்:
----------------
அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சிலகருத்துகள்:
பயனற்றவகைள்:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடலில் பெய்யும் மழை,
பகலில் எரியும் தீபம்,
வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு,
நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு.
முட்டாளுக்கு கூறும் அறிவுரை.
இவர்களுக்கு_தெரியாது:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிறவி குருடனுக்கு கண்,
காமம் உள்ளவனுக்கு கண்,
பெருமை உள்ளவனுக்கு கெடுதி,
பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம்.
இவர்களுக்கு_எதிரி:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கஞ்சனுக்கு பிச்சைகாரன்,
தவறு செய்யும் மனைவிக்கு கணவன்.
அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு,
பூரணநிலவு ஒளி திருடர்களுக்கு.
இப்படி_அணுகலாம்:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலம்,
முட்டாளை நகைச்சுவை மூலம்,
அறிவாளியை உண்மையான வார்த்தை மூலம்.
இவர்கள்_பூமிக்கு_பாரம்:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன்,
அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள்.
இல்லவே_இல்லை:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காமத்தை விட கொடிய நோய்,
அறியாமையை விட கொடிய எதிரி,
கோவத்தை விட கொடிய நெருப்பு.
வெளியே_கூற_மாட்டான்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களை,
தன் மன விரக்தியை,
தன் மனைவியின் தீய நடத்தை.
பிறரால் ஏற்படும் கடும் சொற்கள்.
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத் தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.
No comments:
Post a Comment