Wednesday, November 23, 2016

Maharishi can message Nov"22

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !!

இன்றைய சிந்தனை:

நவம்பர் 22 :

பூரணசக்தி - குறுகிய ஆற்றல் :

ஆதியென்றும் பிரம்மம் என்றும் சொல்லப்படும் சர்வ வியாபக பூரணசக்தியே "நாம்" அல்லது "நான்" என்பதாகும் என்று ஒரு நண்பருக்கு விளக்கம் சொன்னேன். அவருக்கு அந்த அத்வைதத் தத்துவம் புரியவில்லை. நாம் பிரம்மமா? பிரம்மம் சர்வ வல்லமையும் உடையது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆகையால் அத்தகைய பிரம்மம் நாம் எனில் ஜீவன்களின் இன்ப துன்பச் சுழலுக்கே காரணமாக இருக்கும் இந்த உலகை ஊதி அழித்துவிட முடியுமா? ஏதோ அதைச் செய்து காட்டுங்கள் என கேலியாக கேட்டார்.

அதற்கு, ஆம்! பிரம்மம் என்ற நிலையில் நமக்கு சர்வ வல்லமையும் இருக்கிறது. ஆனால் எண்ணம் மட்டும் இல்லை. அப்படி ஏற்பட்டவுடன் அந்த நிலைக்கு அறிவு என பெயரிட்டு அழைக்கிறோம். இந்த அறிவு என்ற நிலையில் எந்த சோதனையோ நடத்தவெனில், அந்தச் சக்தி சொரூப அளவில் மட்டும் சுருங்கி அதற்கேற்ற ஆற்றலுடன் மட்டிலும் செயலாற்றுகின்றது.

ஆகவே எண்ணும் நிலையில் எண்ணம் தோன்றும். உருவ அளவிலே ஒடுங்கிய - குறைவுபட்ட - பின்ன சக்தியாகவும், எண்ணமற்ற நிலையில் நிறைந்த நிற்விகற்ப பூரணமாகவும், இருக்கிற நம் நிலையை அறிவைக் கொண்டு ஆராய்ந்து தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என விளக்கினேன்.

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment