Wednesday, November 2, 2016

கொசுக்கடியிலிருந்து மீள...*

*
கொசுக்கள் உயிர்க் கொல்லியாகவும் உள்ளன
என்ற உண்மை,
சென்னையிலும், பிற ஊர்களிலும் பரவும்
‘டெங்கு’ காய்ச்சல் மூலம் அனைவரும் புரிந்துள்ளனர்!

பரிதாபத்திற்குரிய முறையில்
பல குழந்தைகள் உயிரைக்கூடக்
குடித்துள்ளன!

சென்னை மாநகரில்
மாடி வீடுகளில் உள்ளவர்கள் கூட
கொசுக்கடிக்கு விலக்கானவர்கள் அல்ல என்றால்,

ஏழை - எளிய,
நடுத்தர
மக்களின் நிலைமை பற்றி விளக்கவா ..?

அண்மையில், நமது அருமை
குடும்ப நண்பரும்
ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைமை அதிகாரியும்
பண்பட்ட
படிப்பறிவுமிக்கதோழருமான திரு.அ.ராச்மோகன்
ஐ.பி.எஸ்.
அவர்கள்
எனக்கு அனுப்பிய கடிதத்தினையும் அதன் கருத்துரையையுமே
இந்தக் கட்டுரை விளக்கும்....
👇�👇�👇�👇�

படித்து,
நீங்களும்
அப்படிச் செய்து பயன்பெறலாம்!

சில மாதங்களுக்கு முன்
இக்கருத்தைப் படித்து
நானே நடைமுறைப் படுத்திப்
பயன் அடைந்துள்ளேன்.

எளிய
அதிக செலவில்லா
தற்காப்பு
சுகாதார முறையை அனைவரும் கடைப்பிடித்தாலே பயன் ஏற்படும்...

கற்பூரம் இயற்கையாகக் கொசுக்களை விரட்டக்கூடிய  தன்மை உள்ளதாகும்.

பக்க விளைவுகள் ஏதுமில்லாமல்,
குறைவான செலவில்
கற்பூரத்தைக் கொண்டு
கொசுக்களை எளிதாக
விரட்டி விடலாம்.

கற்பூரத்தைக் கொளுத்த வேண்டிய  தேவையும்  கிடையாது.

கீழ்க்கண்ட
*3 வழிமுறைகளில் கற்பூரத்தைப் பயன்படுத்திக் கொசுக்கள் நம்மை அண்டவிடாமல் செய்யலாம்.....*

1. கடைகளில் விற்கப்படுகின்ற கற்பூரத்தில் இரண்டு  வில்லை களை வெற்றுத் தரையில் வைத்திருக்க வேண்டும்.
அப்படி வைக்கப்படுகின்ற ஒரு மணி நேரத்தில் கொசுக்கள் இல்லாமல் போவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.

இதுபோன்று காலையிலும் மாலையிலும் இரண்டு முறை செய்யும்போது அந்தப் பகுதிகளில் கொசுக்கள் இல்லாமல் போகும்.

2. அறையின்
இரு வேறு மூலைகளில் கொசுக்கள் எங்கெல்லாம் தஞ்சம் அடைகின்றன என்று தெரிகிறதோ அப்பகுதிகளில்
இரண்டு
கற்பூர வில்லைகளை வைக்கும்போது,
அவை  சிறிது சிறிதாக ஆவியாகிக் கொசுக்களை விரட்டுவதுடன் காற்றையும் தூய்மைப்படுத்திவிடுகின்றன.

3. அகலமான சிறிய பாத்திரம் அல்லது தட்டில் தண்ணீரை நிரப்பி
அதில் இரண்டு கற்பூர வில்லைகளைப் போட்டுவைக்க வேண்டும்.
படுக்கை அறையில் அப்பாத்திரத்தைத் தண்ணீருடன் கற்பூரத்தையும் சேர்த்து வைக்கும்போது,

தண்ணீரில் சிறிது சிறிதாகக் கற்பூரம் கரையும்.

சராசரியான
தட்ப வெப்பத்தில் தண்ணீர் ஆவியாகும்போது,
அப்பகுதி முழுவதும் கற்பூரத்தின் மணம் பரவும்.

சிறிது வெதுவெதுப்புடன் உள்ள தண்ணீர் என்றால் இச்செயல் இன்னும் வேகமாக இருக்கும்.

அறையின் அளவுக்கு ஏற்றவாறு தண்ணீர் மற்றும் கற்பூரத்தின் அளவு மாறுபடும்.

ஆக,
கற்பூரத்தின் தன்மையால் கொசுக்கள் எளிதில் விரட்டப்படுவதை
நேரடியாக உணரலாம்.
செய்து பாருங்கள்....

மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

No comments:

Post a Comment