Monday, May 16, 2016

மார்பு சுவாசத்தை வயிறு சுவாசமாக மாற்றுவது எப்படி

மார்பு சுவாசத்தை வயிறு சுவாசமாக மாற்றுவது எப்படி?கண்டுபிடிக்கும்முறைபெரும்பாலான மனிதர்களும் மார்பு வழியாகவே சுவாசிக்கின்றனர்.உங்களது சுவாசம் மார்பு சுவாசமாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளே இழுக்கும்போதும்உங்களது மார்புக்கூடு விரியும்; முன்னே வரும். மூச்சை வெளியே விடும்போது மார்புக்கூடு சுருங்கும்; பின்னே செல்லும்.உங்களது சுவாசம் வயிறு சுவாசமாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் ஒவ்வொரு முறை மூச்சை உள்ளே இழுக்கும்போதும்வயிறு முன்னே வரும். மூச்சை வெளியே விடும்போது வயிறு உட்புறமாகச் சுருங்கும்.இதைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், கீழ்க்கண்ட இரு முறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.வழிமுறை-1● ஒரே அளவுள்ள இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.● உங்களது படுக்கையில் நேராகப் படுத்துக்கொண்டுஒரு புத்தகத்தை உங்கள் மார்புமீதும், மற்றொன்றை வயிற்றின்மீதும்வைத்துக்கொள்ளுங்கள்.● ஆழ்ந்து சுவாசியுங்கள்.● எந்தப் புத்தகம் அதிகமாக மேலும் கீழும் அசைகிறது என்பதைப் பாருங்கள்.● ஒவ்வொரு சுவாசத்தின்போதும் உங்களது மார்பின்மீது இருக்கும் புத்தகம் மேலும் கீழும் அதிகமாக அசைந்தால் உங்களது சுவாசம் மார்பு சுவாசம்.● மாறாக, வயிற்றின்மேல் வைத்த புத்தகம் அதிகமாக அசைந்தால் உங்களது சுவாசம் வயிறு சுவாசம் என முடிவு செய்யலாம்.வழிமுறை-2● ஒரு இஞ்ச் டேப்பை எடுத்து, மூச்சை முழுவதுமாக வெளியே விட்ட நிலையில் உங்களது மார்பின் சுற்றளவை அளந்துகொள்ளுங்கள்.● அடுத்ததாக மூச்சை முழுவதுமாக வெளியேவிட்ட நிலையில் உங்களது வயிற்றின் சுற்றளவை அளந்து குறித்துக்கொள்ளுங்கள்.● அடுத்து மூச்சை முழுதாக உள்ளே இழுக்கும்போது மார்பு எத்தனை சென்டிமீட்டர்கள் விரிகிறது, வயிறு எத்தனை சென்டிமீட்டர்கள் விரிகிறது என்பதை அளந்துகொள்ளுங்கள்.● மார்பு அதிகம் விரிந்தால் உங்களது சுவாசம் மார்பு சுவாசம்.● மாறாக வயிறு அதிகமாக விரிந்தால் உங்களது சுவாசம் வயிறு சுவாசம்.இந்த இருமுறைகளில் ஏதாவது ஒன்றின் மூலம் உங்களது சுவாசம் எந்த வகை என்பதை முதலில் தீர்மானியுங்கள். அது மார்பு சுவாசமாக இருந்தால், அதை வயிறு சுவாசமாக மாற்றியமைக்க வேண்டும்.அதற்கான எளிய வழிமுறையைக் காணலாம்.வயிறு சுவாசப் பயிற்சிபிராணயாமம் கற்றுக்கொண்ட பலர் அதைத் தொடர்ந்து பயிற்சி செய்வதில்லை. ஏன் என்று கேட்டால் பெரும்பாலும் நேரமின்மையையே காரணமாகக் கூறுவார்கள்.இந்த வயிறு சுவாசப் பயிற்சியைப் பொறுத்தவரையில்,அதற்கென தனியே ஒரு நேரத்தை ஒதுக்கிச் செய்யவேண்டியதில்லை. ஒரு நாளில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் செய்யலாம்.