நீ எதை பிறருக்கு கொடுக்கின்றாயோ அதை உனக்கே கொடுத்துகொள்கிறாய்.
அன்பு அன்பையே தட்டி எழுப்புகிறது.
வெறுப்பு வெறுப்பையே தட்டி எழுப்புகிறது. நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திருப்பிக் கிடைக்கிறது .
இது ஒரு அடிப்படை இறைமை விதி.
ஆனால் நாம் நம் நடைமுறை வாழ்கையில் முட்களை கொடுத்துவிட்டு பூக்களை எதிர் பார்க்கிறோம்.
கற்களை விதைத்துவிட்டு அறுவடைக்காக காத்திருக்கிறோம்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இதை உணரகக் கூட முடியாத நிலையில் தான் இன்று வாழ்கிறோம்.
ஏனெனில் நம் முழு நடத்தையுமே மற்றவர்களை நோக்கியே இருக்கிறது இது ஒரு செயற்கை தன்மையை வாழ்கைக்கு கொடுத்துவிடுகிறது ,இந்த செயற்கையில் நம் நிஜம் என்ன என்பதை மெல்ல மெல்ல மறந்து விடுகிறோம்.
மனிதனின் பல துன்பங்களுக்கு காரணம் இந்த போலியான முகமூடிகளே.
இந்த முகமுடிகளை தற்காத்துக் கொள்வதற்காகவே அணைத்து செயல்களையும் செய்கிறோம்.
இதற்கான வேர் எங்கே என்று ஆராய்ந்தால் கிடைக்கும் பதில் சற்று அதிர்ச்சியாகவே உள்ளது.
இதற்கான முழு முதல் காரணம் என் அனுபவ பதில் நாம் வளர்க்கப்பட்ட விதம் மட்டுமே.
உங்கள் அனுபவத்தை ஆராய வேண்டியது உங்கள் பொறுப்பு.
உண்மையில் ஆரம்பத்திலிருந்து நாம் வாழ அனுமதிக்கபடவில்லை.
வளர மட்டுமே அனுமதிக்கபடுள்ளோம்.
அடிபடையில் மனித உயிர் இயங்குவதற்கு இரண்டு பரிமாணங்கள் தேவை படுகின்றன.
ஒன்று உடல் வளர்சிக்கான உணவு
இரண்டவது உயிர் வளர்சிக்கான தண்னுணர்வு.
இதைத்தான் இயேசு பிரான் மனிதன் ரொட்டியினால் மட்டுமே வாழ முடியாது என்று கூறினர்.
ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் அறியாமையின் காரணமாக அவர்கள் குழந்தையை ஒரு தனி மனிதனாக உருவாக்குவதற்கு பதில் குழந்தையை சமுதாய வார்ப்பில் உற்றி எடுத்த அச்சுகளாகவே உருவாக்கிவிடுகின்றனர்.
இது அவர்களின் சொந்த தனிப்பட்ட தவறல்ல அவர்கள் வளர்க்கப்பட்ட விதமே இதற்கு காரணமாகிறது.
இங்கு ஏன் பெற்றோரின் பங்கு அவசியமாகிறது என்றால் அவர்கள் தான் நமக்கு வாழும் உதாரணங்கள்.
அவர்கள் நிலையை புரிந்து கொள்வதன் மூலம் நம் நிலையை நாம் எளிதாக உணரலாம்.
பொதுவாக மனிதன் உடல் சார்ந்து இருபதற்கும் தன்ணுணர்வுடன் இருப்பதற்கும் ஒரு சம நிலை தேவை படுகிறது இந்த சம நிலையில் தான் முழு வாழ்க்கையும் உள்ளது.
இந்த சம நிலையில் வாழும் மனிதன் தன் 70 அல்லது 75 வயதில் முழுமையான ஆசிர்வதிக்கப்பட்ட மனநிலையிலும், உள் மலர்ச்சியிலும், மனநிறைவிலும் இருப்பர்.
இந்த வயதில் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களை பார்த்தாலே நமக்கு நாம் எப்படி வருங்கலத்தில் இருப்போம் எனபது உள்ளங்கை நெல்லிக்கனி .
