சொன்னதை சொல்லும் -செய்யும் கிளி பிள்ளையாக வாழ்வை வாழதே - பகிர்வு
நீ மனதின் பிடியில் சிக்கிக் கொண்டு நீ எடுக்கும் ஆன்மீக வகுப்புகள் அல்லது எழுதும் எழுத்துக்கள் அல்லது எந்த ஒரு செயலை செய்தாலும் உனக்கும் பயனில்லை உன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் எந்த வித பயனும் இல்லை , அதற்கு நீ அதை செய்யாமலே விட்டு விட்டால் உனக்கும் சமுதாயத்துக்கும் நீ செய்யும் பெரும் உதவி ஆகும்.
மனதின் பிடியில் நீ செயல் படும் போது உனக்கு ஒரே ஒரு விஷயத்தை பிடித்துக் கொண்டு ஒரே விஷயத்தை, ஒரே வார்த்தைகளை, அதே செயல்களை நீ திரும்ப திரும்ப செய்வாய் அங்கு மாற்றத்துக்கும் மன விரிவுக்கும் வழியே இருக்காது.
உன்னுடன் சேர்த்து அனைவருக்கும் அதே தன்மையைக் நீ வெகு நுட்பமாக செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்துவது போல வளர்ப்பாய்.
ஆனால் என்று ஒரு நாள், உன்னை நீ , உன் நிலையை நீ முழுமையாக உணர்ந்து கொள்கிறாயோ அன்றிலிருந்து உனக்கு உள்ளே நீ செயல்படும் விஷயம், எடுக்கும் ஆன்மீக வகுப்புகள், எழுதும் எழுத்துக்கள் என உன்னை சுற்றி அனைத்துமே புதுமையாகவே இருக்கும் அதில் உயிரோட்டம் இருக்கும் ஏனெனில் இந்த நிலைகளில் உன் மனம் விரிந்து விடுகிறது, உன் மனதுக்கு அப்பால் இருந்து நீ செயல் பட துவங்கி விடுகிறாய்,
இந்நிலையில் மனதின் பிடியில் நீ இருக்க மாட்டாய், மாறாக உன் பிடியில் உனது மனம் இருக்கும்.
இந்த நிலையில் செய்த செயலாகவே இருந்தாலும் புதுமையாக செய்வாய், வெளிப்படும் வார்த்தைகள் முதல் கொண்டு அனைத்திலும் புதுமையை நீ காண்பதை உணர்வாய்.
உன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் மனம் விரிந்த புதுமை நிகழ இயற்கையின் ஒரு கருவியாக இருப்பாய்!
சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாக இல்லாமல், உன்னை நீ புதுமையாக உருவாக்கி கொள் அப்பொழுது தான் உனது வாழ்வை நீ வாழ முடியும்- இல்லையேல் உனது வாழ்க்கையை உனக்கு கொடுக்கபட்ட காலம் வரையில் உன்னை சுற்றி உள்ளவர்கள் உன்னை முட்டாள் அடிமையாக்கி வாழ்வை முடித்து விடுவர் அதர்க்கு காரணம் உன்னை தவிர்த்து வேறு யாரும் இருக்க முடியாது.
உன்னை சுற்றி நிகழும் , உனக்கு உள்ளே நிகழும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆழமாக கவனித்து ரசி இந்த புதுமையான சந்தோஷமான வாழ்வினை நீ வாழ முடியும்.
முறையான தியான அணுகுமுறையை ஞானிகள் கொடுத்ததை சரியான நபரிடம் பின் பற்றும் முறைகளை கற்றுக் கொண்டு,
குருட்டுத் தனமான கோட்பாடுகள், எதிர்பார்ப்புகள் இல்லாத தியானம் செய் அப்பொழுது தான் உனக்கு உண்மையான தியானம் என்று உணர்ந்து கொள்வாய்
இல்லை என்றால் உனக்கு கற்பித்துக் கொடுத்த தியான முறைகளை கொண்டு கற்பனையில் தான் தியானம் செய்தது போலும் , தியானம் நிகழ்ந்தது போலும் பாவித்து கொள்வாய்.
உண்மையான தியானத்தை நீ உனக்கு உள்ளே உருவாக்கு பின்பு வாழ்வு ஒவ்வொரு நாளும் புதுமையே !
எதுவாக இருந்தாலும் செயல் படுத்தி பார், அனுபவித்து பார், உணர்ந்து பார், அப்பொழுது தான் உண்மையை நீ உனது விழிப்புணர்வில் உணர்ந்து கொள்ள முடியும் அப்பொழுது உனக்கு உள்ளே நிகழலாத எதுவும் உண்மை அல்ல, மற்றவை எல்லாம் பொய் மாயை என்று புரிந்து கொள்வாய்!
No comments:
Post a Comment