறும்.

அகத்திக்கீரை உடலிலுள்ள துர்நீரை வெளியேற்றும்.

இக்கீரை பித்த நோயை நீக்கும்.

இக்கீரை, உடல் சூட்டைத் தணிக்கும்.

வறட்டு இருமல்...

வறட்டு இருமலாக இருக்கிறது. கொஞ்சூண்டு தேனை (ஒரு ஸ்பூன்) எடுத்து அப்படியே வாயில்
விடுங்கள். அடுத்த சில நிமிடங்களில் இருமல் காணாமல் போய் விடுவதைப் பார்த்து
ஆச்சரியப்படுவீர்கள். குழந்தைகளுக்கு இந்த நாட்டு மருந்து செமத்தியான பலனைக் கொடுக்கும்.

இன்னும் கொஞ்சம் விரிவான மருந்து வேண்டும் என நினைப்போர் - தேன், எலுமிச்சம் பழச்
சாறு, இஞ்சிச் சாறு ஆகியவற்றை கலக்கி சாப்பிடலாம். சரசரவென இருமலும், சளியும் ஓடிப்
போய் விடும்.

தேனீ கொட்டிடுத்தா...

தேனீக்கள் கொட்டினால், அய்யோ உயிர் போச்சே என்றுதான் பலரும் அலறுவார்கள். அதற்கு
அவசியமே இல்லை. நாம் அனைவருமே பல் துலக்கும் பழக்கம் கொண்டவர்கள். எனவே
கட்டாயம் டூத்பேஸ்ட் வீட்டில் இருக்கும். அந்த பேஸ்ட்டை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில்
அப்படியே ஸ்மூத்தாக தடவுங்கள். அடுத்த சில நொடிகளில் வலி பறந்து போய் விடுவதைப்
பார்ப்பீர்கள். டூத் பேஸ்ட்டில் இருக்கும் அமிலத்தை நிலைப்படுத்தும் வேதிப்பொருள் மற்றும்
எரிச்சலைக் குறைக்கக் கூடிய தன்மையே இதற்குக் காரணம்.

காது வலிக்குதா ...

அம்மா காது வலிக்குது என்று அவ்வப்போது குழந்தைகள் அலறுவது அனைத்து வீடுகளிலும்
சாதாரண விஷயம்தான். ஆனாலும், குழந்தைகளுக்கு காது வலித்து அழும்போது நாம்
நிம்மதியாக இருக்க முடியாதே. அப்படிப்பட்ட நேரங்களில் சற்றும் பதட்டப்படாதீர்கள். வீட்டில்
ஆலிவ் எண்ணை இருக்கிறது. இல்லாவிட்டால் அதை முதலில் வாங்கி வைத்துக்
கொள்ளுங்கள். ஒரு சிரிஞ்சை எடுத்து அல்லது இதற்கு சமமான ஒன்றை (சுத்தமாக இருப்பது
அவசியம்) எடுத்து அதன் மூலம் 2 அல்லது 4 சொட்டு (2 வயது குழந்தைகளுக்கு) இதமான
சூட்டில் உள்ள ஆலிவ் எண்ணையை குழந்தையின் காதில் மெல்ல விடுங்கள். பெரிய
குழந்தைகளாக இருந்தால் அதிகபட்சம் 10 சொட்டு வரை விடலாம். காது வலி சட்டென பறந்து
போய் விடுமாம். கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையம் இதைப் பரி்ந்துரைக்கிறது.

பெருவிரல் நகத்தில் பூஞ்சைத் தொற்றா..

பெரு விரல் நகத்தில் பூஞ்சைத் தொற்று வந்து நகம் மஞ்சள் கலராக மாறி அசிங்கமாக
இருக்கிறதா. கவலையே வேண்டாம். விக்ஸ் வேப்போரப் உங்களுக்குக் கை கொடுக்கும். சளி,
ஜலதோஷத்திற்கு மட்டும் வேப்போரப் உதவும் என்றில்லை. இந்த விரல் பூஞ்சைத்
தொற்றுக்கும் அது அருமருந்தாக உள்ளது.

விக்ஸ் வேப்போரப்பில் தைமால் உள்ளது. இது பூஞ்சைத் தொற்றை விரட்டும் நல்ல
மருந்தாகும். பாதிப்படைந்த விரல் பகுதியில் வேப்போரப்பை மெதுவாக தடவி வாருங்கள்.
பூஞ்சைத் தொற்று போய் விரல் நகம் அழகாவதை காண்பீர்கள்.

வெயில் புண்ணால் அவதியா...

கடும் வெயிலில் உடல் புண்ணாகி தகிக்கிறதா. வினீகரை வைத்து அதை விரட்டலாம். கடும்
வெயில் நாடான இந்தியா போன்றவற்றில் வெயில் காலங்களில் வெயிலால் ஏற்படும்
தீப்புண்கள் சகஜம். அப்படிப்பட்ட கஷ்டம் வரும்போது வினீகரைத் தடவி வந்தால் புண் போய்
புன்னகை தோன்றும் உங்கள் மேனியில். ஓட்மீல் பேஸ்ட்டும் கூட நல்ல பலனைக்
கொடுக்குமாம்.

பூச்சி கடித்தால் நெய்ல் பாலிஷ்...

பூச்சி கடித்தால் உடனே பயப்படாமல் வீட்டில் இருக்கும் நெய்ல்பாலிஷ், சுடச் சுட நீரை வைத்து
அதை பூச்சி கடித்த இடத்தில் தடவலாம் அல்லது ஒத்தடம் கொடுக்கலாம். நீங்கள் பயன்படுத்தும்
நெய்ல் பாலிஷ் சுத்தமானதாக இருக்க வேண்டியது அவசியம். இதைத் தடவினால் உடனடியாக
வலியும், எரிச்சலும் குறையுமாம். இருப்பினும் வெட்டுக் காயம் போன்றவை ஏற்படும்போது
இதைத் தவிர்ப்பது நலம்.

தலை முடி பிசுபிசுப்புக்கு...

பஸ், ரயில் போன்றவற்றில் ஜன்னலுக்கு அருகில் உட்கார்ந்து செல்லும்போதும், பைக்
போன்றவற்றை ஓட்டிச் செல்லும்போதும் தலைமுடி சிக்காகி, பிசுபிசுப்படைவது சகஜம். சிலர்
முறையாக தலைக்கு குளிக்காமல் விட்டாலும் இந்த பிசுபிசுப்பு ஏற்படுவது இயல்பு.
இப்படிப்பட்டவர்கள் கவலைப்படத் தேவையில்லை. வீட்டில் உள்ள பேபி பவுடர் அல்லது
டால்கம் பவுடரை எடுத்து தலைமுடியில் வைத்து நன்றாக தேய்த்தால் போதும். முடி
பொலபொலவென தெளிவாகி விடும். பிசுபிசுப்பும் போய் விடும்.

பித்த வெடிப்புக்கு

கடுகை சிறிது தண்னீர் விட்டு அரைத்து (அ) இலஞ்சூடான கடுகுஎண்ணெய்யை
கால்பாதத்தில் தடவி உப்பு கலந்த இலஞ்சூடான தண்ணீரில் தினமும் 5 நிமிடம்
கால் பாதத்தை ஊற வைத்தால் பித்த வெடிப்பு மறையும்.

இதெல்லாம் வெறும் அனுபவத்தால் மட்டும் கூறப்பட்ட மருத்துவம் அல்ல. உலகப் புகழ்
பெற்ற ஆய்வகங்கள், பல்கலைக்கழக ஆய்வகங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம்
பரிந்துரைக்கப்பட்டவை.

முயற்சித்துப் பாருங்களேன் ...

http://reghahealthcare.blogspot.in/2010/12/blog-post_04.html

No comments:

Post a Comment