மனிதன் துன்பமில்லாமல் இன்பமாக வாழ,துன்பம் இன்பம் என்பது என்ன? அதை அனுபவிக்கும் நான் யார்? என்னும் கேள்விகளுக்கு தனிமையில் இருந்து சிந்தித்து விடைகண்டு துன்பமில்லாமல் இன்பமாக வாழும் அறிவில் முழுமைபெற வேண்டும் அதுவே ஞானம் என்று வியாச மகரிஷி முதல் வேதாத்திரி மகரிஷி வரை அனைத்து மகான்களும் கூறுகிறார்கள்!
இக்கேள்விகளுக்கு விடை காண்பதற்குத்தான் தனிமையில் இருந்து சிந்திக்கச்சொல்கிறார் மகான் விவேகானந்தர்!
சிந்திப்பதற்கு விளக்கமும் மூளைத்திறனும்தான் வேண்டும்.
சிந்தனைத்திறனை கூட்டிக்கொள்வதற்கான பயிற்சிகள்தான் உடல், உயிர், மனதுக்கான யோகா பயிற்சிகள்!
இப்பயிற்சிகளோடு இன்பம் துன்பம் பற்றிய விளக்கங்கனையும், தன்னைப்பற்றிய விளக்கங்கனையும் மகான்கள் மூலம் பெற்று தனிமையில் இருந்து சிந்தித்து தெளிவு பெறுவதுதான் எளிது.
பேசாமலும், பொருளீட்டும் செயலிலோ புலன் இன்பங்களைத் துய்க்கும் செயலிலோ மனதை ஈடுபடுத்தாமல் அமைதியான சூழ்நிலையில் தவம் செய்வதிலும் புலன்கடந்து சிந்தப்பதிலுமே ஈடுபடுத்துவதே "மௌன நோன்பு". அல்லது தனிமையில் இருந்து சிந்தித்தல்.
மௌனத்தில் சும்மா இருப்பதையும், அறிவில் நிறைவுபெற்று அமைதியடைந்து சும்மா இருப்பதையும் "சும்மா இருக்கும் சுகம்"என்று மகான்கள் சொல்கிறார்கள்
சும்மா இருப்பதற்கு சும்மா இருந்து பழகும் யோகா பயிற்சிதான் "மௌன நோன்பு".
மௌன நோன்பு இருக்கும் கலை அறிவுத்திருக்கோயில்களில் கற்றுக்கொடுக்கப்படுகிறது.
அன்பர்களே வாரீர்!
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment