மரணம் - ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1
நீண்ட நாட்களாகவே எனக்கு மரணம் அடைந்தவர்கள் வீட்டில் பதிமூன்றாம் நாளன்று கிரேக்கியம் எனப்படும் புனித சடங்கின் மாலையில் கூறப்படும் 'ஆத்மாவின் பயணக் கதை' குறித்து எழுத வேண்டும் என்ற ஆவல் இருந்தது. நான் பல இடங்களில் அந்தக் கதைகளைக் கேட்டு இருந்தாலும் அவற்றைக் கூறும் பண்டிதர்கள் இடை இடையே ஆன்மீக் கதையை விட்டு சற்றே விலகி உலக நடப்புகளைக் சேர்த்துக் கூறி எதை குறித்து அவசியம் கூற வேண்டுமோ அது குறித்து கூறாமல் அந்த கதையில் இருந்து விலகிச் செல்கிறார்கள் என்பதை நேரிடையாக பல முறைக் கண்டிருக்கிறேன். அந்தக் கதை மூலம் உடலைவிட்டு வெளியேறும் ஆத்மா எங்கு செல்கிறது, அதன் அமைதியான பயணத்துக்கு நாம் என்ன செய்ய வேண்டும், இறந்தவர்களின் வீட்டில் செய்யும் சடங்குகள் என்ன, அந்த இறப்பை நாம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக அதே நேரத்தில் அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் ஒரு பாடம் போல எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது தாத்பர்யம். சமீபத்திலும் அப்படிப்பட்ட சடங்குகள் நடைபெற்ற ஒரு இடத்தில் கதையைக் கேட்டேன். மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. இறந்தவருக்கு பதிமூன்று நாட்கள் சடங்குகளை எப்படி செய்ய வேண்டும், அதன் அர்த்தம் என்ன, ஆத்மா பயணிப்பது எப்படி போன்றவற்றை கூறாமல் அதை விட்டு விலகிச் சென்று கூறப்படும் கதைகள் போதனாமுறையில் அமைந்தவையாக இல்லாமலும் தாத்பர்யத்தை விட்டு விலகிச் செல்வதும் போலத் தோன்றியது.
ஆகவே அப்படிக் கூறப்பட்ட கதைகள், மற்றும் மயானத்திலும், சடங்குகள் செய்யப்படும் இடங்களிலும் இருந்த சில பண்டிதர்களிடம் பேசிக் கொண்டு அவர்கள் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள், அவற்றைக் குறித்து சுமார் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு இருந்த சிறிய அளவிலான புத்தகம் போன்றவற்றின் விவரங்களை எடுத்துக் கொண்டேன். அவை அனைத்தையும் தொகுத்து இந்த கட்டுரையை எழுதுகிறேன். இதன் மூலம் மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பயணிக்கும் கதை மட்டும் அல்ல உண்மையிலேயே நாம் அனைவரும் இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பதைக் குறித்து சாஸ்திரங்களிலும் அந்த காலத்திலும் என்னென்ன கூறி உள்ளார்கள் என்பதையும், அவற்றின் அடிப்படைக் காரணம் என்ன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் என் அறிவுக்கு உகந்தவகையில் அவற்றை விளக்க முற்பட்டு இருக்கிறேன். இது வேத புத்தகம் போல எழுதப்பட்டு உள்ள கட்டுரை அல்ல. நாம் நம்மை சுற்றி நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பொது நலக் கட்டுரை ஆகும்.
மரணம்-மரணத்தின்போது,சவ அடக்கத்தின்பொது செய்யப்படும் சடங்குகள்/சம்பீரதாயங்கள் பற்றி இவ்வளவு
விரிவான செய்தியை நாம் இதுவரை படித்து இருக்க மாட்டோம்.அய்யா திரு.சாந்திப்பிரியா(N.R.Jayaraman
Retired Govt of India Official. Pass time hobby is to write articles both technical as well as spiritual.) அவர்களின் இந்த க்ட்டுரை தொடரை தொடர்ந்து கீழ்கண்ட லிங்கில் படியுங்கல் :-
No comments:
Post a Comment