மகப்பேறின்மைக்கான பொதுவான காரணிகள்:1. பெண்களில் கருப்பை உட்சுவரின் கட்டி வளர்ச்சி (என்டோமீற்றியோசிஸ்).3. பெண்களில் பலோப்பியன் குழாயில் தடைகள் இருத்தல்.4. பெண்களில் சூல் தோன்றாதிருத்தல்அல்லது ஒழுங்கின்றி தோன்றுதல்.6. பெண்களில் கருப்பை வாயிலில் தோன்றும் சளிப்படை ஆனின் விந்தணுக்களைக் கொன்றுவிடுதல்.7. பெண்களில் முழுமையான கர்ப்ப காலத்தைக்கொண்டுசெல்வதற்கு தேவையான புறோஜெஸ்ரோன் எனப்படும் ஓமோன் போதியளவு சுரக்கப்படாமை.8. பெண்களின் வயது முப்பதுநான்கிற்கு அதிகமாக இருத்தல்.2. ஆண்களில் மாற்றமைந்த விந்தணுக்கள் அல்லது குறைந்த எண்ணிக்கையில் விந்தணுக்கள் தோன்றுதல், விந்தணுக்களை பெண் குறியில் செலுத்துவதற்கு தேவையான ஆண் குறியின் விறைப்புத்தன்மை(சக்தி) இல்லாதிருத்தல் (இறக்ரையில் டிஸ்பங்சன்).5. தம்பதியினர் முழுமையான உடலுறவை செய்ய முடியாதிருத்தல். அல்லது முழுவளர்ச்சியடைந்த முட்டை வெளிவரும் காலங்களில் தாம்பத்திய உறவு கொள்ளும் சந்தற்பம் இல்லாதிருத்தல் என்பவாம். பொதுவாக மகப்பேறின்மைக்கு ஒன்றிற்கு மேற்பட்ட காரணிகள் காரணங்களாகின்றன.ஆண்களின் மலட்டுத்தன்மையின் காரணங்கள்:1. ஆணின் விந்தில் உயிர் அணுக்கள் இல்லா நிலை2. உயிரணுக்களின் ஓட்டம் இல்லா நிலை3. ஓட்ட உணர்வு குறைவாக இருந்து முன்னோக்கி ஊர்ந்து போகாத நிலை4. விந்தனுவை பீச்சும் திறன் இல்லாமை5. உயிரணுக்களை கொல்லக் கூடிய எதிர்மறைப் புரதங்கள் விந்திலே கலந்திருத்தல்.6. உயிர் அணுக்கள் வெளியேறும் பாதையில் அடைப்புகள் இருத்தல்7. பிட்யூட்டரி சுரப்பியின் சரிவர செயலுறாத தன்மை.8. விரைப்பையில் விதை இல்லாமல் இருத்தல்9. விரைப் பைக்குள் விரையானது திருகிக் கொண்டு இருத்தல் .10. விரயில் காயம் ஏற்படுதல், வீக்கம், அடி படுதல் போன்றவற்றால் விரையில் ஏற்படும் பாதிப்பு .11. விரைவீக்கம் எனப்படும் பாதிப்பு12. முற்றிய காசநோய்13. விதையானது வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் பாதிப்படைவது, இதற்கு நாம் அணியும் மிகவும் இறுக்கமான உள்ளாடைகள் காரணமாகும் .14. தொடர்ந்து தீய பழக்க வழக்கங்கள் (மது, புகை மற்றவை )விந்து பற்றிய சில தகவல்கள்• ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு: 2 முதல் 6 மில்லி லிட்டர்• வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை: 5,000• வாழ்நாளில் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல்: 17 லிட்டர்• ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம்: 7• புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் : 4 நொடிகள்• ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துதள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக்கலங்களின் சராசரி எண்ணிக்கை: 40 முதல் 600 மில்லியன்• ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம்: 7.5-10 செ.மீ.• விந்து ஆயுட்காலம்: உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்• பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம்: 30 நொடிகளிலிருந்துஆறு நாட்கள் வரை (கிடைக்கும் சூழலைப்பொறுத்தது)பெண்ணின் முதல்நிலை மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்1. முட்டை, மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் 14 - 15 நாட்களில் (சூலகம்) கருப்பையிலிருந்துமுதிர்ந்த கருவாக வெளியேற வேண்டும். சில பெண்களிற்கு இது நிகழ்வதில்லை .2. வெளியாகும் முட்டை இணைக்குழாயின் விரல் போன்ற அமைப்புகள் வழியாக கருப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டிருக்கலாம். அல்லது உறுஞ்சி எடுக்கும் தன்மைய இழந்திருக்கலாம்.3. இணைக்குழாயில் அடைப்புகள் இருக்கலாம்4. கர்ப்பப்பை சுவர் கருவை பதிய வைத்து காக்கும் பக்குவம் பெறாத தன்மையை உடையதாயிருத்தல்5. சினைப்பட்ட கருவானது தனது பிரயாணத்தின் முடிவில் கர்ப்பப்பையில் சேரும்பொழுது தன் இயல்பு கெடுதல்.6. கர்பப்பை வாயில் தொற்று நோய், பிறநோய்களின் பாதிப்புகள் காணப்படுதல் என்பனவாம்.பிறக்கப்போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தீர்னாப்பது ஆண்களில் காணப்பெறும் “X", "Y" என்னும் குரோமோசோம்கள்:உடலின் ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி வடிவில் 46 குரோமோசோம்கள் உள்ளன. ஒவ்வொரு குரோமோசோம் ஜோடியிலும் உங்கள் தந்தையிடம் இருந்து பெறப்பட்ட ஒரு குரோமோசோமும், உங்கள் தாயிடம் இருந்து பெறப்பட்ட ஒரு குரோமோசோமும் உள்ளன. இதனாலே, நீங்கள் உங்கள் பெற்றோர்கள் இருவரையும் போலஇருக்கலாம்.கருத்தரித்தல் நிகழும் போது, தந்தையிடம் இருந்து 23 குரோமோசோம்களும்தாயிடம் இருந்து 23 குரோமோசோம்களும்ஒன்று சேரும். 23 ஆம் ஜோடியை தவிர மற்ற அணைத்து குரோமோசோம் ஜோடிகளும் பார்பதற்கு அசலாக இருக்கும். செக்ஸ் குரோமோசோம்கள் என்று இந்த கடைசி ஜோடியை அழைப்பார்கள் ஏனென்றால், அவை ஒருவரின் பாலினத்தை நிரூபிப்பனர்.ஆண்களிடமும் பெண்களிடமும் X குரோமோசோம் மற்றும் Y குரோமோசோம் என்று இரண்டு செக்ஸ் குரோமோசோம்கள் உள்ளன. பெண்களிடம் இரண்டு X குரோமோசோம்களின்பிரதிகள் இருக்கும். ஆண்களிடம் ஒரு X குரோமோசோமின் பிரதியும்,ஒரு Y குரோமோசோமின் பிரதியும் இருக்கும்.ஒரு தாயிடமிருந்து அவளது X குரோமோசோம்களில்ஒன்று தனது குழந்தைக்கு செல்லும். தந்தையிடமிருந்து, X அல்லது Y குரோமோசோம் செல்லும்.தந்தையிடமிருந்து Y குரோமோசோம் குழந்தைக்குச் சென்றால், அது ஆண் குழந்தையாய் பிறக்கும். X குரோமோசோம் சென்றால், அது பெண் குழந்தையாய் பிறக்கும். இந்த சீரற்ற செயல்பாட்டில், குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது தந்தையின் X அல்லது Y குரோமோசோம்களே.by.pp
No comments:
Post a Comment