● உங்கள் உள்ளங்கைகளை வயிற்றின்மேல் வைத்துக்கொள்ளுங்கள்.● நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.● ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுங்கள். மூச்சை உள்ளே இழுக்கும்போது வயிற்று தசைகள் முன்னோக்கி நகரவேண்டும். மார்புப் பகுதியில் அதிக அசைவு வேண்டாம்.● மூச்சை உள்ளே இழுத்து முடிந்தபின் சில நொடிகள் அதை வெளியே விடாமல் உள்ளேயே தக்க வைத்துக்கொள்ளுங்கள்.● அடுத்து மூச்சை முழுவதுமாக வெளியே விடுங்கள். இப்போது உங்களது வயிற்றுப் பகுதி தசைகள் முழுவதுமாக உள்நோக்கிச் செல்லவேண்டும்.● முழுவதும் மூச்சை வெளியே விட்டபின் சில நொடிகள் அதே நிலையில் இருந்தபின்னர் அடுத்த மூச்சை உள்ளே இழுக்கவும்.● மூச்சை நிதானமாகவும், ஆழமாகவும் இழுத்து விடுங்கள்.● இவ்வாறு பத்து முறை வயிறு சுவாசம் செய்தபின் நிறுத்திக் கொள்ளலாம்.● ஒரு நாளில் 10 முதல் 20 முறை வரையிலும் இந்தப் பயிற்சியை அவ்வப்போது செய்யவும்.● ஒவ்வொரு முறையும் பத்து சுவாசங்கள் போதும்.● பயணம் செய்யும்போதும் அல்லது அலுவலகத்தில் நேரம் கிடைக்கும்போதும் இதைச் செய்யலாம்.● ஒருமுறை பயிற்சி என்பது பத்து சுவாசங்கள் மட்டுமே. இதற்கு அதிகபட்சமாக 90 நொடிகள் (ஒன்றரைநிமிடங்கள்) மட்டுமே ஆகும்.● உணவு உண்டவுடனே மட்டும் இப்பயிற்சியைச் செய்யவேண்டாம். பிற வேளைகளில் எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.பலன்கள்● ஒரு நாளில் 10 முதல் 20 முறை வரையில் இந்த பயிற்சியைச் செய்வது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றுதான்.● தொடர்ந்து இவ்வாறு செய்துவரும்போதுபடிப்படியாக உங்களது மார்பு சுவாசம் வயிறு சுவாசமாக மாறிவிடும்.● சுமார் மூன்று மாதத்திலிருந்துஆறு மாதங்களுக்குள்ளாக உங்களது சுவாசம் முழுமையாக வயிறு சுவாசமாக மாறிவிடும்.இதை எந்த வயதினரும் செய்யலாம். வயது வரம்பு எதுவும் கிடையாது. படுத்துக்கொண்டும்கூட இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.பிராணமய கோசத்தை வலுவாக்கும் பிற வழிமுறைகள்சுவாசம் சரியான முறையில் இல்லையெனில் நமது பிராணமய கோசம் பாதிக்கப்படும்.இந்த பாதிப்பு ஒரு குறிப்பிட்ட அளவிற்குமேல் செல்லும்போது நோய்கள் உருவாகும்.இவ்வாறு உருவாகும் நோய்களை குணப்படுத்த மருந்து மாத்திரைகள் மட்டும் போதாது. பிராணமய கோசத்தை தகுந்த மூச்சுப் பயிற்சிகளின் மூலம் வலுப்படுத்தினால் மட்டுமே அந்த நோய்கள் முழுமையாக அகலும்.நமது முன்னோர்கள் பலவகையான பிராணாயாம முறைகளைக் கண்டுபிடித்து வைத்துள்ளனர். நோயின் தன்மையைப் பொறுத்து, நோயாளியின் உடல்கூறின் அடிப்படையில் அவருக்கு எந்த வகை பிராணாயாமப் பயிற்சி அளிப்பது என்பதை முடிவு செய்யவேண்டும்.