குண்டலினி யோகம்: சிலர் புத்தகத்தை மட்டும் படித்து விட்டு குண்டலினி யோக தனக்கு வரவில்லை இது பொய் கட்டு கதை என்கிறார்கள்...அவர்களுக்காக இந்த பதிவு....
1. "குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை!"
2. "தொட்டுகாட்டினால் ஒழிய சுட்டுப்போட்டாலும் வராது!"
இவை என்னைப்பொறுத்தவரை நான் எனது வாழ்வில் கற்றுணர்ந்த வேத வாக்கியங்கள்!
வெறும் புத்தகப்படிப்புடன் நாம் வாழ்விலும் சரி குண்டலினி யோகதிலும் வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியாது.
குண்டலினி யோகதில் ஒவ்வொரு பயிற்சிக்கும் நமக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய "குரு" வை, ஆசானை தேர்ந்தெடுத்து அவர்களின் உதவியுடந்தான் வெற்றி கொள்ள முடியும்.
இல்லாவிட்டால் துடுப்பில்லாத ஓடமாக கடலில் போகவேண்டிய இடம் தெரியாது நின்று தத்தளித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.
No comments:
Post a Comment