நம்மையும் நம் சூழ்நிலைகளையும் தெளிவாக ஆராய்ந்தவர்களுக்கு ஒன்று மட்டும் நிச்சயம் புரிய வரும்.
நம் வாழ்கையில் மிக அவசியமான அடிப்படை மாறுதல்கள் தேவை படுகிறது என்பதே அது.
இந்த அவசிய அடிப்படை மாறுதல்கள் இரண்டு நிலைகளில் செய்யப்படவேண்டும் முதல் நிலை நம் கடந்த காலத்தில் இருந்து நாம் வெளி வர வேண்டும்.
இதை சொல்வது மிக சுலபம் செய்வது சற்று கடினமானது.
நாம் இந்த முயச்சியில் தான் பெரும்பாலும் தோற்றுப்போவோம்.
ஏன் எனில் நம் கடந்த காலம் முழுவதும் நம் வாழாத அனுபவங்களைச் சுற்றியே தொங்கிக்கொண்டிருக்கிறது எதுவுமே நிறைவு பெறவில்லை.
ஓர் ஈடுபாடு இல்லை எதுவும் உண்மையாக தெரியவில்லை எப்படியோ கடந்திருகிறது இதனால் தான் நம் கடந்த காலம் நம்மை விட்டு விலகாமல் பிடித்துக்கொண்டிருகிறது.
நம் மனம் மிக நுட்பமானது அது கடந்த காலத்தில் நமக்கு கிடைத்த அனைத்து நல்லவைகளையும் மிக சுலபமாக தூக்கி போட்டு விட்டு வாழாத ஒரு சிறு பகுதியை மட்டுமே பெரிதுபடுத்தும் என்று ஞானிகள் வழி காட்டுகின்றனர்.
இதை நாம் சரியாக புரிந்து கொண்டால் நம் கடந்த காலம் என்பது கவலைகள் கடந்த காலமாகவே இருக்கும் எப்படி சரியாக ஜீரணிக்கபட்ட உணவிலிருந்து உடல் சத்துகளை பெறுகிறதோ அதே போல் கடந்த காலத்தை ஜீரணித்து அதிலிருந்து சத்தான அனுபவத்தை மட்டும் எடுத்து கொள்ளுங்கள் இதுவே ஏன் அனுபவத்தில் நான் கண்ட வழி .
எனவே நம் கடந்த காலங்களை நம் தொடர்பு எல்லைக்கு அப்பால் வைப்போம் புது வாழ்வை தொடங்குவோம்.
இந்த புது வாழ்க்கையே நமக்கு தேவையான மாற்றத்தின் இரண்டாம் நிலை ஆகும்.
புதிய வாழ்க்கை என்று மலாச்சியடைந்த மனிதர்கள் குறிப்பிடுவது என்னவென்றால்,
அன்பு, அமைதி, பரவசம், படைப்பாற்றல் ,விழிப்புணர்வு மற்றும் சக்தி.
இந்த குனங்களைகொண்ட அழகான உலகமே நமக்கு இபொழுது அவசியமான தேவை.
இந்த புதிய உலகிற்கு நமக்கு தேவை எழுச்சி மிக்க தனி மனிதர்கள்.
நாம் அதிக அன்புடைமையை உருவாக்க வேண்டும்.
அதற்கு இந்த உலகில் அதிக தியான சக்தியை உருவாக்க வேண்டும்.
இங்கே எழுச்சி என்பது கடந்த காலத்தின் தொடர்பில் இருந்து விடுபடுதலேயாகும்.
இதற்காண முதல் தேவை நமக்குள் நாமே ஒருங்கினைய வேண்டும்.
முதலில் நாம் நம் உடல், மனம், ஆன்மா இவற்றை நமக்குள் பிளவு படாமல் ஒருங்கினைக்க வேண்டும்.
இந்த ஒருங்கிணைப்பிற்கு பெயரே தியானம்.
இப்படி நமக்குள் நாம் ஒருங்கிணைந்தும் மற்றவரோடு ஒத்திசைந்தும் வாழும் வாழ்வே மகத்தான வாழ்வாகிறது......by.pp
No comments:
Post a Comment