Tuesday, January 24, 2017

அக்குபிரஷர் நன்மைகள்

:

உங்களுக்கு நீங்களே டாக்டர்!
இதுவரை பொருத்தமான மருந்து கண்டுபிடிக்கப் படாத கொடிய நோய்களில் ஒன்று சாதாரண தலைவலிதான் என்றால் ஒப்புக் கொள்வீர்களா? ஆனால் அது உண்மை! கையில் கிடைக்கும் மாத்திரையை போட்டு, கிடைத்த தைலத்தை தேய்த்து கொண்டது தான்.. நமக்கு தெரிந்த தலைவலி சிகிச்சை..
ஆனால் இதற்கு நேர்த்தியான சிகிச்சை எதில் கிடைக்கும் என்றால்?
அக்கு பிரஷர்!
அக்கு பிரஷர்!
அக்கு பிரஷர்!
அக்கு நாடி பரிசோதனை மூலம் ஒரு தலைவலி ஏற்படுவதற்கான காரணம், அதன் தீவிரம் என மொத்த ஜாதகத்தையே திரட்டி விடலாம்.
ஜாதகமே கைக்கு வந்ததற்கு அப்புறம் என்ன கவலைங்க?
----------------
வேதாத்திரி மகிரிஷி

உடலில் மின்சாரத் தடை நீங்கி, மின்சார ஓட்டம் சீரமைகிறது.நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்திச் சீராக இயங்கச் செய்கிறது.வயிற்றில் உள்ளுறுப்புகள் சீரடைகின்றன. வலிமை பெறுகின்றன.இரத்த அழுத்த நோய் குறைகிறது. நரம்புத் தளர்ச்சி குறைகிறது.

மூளை-முதுகுத்தண்டு இவையெல்லாம் இணைந்ததே உடலின் நரம்பு மண்டலம். இந்த நரம்புகள் இல்லாத இடமே இல்லை. சூழ்நிலை மற்றும் உணவிலுள்ள நச்சுத்தன்மை மூலம் பலருக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகிறது. இந்த நச்சுத் தன்மை கல்லீரலில் (Liver) மற்றும் நரம்புகளில் சேர்ந்து தேவையற்ற மன இறுக்கத்தை (Stress) ஏற்படுத்தி விடும்.

இதன் காரணமாக நரம்புத் தளர்ச்சியும் மனநோயும் ஏற்பட்டு மனத்தின் சமநலை கெட்டு மனச்சோர்வு உண்டாகிறது. மனஇயல், மனோதத்துவ சிகிச்சை பலன் அளிக்காது. ஏனென்றால், இது மனத்தின் சமநிலையை பாதிப்பதுடன் நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்தி, அதன் மூலம் உடலில் சமநிலையையும் பாதித்து விடுகிறது.

நரம்புகளின் கடைசிப் பகுதியை அக்கு (Acu) என்பார்கள். இதற்குக் கொடுக்கக் கூடிய அழுத்தம்தான் அக்கு பிரஷர். இந்த நரம்புகளில் அழுத்தம் கொடுக்கப்படும்பொழுது உடலில் உள்ள நச்சுத்தன்மை (Toxins) வெளியேறி விடும்.

மற்ற உடற்பயிற்சிகள் என்பது வெளிப்புற உறுப்புகளை (External organs) சீர்செய்வதற்கானப் பயிற்சியாகும். ஆனால் உடலுக்குள்ளாக இருக்கின்ற உறுப்புகளுக்கு (Internal organs) உடற்பயிற்சி என்பது அவசியமாகிறது. உள்ளுறுப்புகளுக்கு அக்கு பிரஷர் என்ற முறையில் தான் பயிற்சி அளிக்க முடியும். எனவே, உடல் நலமாக இருக்க வெளிப்புற உறுப்புகள் மற்றும் உட்புற உறுப்புகள் இரண்டுக்கும் பயிற்சி அவசியமானதால் உடற்பயிற்சியையும் அக்கு பிரஷரையும் சேர்த்தே செய்ய வேண்டும்.

நமது உடலில் மெரிடியன் (Meridian) என்ற நரம்புகள் எல்லா இடத்திலும் உறுப்புகளில் உள்ளன. இந்த நரம்புகளில் குறிப்பிட்ட இடத்தில் அழுத்தம் கொடுக்கும்போது அதன் ஆற்றலானது அலையியக்கமாக நரம்புகள் மூலமாக சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்குச் சென்று தடையை நீக்கும். இந்த முறை பின்பு “அக்குபஞ்சர்” என்று ஆகி, ஊசிகளை நரம்புகளில் செலுத்தி அங்கு குறிப்பிட்ட அளவு மின்சாரத்தைச் செலுத்தி மருத்துவம் செய்யும் முறையாக வந்தது.

உடலிலுள்ள உயிராற்றல் இயங்கும் பாதையிலுள்ள மையங்களின் மீது கைவிரலால் அழுத்தம் கொடுக்கம்போது தனக்குள்ள பலவீனங்களை நோய்களை, தானே உள்நோக்கி, காலம் கடப்பதற்கு முன்பே உணரக்கூடிய அளவிற்கு உதவுகிறது. இந்த நிலையில் பழகப் பழக தனது உடல் நலத்தைத் தானே முழுமையாக உணர்ந்து கொள்ள முடியும்.

பலவீனத்தின் மூலகாரணத்தை அறிய அக்குபிரஷர் பயிற்சி உதவுகிறது. இப்பயிற்சி தடுப்பு மருத்துவ முறையிலும் பயன்படுகிறது. நோய் தீவிரமாகும் முன்பே பயிற்சியாளருக்கு நோயின் தன்மையை உணர்த்திவிடும். எடுத்துக் காட்டாக புற்றுநோய் உடலில் தோன்றி தீவிரமடைந்து வெளிப்படுவதற்கு நீண்டகாலமாகும். ஆனால், அக்குபிரஷர் மூலமாக நோய் வருமுன்பாகவே தவிர்த்திடலாம்.

இந்தப் பயிற்சியில் முக்கியமாக 14 மையங்கள் (Centres) உள்ளன. இந்த 14 மையங்களில் முதலிடம் கழுத்தின் பின்புறம் அதாவது, நமது இடக்கை விரல்கள் மூன்று, வலப்புறமாகச் சென்று கழுத்துக்குப் பின்னால் மூன்றாவது கழுத்து எலும்பினைப் பயிற்சி முடியும் வரை அழுத்திப் பிடித்தவாறு இருக்க வேண்டும். எப்படி என்றால் வீணை, கிட்டார் வாசிக்கும்போது நமது இடக்கை மூன்று விரல்களைக் கொண்டு மீட்டிக் கொண்டே இருப்பது போல் கழுத்தின் பின்புறம், அழுத்தியவாறு இருக்க வேண்டும். நமது மூளையின் அமைப்பு, முகுளத்தின் அமைப்பு, தண்டுவடத்தின் அமைப்பு, எல்லாமே ஒன்று சேர்ந்து இருக்குமிடம் இதுதான்.

இந்த இடத்தில் நரம்புகள் ஒன்றுகூடி பின்பு உடலுக்குள் இருபக்கமும் மூன்று ஜோடியாகப் பிரிந்து ஒவ்வொரு உறுப்பிற்கும் செல்கிறது. மீதி உள்ள மற்ற அக்குபிரஷர் உள்ள இடங்கள் நமது வயிற்றுப் பகுதியைச் சுற்றியுள்ளன. இது முக்கியமான இடம். காரணம் என்னவென்றால் உடலியக்கத்திற்குத் தேவையான சில முக்கிய உறுப்புகள் வயிற்றுப் பகுதியில் உள்ளன.

வயிற்றில் தொப்புள் பகுதியைச் சுற்றி முக்கியமான உறுப்புகளான குடல்கள், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் முதலிய உறுப்புகளுடன் நாளமில்லாச் சுரப்பிகளான கணையம், அட்ரீனல், பால் சுரப்பிகள் போன்றவைகளும் உள்ளன. இவை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் முதலியனவற்றை தடுக்கும் உறுப்புகள். இந்த உறுப்புகளைத் தூண்டி சரியான முறையில் இயங்கச் செய்வதற்கு இதனோடு தொடர்புள்ள மெரிடியன் நரம்புகள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் எந்த மையங்களில் விரலால் அழுத்துகின்றோமோ அந்தப் பகுதியல் நமது மனத்தையும் குவிக்க வேண்டும். மனம் அலையுமானால் மீண்டும் பயிற்சியை முதலிலிருந்து தொடங்க வேண்டும். பயிற்சியை மெதுவாகச் செய்வது நல்லது. மனம் ஒருமைப்படாமல் பயிற்சி செய்வது முழு பலனைத் தராது.

உடலை அழுத்துதல் (Acu-pressure) பயிற்சியின் நன்மைகள்:
உடலில் மின்சாரத் தடை நீங்கி, மின்சார ஓட்டம் சீரமைகிறது.
நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்திச் சீராக இயங்கச் செய்கிறது.
வயிற்றில் உள்ளுறுப்புகள் சீரடைகின்றன. வலிமை பெறுகின்றன.
இரத்த அழுத்த நோய் குறைகிறது. நரம்புத் தளர்ச்சி குறைகிறது.

இன்னும் சில உத்திகள்

1989 ஆம் ஆண்டு  தர்மபுரி மன்றத்தில் , அருள்நிதி ரவி அவர்கள் கூறியது.
1 . அக்கு பிரஷர் செய்யும் முதல் புள்ளி இடது கை மூன்று விரலில் வைத்துக்கொண்டு, வலது கை ஆல் காட்டி விரல் மூலாதாரத்தை தொட்டு (முதுகு தண்டின் நுனிப்பகுதியை) தொட்டுக்கொண்டு இடது பக்கம் படுத்துக்கொண்டு செய்ய வேண்டும்.
தூக்கம் வரும் வரை (10 - 15 நிமிடங்கள் ) மனம் விரல் நுனியை கவனித்தவாறு இருந்தால் நன்கு தூக்கம் வரும். சாந்தி தவம் நன்கு உணர முடியும்.
வாழ்க வளமுடன்.

1 comment: