ஓஷோவின் தியான முறை:
சுவாசத்தை கவனித்தல்:
எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை. எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். இது உலகம் முழுவதும் பரவட்டும். இதை சுவாசத்தை கவனித்தல் என நான் அழைக்கிறேன், இது மிகவும் எளிய முறை.
எப்போது – நீ அமைதியாக அமர்ந்திருக்கக் கூடிய எல்லா நேரங்களிலும், ரயிலிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ பயணம் செல்லும் சமயத்தில் இந்த தியானத்தை செய் .
காலம் – 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.
முதல் படி – உனது கண்களை மூடி உனது சுவாசத்தை கவனி. உள்ளே செல்லும்போது நீயும் அதனுடன் உள்ளே செல், வெளியே வரும்போது நீயும் அதனுடன் வெளியே வா.
நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய். நீ சுவாசத்துடன் உள்ளே செல்லும்போது அது வெளியே வருவதற்காக திரும்பும் முன் ஒரு கணம் சுவாசத்தில் இடைவெளி வரும். இதேபோல சுவாசத்தை வெளியே விடும்போதும் நிகழும். திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும். நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு நிலைகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக மாறும். ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும், பின் வெளி வரும். வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும். இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகும்.
பின் ஒரு சமயம் வரும். இந்த இடைவெளி மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள் இது 10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய். தியானம் தரக்கூடிய எல்லாவற்றையும் நீ பெற்று விடுவாய்.
-Osho-Tamil.
No comments:
Post a Comment