Sunday, May 1, 2016

பிரச்சினைகளுக்கு தீர்வு காண=====>>           

பிரச்சினைகளுக்கு தீர்வு காண=====>>                                                வாழ்க்கை
என்பது மூச்சு ஆகும்.மூச்சு இருந்தால்"உயிர்
"இருக்கிறது என்கிறோம்.மூச்சு இல்லை
என்றால் உயிர் பிரிந்துவிட்து அல்லது மரணம்
என்கிறோம்.அதாவது வாழ்க்கை என்பது
உள்மூச்சுக்கும் வெளிமூச்சுக்கும்
இடைப்பட்டகாலம் எனலாம்.இந்தக் குறுகிய
காலக்கட்டத்திற்குள் நாம் வாழ்க்கையை எப்படி
செம்மையாக,சிறப்பாக,இன்பமாக வாழ்வது
என்பது முக்கியமாகும்.மானிடப்பிறவி
நமக்கு கிடைத்தற்கு அரிய
பிறவி.பலபிறவிநிலைகளை கடந்துவந்த நாம்
இம்மானிடப்பிறவியில்தான்
உன்னதநிலையை,புத்தநிலையை,இறைநிலையை,முக்திநிலையை,பேரின்பத்தை
அடையமுடியும். பிரச்சினைகள்
வாழ்க்கையின் பகுதியாகும்.சிக்கல்,மோதல்,பிரச்சினை என்பது என்றும்
எப்பொழுதும் நிகழ்ந்துவரும்
உண்மையாகும்.நம்முள் உள்ள சவால் அதனை
எப்படி எதிர்கொள்வது அல்லது எப்படி
சமாளிப்பது என்பதாகும்.சில மோதல்கள்
தேவையற்றவை;வீணானவை.சில
பிரச்சினைகள் அழிவுக்கும் பேரழிவுக்கும்
இட்டுச்செல்லும்.ஆனால் சில சிக்கல்கள்
வாழ்க்கையில் அனுபவங்களாக மாறி
வருங்காலத்தில் பிரச்சினைகளை
எதிர்கொள்ள உதவுகின்றன.இது
வளர்ச்சி,முன்னேற்றம்,குணநலம்
ஆகியவற்றுக்கு சீரியவழி வகுக்கின்றன.நாம்
வீணான தேவையற்ற அழிவைத்தரும்
மோதல்களை தவிர்க்கவேண்டும்.மேலும் அவை
நமது ஆற்றலை,சக்தியை குறைத்துவிடும்.
நம்மிடையே இறுக்கம்,மனஅழுத்தம்,கோபம்
போன்ற உணர்வுகளை மேலோங்கச்செய்து
அமைதியையும்,நிம்மதியையும்
இழக்கச்செய்துவிடும்.உண்மையான
பிரச்சினைக்கான காரணங்களையும்,தீர்வுக்கான அணுகுமுறைகளையும் நாம்
தெரிந்துகொள்வது அவசியம்.இது நாம்
அமைதியாக இன்பமாக வாழ உதவிடும்.
இப்படிப்பட்ட வாழ்க்கையை ஒவ்வொரு
தனிமனிதனும் அமைத்துக்கொள்ளவேண்டும்.இதற்கு உடல்,மனம்,உயிர்
இம்மூன்றையும் செம்மைப்படுத்தி,சீர்படுத்தி,
பண்படுத்தினால் மட்டுமேமுடியும்
.இதற்காகவே அருட்தந்தை வேதாத்திரி
மகரிஷி அவர்களின் சீர்மிகு எண்ணத்தின்
வலிமையால் வடிவமைக்கப்பட்ட
பயிற்சிமுறைதான் மனவளக்கலைபயிற்சி
ஆகும்.இப்பயிற்சியில் உங்களையும்
இணைத்துக்கொண்டு,உங்களின்
உறவுகளையும்,நட்புக்களையம்
இணைத்துக்கொள்ள உங்கள் ஊரிலுள்ள
அல்லது ஊருக்கு அருகாமையிலுள்ள
அறிவுத்திருக்கோயில்கள் மற்றும்
மனவளக்கலைமன்றங்களை தொடர்புகொண்டு
பயிற்சியில் இணைத்துக்கொள்ளுங்கள்.இதை
அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.நன்றி.வாழ்கவளமுடன்..writen By.P.P.sathis

No comments:

Post a Comment