Friday, November 18, 2016

PATHANJALI_YOGA_SUTRA_OSHO

PATHANJALI_YOGA_SUTRA_OSHO.

பதஞ்சலியின் யோக சாஸ்திரங்களின்படி நம் உடல் ஒரு உடலாக இல்லை.அது ஐந்து உடல்களாக உள்ளது.ஒரு உடல் ஐந்து உடல் அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து விதைகளாக உடல் அமைந்துள்ளது.பதஞ்சலி கூறும் முதல் உடல் அன்னமய கோஷா எனும் உணவு உடம்பாகும்.உணவு மண்ணிலிருந்து வருவதால் அதை உண்டு தான் உயிர் வாழ்கிறாய்.மொத்ததிற்கும் அடிப்படையாக உணவு உடம்பு அமைந்துள்ளது.மிக லகுவான உணவாக உண்ணும்போது எல்லாமே இயல்பாக செயல்படுகிறது.சீரனத்திற்கு ஒத்துவராத உணவை உண்ணும்போது உடல் வேறுவிதமாக செயல்பட ஆரம்பிக்கிறது.உன்னை விரைவில் சோர்வடைய வைத்து உறக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது.விரதங்கள் இருப்பது அதனால் தான்.விரதங்கள் இருக்கும்போது உணவு உடம்பின் செயல்பாடுகளை உணர்ந்து அதிலிருந்து விலகி இருத்தல் அவசியம்.உணவின் மீதே கவனத்தை வைத்து விரதமிருந்தால் உடலில் அமிலங்கள் சுறந்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருக்க இந்த அன்னமய கோஷா எனும் உணவு உடல் அவசியமாகும்.இந்த உடலில் மட்டும் கவனமாக இருப்பவன் உணவே வாழ்வென இருப்பவன் மிக ஆபத்தானவனாகவும் அடுத்தகட்ட  உடலுக்குள் நுழைய முடியாதவனாகவும் இருப்பான்.

அடுத்து பிரணாயம் கோஷா.பிராண உடல் என்பதாகும்.இது தான் சக்திக்குண்டான உடல்.மின் தன்மையானாது, காந்த தன்மையானது,கவர்ச்சிதன்மையானதாக உள்ளது.இந்த பிராண உடலில் மிகுந்த கவனமுள்ளவனின் அருகே மற்றவர் செல்லும்போது அவர்களுக்கும் அந்த சக்தி பரவுகிறது.அவர்களும் புதுவிதமாக தெம்பாகிறார்கள்.ஆனால் முதலுடம்பான உணவு உடலில் வாழும் லட்சக்கணக்கான மக்களின் அருகே நீ செல்லும்போது அவர்கள் உன் உடலிலுள்ள சக்தியையும் உறிந்துவிடுவார்கள்.ஊணுடல்வாதிளின் அருகே வாழ்வது மிக அருவருக்கத்தக்கதாகவும் அபாயகரமானதாகவும் அமையும்.உணவுக்கு அடிமையானவன் வளர்ச்சியடையாதவனாக குழந்தையாகவே தான் இருப்பான்.பிரணாயம கோஷா உடலுக்குள் அமைந்திருந்தாலும் உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டத்தை ஏற்படுத்துகிறது.இந்த பிராண உடல் உன் உணவு உடலின் நோயை ஆறு மாதங்களுக்கு முன்பே காட்டிகொடுத்துவிடும்.பிராணஉடல் சுத்தமாக இயங்கும்போது உன் ஊன்உடல் அபாரமாக இருக்கும்.அதனால் தான் யோக கற்றுதருபவர்கள் முதலில் பிரணாயமத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.மனித உடல் இறந்தாலும் பதிமூன்று நாட்களுக்கு அந்த பிரணாயம உடல் இறப்பதில்லை.அந்த ஒளிவட்டம் சுகாதாரமாக இயங்கிகொண்டிருக்கும்.

ஞானமடைந்தவர்களின் உடல்களை எரிக்காமல் புதைப்பதற்கு காரணம் அவர்களின் உன்னதமான பிராண உடலின் ஒளிவட்டம் உலகில் நிலைத்திருக்கும் என்பதால் தான்..எரித்துவிட்டால் அது இரண்டொரு நாட்களில் வானில் பரவெளியில் கறைந்துவிடும்.அரவிந்தர் போன்றவர்களின் உடலை அழிக்காமல் சமாதியில் வைத்திருப்பதற்கு காரணம் அவர் ஆன்மா அங்கேயே இருக்கவேண்டும் என்பதற்காக தான்.சில நேரங்களில் அரவிந்தரின் பாதசுவடுகள் இருப்பதை அங்கே நீங்கள் காணமுடியும்.அவர் ஆன்மா பிராண உடல் இன்றும் ஆரோக்கியமாக தான் இயங்குகிறது.அவர் பிரணாயம கோஷாவில் இயங்குபவர் தான்.

அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினார்கள்.ஒரு ஆரோக்கியமான ஓட்டபந்தய வீரரை அழைத்து ஒரு குழந்தையை பார்த்து அதன் நடவடிக்கைகள் போலவே ஒருநாள் முழுக்க நடிக்கச் செய்தார்கள்.எட்டு மணிநேரத்தில் அவன் கீழே விழுந்துவிட்டான்.ஒரு சாதாரன குழந்தையிடம் அவன் தோற்றுவிட்டான்.ஏனெனில் குழந்தை குறைவாக உணவு உண்டாலும் பரபரப்பாக இயங்குகிறது.அதற்கு காரணம் அது எப்போதும் மூச்சை தன் தொப்புள் வரை இழுக்கும்.மனிதன் தன் இருதய பகுதியிலிருந்து சுவாசம் மேற்கொள்கிறான்.தொப்புளில் மனம் செலுத்தி மூச்சு செயல்படும்போது உடல் ஆரோக்கியமாகவே இருக்கும்.மார்புகூட்டில் மூச்சை இயக்கும்போது விரைவில் சோர்ந்து போகிறாய்.ஆனால் ஒரு வீடு எரிந்துகொண்டிருக்கும்போதோ வெள்ளம் வரும்போது ஒரு மிருகம் துறத்தும்போதோ மார்புக்கூட்டிலிருந்து தான் மூச்சை செலுத்தவேண்டும்.அங்கே தான் உடனடி சக்தி கிடைக்கும் .உடனடியாக் தப்பிக்கலாம்.ஆனால் மற்ற நேரங்களில் தொப்புள் வரை மூச்சை செலுத்துவதே சுகமனதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும்.

மூன்றாவது மனோஉடல்.மனோமய கோஷா எனப்படும் உடலாகும்.இது மனிதன் எனும் சொல்லில் வந்ததாகும்.இதுவே MAN என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.இந்து கிருஸ்தவ முகமதியர்களிடம் இது தான் முக்கியமானதாகும்.இவர்களிடம் இரவல் வாங்கப்பட்ட மனமே இருப்பதால் மனோஉடல் வளர்ச்சியடையாமலே போய்விடுகிறது.இவர்கள் ஜெராக்ஸ் மெஷினாக கார்பன் காப்பியாக வாழவே பழக்கப்பட்டுள்ளனர்.எந்த நேரத்திலும் இரவல் மனதிலே மட்டுமே முடிவுகள் எடுப்பார்கள்.சொந்த மனம் இவர்களுக்கு செயல்படாமலே இருக்கிறது.மற்றவர்களோடு ஒப்பிடும் மனப்பான்மையில் வருவது தான் நம்பிக்கையெனும் சொல்.நம்பிக்கை என்பதே தவறான மனம் என்றே பொருள் கொள்ளவேண்டும்.சுயமாக வாழ்பவர்களிடையே நம்பிக்கை என்ற சொல் தேவையில்லாமல் போகிறது.அவர்களிடம் மட்டுமே மனோ உடல் வளர்ச்சியடைகிறது.

அடுத்து நாங்காவது உணர்வுடல்.விக்யானமய கோஷா எனப்படுகிறது.இது மிக தெளிவானது.இது போராடுவதில்லை .நடப்பது நடக்கும் என காத்திருக்கும்.அது நடக்கும்போது உணர்ந்துகொள்ளவேண்டியது தான்.ஐந்தாவதாக ஆனந்த உடலெனும் ஆனந்தமய கோஷா.இது உன்னிடத்திலிருந்து வெகுதொலைவிலுள்ளதாகும்.இது ஆசிர்வதிக்கப்பட்ட உடலாகும்.உணர்வுகளுக்கெல்லாம் மேம்பட்ட உடலிதுவாகும்.
மேற்கண்ட ஐந்து உடல்கள்  ஐம்பூதங்களால் ஆனதாகும்.பூமி, நெருப்பு,நீர், காற்று ஆகாயம் என பிணைக்கப்பட்டது தான் நமது உடல்.

No comments:

Post a Comment