Wednesday, April 20, 2016

கல்யாணமுருங்கை

கல்யாணமுருங்கை(முள்ளு முருங்கை ) கருப்பைக் குறை நீக்கி என்பதால் தான் கல்யாணமுருங்கை என்ற பெயர் பெற்றுள்ளது. இந்தியா, அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இதன் இலை துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது.

கருப்பைக் குறை நீக்கியாகவும், கபம், இருமல், கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் புண் , வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்ட செய்யும் தன்மை உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

மலட்டுத்தன்மை நீங்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் விட்டு வதக்கிசாப்பிட்டுவர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். பருவமடையா பெண்களுக்கு கருப்பைக் குறை நீக்கி மாதவிலக்குத் தூண்டல் செய்யும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள்,அதிக ரத்தபோக்கு இருப்பவர்கள், கல்யாண முருங்கையை கீரை போல சமைத்து மாதவிலக்கின் முன்பு 4 நாட்கள் சாபிட்டுவர வலி குறையும் .

முருங்கை கீரையை விட எளிதில் ஜீரணம் ஆகும் அதில் உள்ள எல்லா சத்துக்களும் உள்ளது . மேற்கண்ட நோய்களுக்கு அரிசி மாவுடன் கல்யாண முருங்கை சேர்த்து அரைத்து தோசை சுட்டு சாப்பிடலாம்.

மருத்துவப்பயன்கள் :- இது துவர்ப்பும் கசப்பும் கலந்த சுவையுடையது. இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு, ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றி யாகவும், விதை மலமிளக்கி குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லி 10 நாள் சாப்பிட வலி தீரும்.

இதன் இலைச்சாறு 15 மி.லி. ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

இலைச் சாறு 50 மி.லி. தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

இதன் இலைச்சாறு நாளும் 50 மி.லி. 40 நாள் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சில் குணமாகும். உடலும் இளைக்கும்.

இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

சுவலாசகாசம் என்பது ஆஸ்துமா, இலைச் சாறு 30 மி.லி.யுடன் பூண்டுச்சாறு 30 மி.லி.சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.

60 மி.லி.இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலை அருந்த பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

இலைச் சாறு, தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி சிரங்கு தீரும்.

இலைச்சாறு 10 மி.லி.யுடன் வெந்நீர் 10 மி.லி. கலந்து குழந்தைக்கும் கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும்.

வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மி.லி. பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மி.லி. வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.

சாறு 1 தேக்கரண்டி மோரில் கலந்து குடிக்க நீர்தாரை அழற்சி, நீர் எரிச்சல் தீரும்.

இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

இந்த மரம் சாமி கொடுத்த வரம். கன்னிப் பொண்ணுகளுக்கு மாதவிடாய் காலத்துல வவுத்து நோவு, உதிரப்போக்குனு நிறைய வலி இருக்கும். சிலருக்கு வரவேண்டிய  நாள்ல மாதவிடாய் வராமக் கஷ்டப்படுத்தும்.  இது மாதிரியான பிரச்னை உள்ளவங்க கல்யாண முருங்கை இலையைக் கசக்கி சாறெடுத்து மாதவிடாய் வருவதற்கு முன்னாடி மூணு நாள், வந்ததுக்கு அப்புறம் மூணு நாள் காலையில வெறும் வயித்துல இந்தச் சாறைக் குடிக்கணும்.

இந்த வைத்தியத்தை தொடர்ந்து மூணு மாசம் செஞ்சு வந்தா, குழந்தைப்பேறு இன்மைகூட நீங்கி கரு தங்கும். இப்படி குழந்தைப் பாக்கியத்துக்கு உத்தரவாதமா இந்த மரம் இருக்கிறதால, இதை அரச மரத்துக்குச் சக்களத்தின்னும் செல்லமாச் சொல்லுவாங்க!'' எதார்த்தமாய் பேசினார்  பாட்டி!

'கல்யாண முருங்கை குழந்தைப்பேறு அளிக்குமா?’ - ஆச்சர்யக் கேள்வியை சித்த மருத்துவர் மோகன ராஜிடம் கேட்டோம்.

''நிச்சயமா! குழந்தைப் பேறுக்கு இந்த மரம் ஒரு வரம்! இந்த மரத்து இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் பெண்களுக்கு கருத்தரிப்பது தொடர்பான தடைகள் நீங்கி கருமுட்டை அதிக அளவில் உற்பத்தியாகும். இந்த மரத்தின் இலையை நறுக்கி, அதோடு வெங்காயம், தேங்காய் மற்றும் நெய் சேர்த்து வதக்கி அரைத்து ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பிட்டு வந்தால், நன்றாகத் தாய்ப்பால் சுரக்கும். இலையுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிக் குளித்தால், சொறி, சிரங்கு குணமாகும்.

சளி, வயிற்றுப் பூச்சித் தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு இந்த இலையுடன் கல் உப்பை சேர்த்து அரைத்துக் கொடுக்க, வாந்தி வாயிலாகவும், காலைக்கடன் கழிக்கும்போதும் கிருமி, சளி வெளியேறிவிடும்.

இந்த இலைச்சாற்றை தொடர்ந்து அருந்தி வந்தால், உடல் பருமனும் குறையும். இதனுடைய பட்டை பாம்புக் கடிக்கு நல்ல மருந்து!'' என கல்யாண முருங்கையின் மகத்துவங்களை விவரித்தார்.

தோட்டத்துக்கு மட்டும் அல்ல... மக்களின் வாட்டம் நீக்கவும் கைகொடுக்கும் மகத்தான மரம் கல்யாண முருங்கை!
கல்யாண முருங்கையின் மருத்துவப் பயன்கள்

2. கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து அரைத்துஅதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.

3. கல்யாண முருங்கை இலையுடன், ஊற வைத்த வெந்தயத்தை ஒருஸ்பூன் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், உடல் சூடு,வெள்ளைப்படுதல், வெட்டைச்சூடு போன்ற குறைபாடுகள் தீரும்.

4. கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்துஅரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல்குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

5. கல்யாண முருங்கை இலையுடன் ஓமம், வாய்விளங்கம்இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்த¡ல்,அதிகாலையில் மலம் தாராளமாகக் கழியும்.

6. கல்யாண முருங்கை இலையை கருப்பு எள் ஊற வைத்த தண்ணீரில்அரைத்து, காலை மாலை இரு வேளையும் சாப்ப¢ட்டால் தாமதித்தமாதவிலக்கு சீராகும்.

7. கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசிஇலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் த¡ய்ப்பால் அதிகமாகச்சுரக்கும்.

8. கல்யாண முருங்கை இலையுடன் கசகசா, உளுந்து இரண்டையும் மாதுளம் பழச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ச¡ப்பிட்டால் ஆண்மைபெருகும். காமம் அதிகரிக்கும்.

9. கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்துப்பூசினால், படை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

10. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டுஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகைகுணமாகும்.

1 comment:

  1. ஆஹா அற்புதம், மிக்க நன்றி.

    ReplyDelete