Thursday, May 5, 2016

மனித வாழ்வின் நோக்கமும் வெற்றியும்!

   ஆறு அறிவைப்பெற்றிருப்பவன் மனிதன்.

   தோல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகிய ஐந்து உணர் கருவிகளைக்கொண்டு பஞ்சபூதஞ்களையும் அழுத்தம், ஒலி,ஒளி, சுவை வாசனையாக உணர்ந்து சிற்றின்பத்தையும், சிந்தனை அறிவுக்கான மூளையை கருவியாகக்கொண்டு சிந்தித்து பஞ்சபூதங்களுக்கு மூலப்பொருளான ஆன்மாவையும் உணர்ந்து பேரின்பத்தையும் அனுபவித்து மன நிறைவும் அமைதியும் அடைவதே மனித வாழ்வின் நோக்கமாகும்.

     இவ்வாறு வாழ்பவர்களின் மனம் ஆசைகள் ஏதும் அற்ற நிலையில் இறைநிலையோடு கலந்திருக்கும். இறைநிலையோடு மனம் சமநிலையை ஆடைந்வர்களின் உடலுக்கு மரணம் வரும்போது பஞ்சபூதங்களின் கூட்டியக்கம் குலைந்து அவை சடப்பொருளாக உள்ள பஞ்சபூதங்களுடன் கலந்து விடும்.மனிதன் இயற்கை எய்திவிடுகிறான்.

  ஆன்மாவாகிய அறிவும் பஞ்சபூதங்களும்தான் இயற்கை.இந்த இயற்கையில் ஆன்மாவாகிய அறிவு மனிதனில் மனமாகவும்,பஞ்சபூதங்களே உடலாகவும் இயங்குகிறது.

    விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகிய பஞ்சபூதங்களை ஆக்குவதும் இயக்குவதும் நீக்குவதும் ஆன்மா.இதே ஆன்மாதான்  பஞ்சபூதங்களைக்கொண்டு மனித உடல் செல்களைக்கட்டும் சீவாத்மா என்னும் சீவகாந்தமாக விளங்குகிறது.

ஆன்மாவாகிய இறைநிலையேதான் மனித உடலில் சீவகாந்தமாக,மனமாக உள்ளது.ஆற்றலும் அறிவும் சீவகாந்தத்திகு வளம். மனதை ஆமாவோடு இணைக்கும் கலைதான் யோகா.

   மனம் ஆன்மாவோடு இணைப்பு பெற்றதும் மனதுக்கு ஆற்றலும் அறிவும் ஓங்கி மனம் வளப்பட்டுவிடும்.மனம் நல்லதையே நினைக்கும்.நினைப்பதெல்லாம் நடந்துவிடும். பொருள் புகழ், புலனின்ப ஆசைகள் நீறைவேறும்.நிறைவேறாத ஆசைகள் ஏதுமற்றநிலையில் மனம் அமைதியில் நிலைத்திருக்கும்.

  மனதை இறைநிலையோடு எளிதாக இணைக்கும் யோகக்கலைதான் மனவளக்கலை (Sky)

        வாழ்க. வளமுடன்

No comments:

Post a Comment