Saturday, April 16, 2016

நமது உடலில் ( சிவம் - உயிர், சக்தி - உடல்)

நமது உடலில் ( சிவம் - உயிர், சக்தி - உடல்) சிவசக்தி செயல்கள் இரண்டு
மூளை இரண்டு - பெருமூளை, சிறுமூளை
கண் இரண்டு - இடது, வலது
காது இரண்டு
இமை இரண்டு - மேல் இமை, கீழ் இமை
மூக்கு இரண்டு வலது, இடது
கண்ணம் இரண்டு - வலது, இடது
வாய் இரண்டு - மேல் வாய் கீழ்வாய்
பல்வரிசை இரண்டு - மேல், கீழ் வரிசை
நாக்கு இரண்டு - வெளிநாக்கு உள்நாக்கு
தொண்டை குழாய் இரண்டு - உணவுக்கு, காற்றுக்கு
நுரையீரல் இரண்டு - வலது இடது
குடல் 2 - பெருங்குடல் , சிறுகுடல்
கால்கள் இரண்டு - வலது, இடது
தோல் இரண்டு - அகத்தோல் புறத்தோல்
குருதி - வெள்ளை, சிவப்பு
இதயம் 2 - வலது ஆரிக்கள், இடது ஆரிக்கள்

இடது புறம் சக்தியின் இருப்பிடம், அதில் இருதயம் மண்ணீரல் முதலிய உறுப்புகளும் வலதுபுறத்தில் சிவபெருமானின் இருப்பிடம், இங்கு கல்லீரல், பித்தப்பை, குடல் வால், ஆகிய உறுப்புக்கள் இருப்பது இயற்கை நமக்கு கொடுத்த வரப்பிரசாதம், உடலில் இருக்க வேண்டிய உறுப்புக்ள் அனைத்துமே சரியாக இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும், இந்த புவியை கொஞ்சம் நோக்குவோம், தட்பமும், வெப்பமும் சேர்ந்து எங்கும் காணப்படுகிறது. இதுவும் சிவசக்தி தத்துவமாகும் தட்பவெப்ப நிலை
ஒரு மலர் மலராக இருக்க வேண்டும் என்றால் குளிர்ச்சியும், சூடும் சமமாக இருக்க வேண்டும், மலர் வாடினால் குளிர்ச்சி ( சக்தி) குறைந்து விட்டது என்றும், மலர் அழுகிவிட்டால் சூடு (சிவம்) குறைந்துவிட்டது என்றும் அர்த்தம். எனவே சூடு ஆகிய சிவமும், குளிர்ச்சி ஆகிய சக்தியும், ஒன்றையொன்று விட்டுவிடாமல் கலந்து மலரில் இருந்தால்தான் மலர் அழகுடன் இருக்கும், என்பது சிவசக்தி தத்துவம்.
நமது சரீரத்தில் தட்பமும் ( சக்தியும்) வெப்பமும்( சிவனும்) அமைந்திருக்கின்றன, சூடு குறைந்தால் உயிர் உடம்பில் (சக்தியில்) நிலைபெறுவதில்லை. சூடு குறைய சிவமாகிய உயிர் சவமாகிவிடுவார், சூடும் குளிர்ச்சியும் எல்லையற்றிருக்குமானால் அங்கு உயிர்கள் தோன்றுவதில்லை. உதாரணமாக, சூடு (சிவம்) குறைந்த, வடதுருவப்பிரதேசங்களிலும், குளிர்ச்சி (சக்தி) குறைந்த சகாராவிலும் உயிர்கள் இடர்ப்பட்டுத்தான் வாழ்கின்றன, "பேதை ஒரு பால் திருமேனி ஒன்றல்லன்" - திருவாசம் 7-10,
தட்பத்தின் சூக்கும ஆற்றல் சக்தி - வெப்பத்தின் சூக்கும ஆற்றல் சிவம், இந்த இரு பொருள்களும் ஒரே பொருளின் இரு பகுதிகள் ஆகும். உடலில் குளிர்ச்சி அதிகமானால், சளி சம்பந்தமான நோய்களும், சூடு அதிகமானால் சுரம், மஞ்சள் காமாலை, முதலிய நோய்களும் தோன்றும், ஆகவே சக்தியும சிவமும் சமமாக இருப்பதே ஆரோக்கியம் ஆகும்.
"எது ஒன்றுமில்லையோ அதுதான் உலகம்" " எது உலகமோ அது ஒன்றில்லை" என்பதே சிவசக்தியின் மூலத் தத்துவமாகும், இந்த வாக்கியம் வேதத்தின் சாரம் ஆகும், ஆயிரம் ஆயிரம் செலவு செய்து பலமணி நேரம் உழைத்து ஒரு திருமணம் நடக்கிறது, அதன் சாரன் என்ன? திருமாங்கல்யத்தின் மூன்று முடிச்சுக்களுக்குத்தான், அதை நினைத்துப்பார்த்தால் ஒருசில நிமிட உறவுதான், அந்த சில நிமிட உறவு இல்லை என்றால் உலகம்இல்லை. ஆனால் அதுவே வாழ்க்கையில்லை, சிவமும் சக்தியுமே உலகம் ஆகும். அரிசி - பொருள், உமி - ஒன்றுமில்லை இப்படி இருந்தாலும், அரிசியை விடடு உமி பிரித்துவிட்டால் அரிசியை நிலத்தில இட்டால் முளைப்பதில்லை, உமியும் முளைப்பதில்லை, உமியின் துணைகொண்டு அரிச முளையாகிறது, ஒன்றுக்கும் பற்றாத பூஜ்யத்தை ( சிவத்தை) துணை கொள்வதால் எண் ( சக்தி) வளர்ச்சியடைகின்றது, என்பார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். பல மணி நேர உழைப்பின் சாரம் சம்பளமே ஆகும், அது வடிவத்தில் சிறியது,மதிப்பு பெரியது. ஆண் , பெண் சமம்,பெண்ணுக்கு ஆண் சமம், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே வாழ்வின் சாரம்சம், தனித்த நிலையில் சக்தியை வழிபடும் மரபு பண்டைய சைவ உலகில் காணப்படவில்லை. சிவபெருமானின் ஒரு கூறாகவே சக்தியை கொள்வார்கள்.
திருக்கயிலையில் சிவபெருமானின் அருகில் காளையும், பராசக்தியும் அருகில் சிங்கமும் அமர்ந்திருப்பதைக் காணலாம், சிறிது சிந்தித்துப் பார்த்தால் இதில் வினோதம் ஒன்று இருப்பது விளங்கும், அவற்றின் இயல்புகள் ஒன்றுக்கு ஒன்று முரன்பட்டவை, ஒரே உலகில் அவைகள் வாழ்கின்றன அல்லவா?
இது கயிலையில் மட்டுமல்ல, காணும்இடம் எங்கும் இயற்கையில் இதே காட்சிதான், பகல்-இரவு, துன்பம்- இன்பம், உயர்வு-தாழ்வு, தட்பம்-வெப்பம், என்ற சிவசக்தி தத்துவமே உலகம் ஆகும். சிவத்திடம் சக்தியையும், சக்தியிடம் சிவத்தையும், ஒன்றாகவே உள்ள தத்துவத்தை தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருப்புகழ், கம்பராமாயணம், மற்றும் பல்வேறு திருமுறைகளில் இன்றும் காண முடிகிறது. ஆகவே நாமும், சிவ -சக்தியை வழிபட்டு தெய்வீக குணங்களை கடைப்பிடித்து ஞான ( சிவ-சக்தி) நிலை அடைவோம்.

No comments:

Post a Comment