Thursday, January 26, 2017

அருட்தந்தை அவர்களே, உயிர்ச்சக்தி ஜீவ வித்துக்குழம்பில் உள்ளதாக கூறுகிறீர்கள

கேள்வி :
=
அருட்தந்தை அவர்களே, உயிர்ச்சக்தி ஜீவ வித்துக்குழம்பில் உள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் குழந்தைகளுக்கு பருவ வயது வந்தவுடந்தான் வித்துக்குழம்பு உண்டாகும். அதற்குமுன்பு உயிர்ச்சக்தி எங்குள்ளது ? அதேபோல் முதுமை அடைந்ததும் விந்து சக்தி குறைந்துவிடுகிறது ; அப்போது உயிர்ச்சக்தியும் குறைவாக இருக்குமா ?

பதில் :
======

தாய் தந்தை விந்து நாதத்தைக் கொண்டேதான் குழந்தை தன் உடலைக் கட்டிக்கொண்டு வருகிறது. உடல் வளர்ச்சியோடு விந்துவின் அளவும் வளர்ந்துகொண்டே வருகிறது.. 3 வயதிற்குள் மூளையை முழுமையாக கட்டிக்கொள்ளும்.

சுமார் 12 வயது வரை உடலைக்கட்டிக்கொள்வதற்கே விந்து செலவாகும். மீதம் இருக்காது.

உடல் வளர்ச்சிக்கு செலவானது போக எந்த வயதில் விந்து உபரியாக வருகிறதோ அதுதான் பருவமடைதல் (Age Of Maturity) . மேல்மிச்சம் ஏற்படுகிறபோது கழிவு ஏற்படுகிறது.

அப்போதுதான் கீழே அணு அணுவாக முதுகுத்தண்டு வழியாக வந்து சுரப்பியில்(Sexual Gland) தங்குகிறது. அதுவரை அது மூளையிலேயே தங்கி இருக்கும்.

விந்து உற்பத்தி மூளையில் ; தங்குமிடம் கருமையம் என்னும் உடல் மையத்தில்.

விந்து நாதம் இணைந்த முதற்கொண்டு உயிர் பிரியும் வரைக்கும் - குழந்தைகளாக இருந்தாலும் - முதியவர்களாக இருந்தாலும் விந்தானது சீவகாந்த மின் குறுக்கால் (Short Circuit) கொட்டிப்போனால்; அதுதான் மரணம்.

பருவ வயதிற்குள் குழந்தைகள் இறந்தால் மூக்கில், கண்களில், நீர் வரும்.
பெரியவர்களுக்கு பால்சுரப்பியில்(Sexual Gland) மின்குறுக்கு ஏற்படும்; விந்து நாதம் முறிந்து பிறப்புறுப்பு வழியே கொட்டிவிடும்.

எல்லோருக்கும் வாழ்வின் கடைசி வரை விந்து நாதம் இருக்கும். ஏழாவது தாதுவான விந்தின் உற்பத்தி இளம்வயதில் அதிகமாக இருக்கும். வயதானவர்களுக்கு குறைவாக இருக்கும்; ஆனால் உயிரைத்தாங்கும் அளவு இருக்கும்.

வயது முதிர்ச்சியில் விந்துவின் அளவும், அதற்குத்தகுந்தவாறு உயிர்ச்சக்தியின் அளவும் குறையும். அதனால் தான் முதுமையில் பலவீனம் ஏற்படுகிறது, உறுப்புகள் செயலிழக்கின்றன.

-வேதாத்திரி மகரிஷி

வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் ! வாழ்க வளமுடன் !

No comments:

Post a Comment