யோகாசனங்களிலும்மூச்சுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது.ஆசனம் (உடல்), மனம், மூச்சு ஆகிய மூன்றும் ஒன்றாக இணையும்போதுதான்யோகாசனங்களின் முழுப் பலனையும் பெறமுடியும். பிராணமய கோசத்தை வலுவாக்கும் யோகாசன மூச்சுப் பயிற்சிகளும் உள்ளன.சாதாரண மூச்சுப் பயிற்சிகளைவிடவும் மிகவும் சக்திவாய்ந்த பயிற்சிகள் தந்திர யோகத்தில் உள்ளன. தந்திர யோக உயர்நிலை (மூன்றாம் நிலை) பயிற்சிகளில் இவற்றைக் கற்றுத் தருகிறோம்.தந்திர யோக மூச்சுப் பயிற்சிகளில் முத்திரைகளோடு இணைந்து செய்யும் சில மூச்சுப் பயிற்சிகள் உள்ளன. இவற்றுள் முக்கியமானவை என கீழ்க்கண்டவற்றைக் கூறலாம்.● பிராண முத்திரை பிராணாயாமம்● ஞான முத்திரை பிராணாயாமம்● சின் முத்திரை பிராணாயாமம்● ஆதி முத்திரை பிராணாயாமம்● பூமி ஸ்பாரிச முத்திரை பிராணாயாமம்● கீச்சாரி (கேசரி) முத்திரை பிராணாயாமம்இந்த தந்திர யோகப் பிராணாயாம முறைகளை ஒரு தந்திர யோக குருவிடமிருந்துநேரடியாகக் கற்றுக்கொள்வதே சரியான முறையாகும்.பிராணாயாமத்தின்பல வகைகள்சாதாரண பிராணாயாமப் பயிற்சிகளிலேயே வெவ்வேறு வகைகள் உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான மூச்சுப் பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன. இவற்றுள் பிரபலமானவை என சுமார் 40வகையான பிராணாயாம முறைகள் உள்ளன.வழிமுறைகள் வெவ்வேறாக இருந்தாலும் குறிக்கோளும், பலனும் ஒன்றுதான். எந்தவகை பிராணாயாமமாக இருந்தாலும் அதில் நான்கு பகுதிகள் உண்டு.1. பூரகம்2. ரீச்சகம் (ரேசகம்)3. அந்தரங்க கும்பகம்4. பகிரங்க கும்பகம்● மூச்சை உள்ளே இழுப்பதையே பூரகம் என்கிறோம். (உள் மூச்சு).● மூச்சை வெளியே விடுவதே ரீச்சகம். (வெளி மூச்சு).● உள்மூச்சிற்கும், வெளி மூச்சிற்கும் இடையில் மூச்சை சற்று நேரம் உடலினுள்ளே தங்க வைப்பதே அந்தரங்க கும்பகம்.● மூச்சை முழுவதுமாக வெளியே விட்டபின் அடுத்த உள்மூச்சை இழுக்கும் முன்னர் சிறிய இடைவெளி விடுவதே பகிரங்க கும்பகம். சில குறிப்பிட்ட பிராணாயாமப் பயிற்சிகளில் மட்டுமே இந்த பகிரங்க கும்பகம் செய்யப்படுகிறது.இவை நான்கிற்குமே ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு. வெவ்வேறு பயிற்சிகளில் இவை வெவ்வேறாக இருக்கும்.தச வாயுக்களுக்கான பயிற்சிகள்பிராணன் என்பது பத்துவிதமான வாயுக்களால் (தச வாயுக்கள்) உருவாவது என்பதை ஏற்கெனவே கண்டோம். இந்தபத்து வாயுக்களுக்கும்தனித்தனி பணிகளும் செயல்களும் உள்ளன என்பதையும் கண்டோம். பிராணமய கோசம் என்பது இந்த தச வாயுக்களால் உருவான கோசம்.தச வாயுக்களில் முக்கியமான வாயுக்கள் ஐந்து.● பிராணன்● அபானன்● உதானன்● வியானன்● சமானன் —  by.pp.(குறிப்பு- முறையாகப்பயிற்சிபெற்ற ஆசிரியர்மூலம் செய்வது நன்று)

1 comment: