Thursday, January 12, 2017

Maharishi messages Jan 12

வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!.

உலக பொது அருள்நெறி  சமய ஆண்டு :  31

ஜனவரி : 12

இன்றைய சிந்தனை :

"மனிதகுல வாழ்வின் இனிமைக்கும் அமைதிக்கும் காயகல்பக் கலை :"

"உடல் மற்றும் மனநலனுக்கு முக்கியப் பொருளான விந்து நாதங்களின் பெருமையையும், கற்பு நெறியின் மேன்மையினையும் மனிதகுலம் உணர வேண்டும். விந்து நாதத்தை இன்பத்துக்குரியதோர் சாதனமாக மட்டும் இன்றைய மனிதர்கள் கருதுகிறார்கள். நோயற்ற உடலுக்கும் தெளிந்த அறிவு மேன்மைக்கும் விந்து நாதந்தான் ஆதாரம். எனவே அவற்றைப் புனிதப் பொருளாகக் கருதி, அவற்றின் தூய்மையைப் பராமரித்து அவற்றுக்கு மேன்மையளிக்கவும் வேண்டும். அதற்கு உதவுவது தான் "காயகல்பக் கலை". உடல் நலமும், மனவளமும் தான் வாழ்வில் வெற்றியையும் நிறைவையும் அளிக்கும். அவற்றைக் காயகல்பம் கொடுக்கும் என்பது தெரியும் போது தான் இன்றைய மக்கள் குலத்தினர் அக்கலையைக் கற்க முன் வருவார்கள்.

இக்காயகல்பக்கலையைக் கற்க வேண்டிய சரியான வயது உயர் நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் தான். விந்து நாதம் கெட்டபின் தூய்மைப்படுத்துவது என்பதும் சரிதான். ஆனால் கெடா முன்னரே அவற்றின் மதிப்பு இளைஞர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இது வளர்ந்தவர்களாகிய நமது பொறுப்பாக உள்ளது.

எந்த அளவுக்கு இளைஞர்கள் காயகல்பத்தின் மூலம் உடல் வளமும் அறிவு உயர்வும் பெறுகிறார்களோ, அந்த அளவுக்குத் தான் எதிர்கால சமுதாயத்தில் இனிமையும் அமைதியும் நிலவ முடியும்.

இந்த உண்மையை மனவளக்கலை மன்றத்தினர்களும் மற்றும் கல்விக்கூட மேலாளர்களும் உணர்ந்து கொண்டு இளைஞர்கள்/மாணவர்கள் மத்தியில் காயகல்பத்தையும், மனவளக்கலையையும் அறிமுகப்படுத்த வேண்டும்."

வாழ்க வையகம்! வாழ்கவளமுடன்!!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment