Wednesday, January 4, 2017

உடல் எடையை கட்டுப்படுத்த

நம் வீட்டில் உள்ள எளிய உணவுகளே போதுமானது!!

உலகில் பெரும்பாலானோர் கஷ்டப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் உடல் பருமன். இத்தகைய உடல் பருமனானது ஏற்படுவதற்கு அதிகப்படியான கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதால், கொழுப்புக்களானது உடலில் ஆங்காங்கு தங்கி, உடல் எடையை அதிகரித்துவிடுகிறது. மேலும் தற்போதைய வாழ்க்கை முறையில் உண்ணும் உணவுகள் அனைத்திலுமே கொழுப்புக்கள் அதிகம் இருக்கிறது. கடைகளில் விற்கப்படும் எந்த ஒரு உணவையும் ஆரோக்கியம் என்று கருதி சாப்பிட முடியாது. அதுமட்டுமல்லாமல், கடைகளில் கொழுப்பில்லாத உணவுகள் என்று குறிப்பிட்டு விற்கப்படும் உணவுகளில் தான் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது.

எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், உணவுகளில் கவனமாக இருப்பவராக இருந்தால், இந்திய உணவுப் பொருட்கள் என்று சொல்லப்படும், வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே உடல் பருமனை எளிதில் குறைத்துவிடலாம். மேலும் இந்த உணவுகள் உடல் எடையை குறைப்பதோடு, உடலை ஆரோக்கியமாக நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும்.

இப்போது உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும் சில உணவுப் பொருட்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

மஞ்சள்

உணவுகள் அனைத்திலும் சேர்க்கப்படும் மஞ்சுள் தூளில், உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும் சக்தியானது உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க நினைத்தால், மஞ்சள் தூளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

பூண்டு

அனைவருக்குமே பூண்டு சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரியும். ஏனெனில் பூண்டில் அல்லிசின் என்றும் கொலஸ்ட்ராலை கரைக்கும் பொருள் இருப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் தங்குவது தடைபட்டு, இதயம் ஆரோக்கியமாக இருப்பதுடன், உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

மிளகாய்

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதில் மிளகாய் மிகவும் சிறப்பான பொருள். ஏனென்றால், அதில் உள்ள கேப்சைசின் என்னும் பொருள், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை தங்க விடாமல் செய்கிறது. இதனால் உடல் எடையும் அதிகரிக்காமல் இருக்கிறது.

முட்டை

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டு வந்தால், அதிலிருந்து உடலுக்கு வேண்டிய புரோட்டீன், கொழுப்பு மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை கிடைத்து, எனர்ஜி மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரித்து, உடல் எடை குறையும்.

எலுமிச்சை

நம் நாட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சாப்பிடக்கூடிய உணவுப் பொருள் தான் எலுமிச்சை. இத்தகைய எலுமிச்சையை தினமும் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், நிச்சயம் உடல் எடை சரியான அளவில் இருக்கும்.

பட்டை

பட்டையை உணவில் சேர்த்தால், கொழுப்புக்கள் அதிகம் சேராமல் உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

முட்டைகோஸ்

முட்டைகோஸை பச்சையாக சாப்பிடுவதும் மிகவும் நல்லது. ஏனெனில் பச்சையாக முட்டைகோஸை சாப்பிட்டால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, கார்போட்ஹைட்ரேட் கொழுப்புக்களாக மாறாமல் இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு எனர்ஜி கிடைப்பதோடு, அதிகப்படியான நார்ச்சத்தும் கிடைக்கும். மேலும் இது எடை குறைவுக்கும் வழிவகுக்கும்.

தக்காளி

தினமும் சமையலில் சேர்க்கப்படும் தக்காளியை அதிகம் சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதனால் தேவையில்லாத கொழுப்புக்கள் உடலில் சேர்வதை தடுக்கலாம்.

மோர்

நாம் குடிக்கும் ஸ்பெஷல் பானங்களில் ஒன்று தான் மோர். இந்த மோர் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, குறைவாக கலோரிகளைக் கொண்டது. அதிலும் இதில் உள்ள சிட்ரிக் எசன்ஸ், கொழுப்புக்களை கரைக்க உதவியாக இருக்கும்.

பாசிப் பருப்பு

பாசிப் பருப்பில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், அது கொலஸ்ட்ரால் பிரச்சனையை எதிர்த்துப் போராடும் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களை உடலுக்கு தருகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை அதிகம் உட்கொள்வது மிகவும் சிறந்தது.

கறிவேப்பிலை

நம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொதுவான மூலிகை தான் கறிவேப்பிலை. இத்தகைய கறிவேப்பிலையில் கொழுப்புக்களை கரைக்கும் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆகவே எடை குறைய வேண்டுமெனில் சாப்பிடும் போது, உணவில் உள்ள கறிவேப்பிலையை தூக்கி எறியாமல், அதனை சாப்பிட தொடங்குங்கள்.

க்ரீன் டீ

தற்போது நிறைய மக்கள் உடல் எடையை குறைப்பதற்கு க்ரீன் டீயை குடித்து வருகின்றனர். ஆனால் அந்த க்ரீன் டீயை அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. ஆகவே தினமும் 1-2 கப் குடித்தால் போதுமானது.
http://www.vkalathur.in/

No comments:

Post a Comment