Thursday, May 5, 2016

மகான்களின் சமாதிகளில் தியானம்?

மகான்களின் சமாதிகளில் தியானம்?

   வாழும் காலத்தில் ஆன்மீக அறிவிலும் துன்பமில்லாமல் வாழும் அறநெறி அறிவிலும் தெளிவு பெற்றவர்களே மகான்கள்.
  மகான்கள், தங்களை நாடி வருபவர்களுக்கு காந்த ஆற்றலையும் ஆன்மீக அறநெறி அறிவையும் வழங்கி அருள்புரிகிறார்கள்.
   மகான்களின் மகா சமாதிக்குப்பின் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே அவர்களின் ஆன்மாவும் இருக்கும். அவ்விடங்களுக்குச்சென்று மனம் ஒன்றி வணங்கும் பக்தர்களின் உடலில் சீவகாந்த ஆற்றல் கூடும்.அதனால் உடல்நோயை குணப்படுத்திக்கொள்ளும் ஆற்றல் பெருகும்.எண்ணத்திற்கு வலிமைகூடும். நினைப்பது நடக்கலாம்.
  ஆனால் ஆன்மீக அறநெறி அறிவு,  அடக்கமாகியிருக்கும் மகான்கள் பெற்றிருந்த அளவில்தான் அவர்களை வணங்கும் பக்தர்களுக்கு கிடைக்கும்.

   வேதாத்திரி மகரிஷி போன்ற மகான்கள் மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் தெய்வீக காந்த ஆற்றலை பெருக்கிக்கொள்ள அகத்தவம் கற்றுக்கொடுக்கிறார்கள்.இவ்வகத்தவத்தை தூய்மையான மனநிலையில் எந்த இடத்திலும் செய்யலாம்.மகான்களின் சமாதிகளில் தவம் செய்யும் போது அங்கே திணிவு பெற்றிருக்கும் காந்த ஆற்றல் பயிற்சியாளர்களுக்கு உதவியாக அமையும்.அவ்வளவுதான்.
ஆன்மீக அறநெறி அறிவை,  வேதாத்திரி மகரிஷி போன்ற மகான்களின் சிந்தனைகளை படித்தும் கேட்டும் இறைநிலையை நினைந்து சுயமாக சிந்தித்தும் பெற்றுவிடலாம்.

   மதம் சார்ந்த மகான்களின் சமாதிகளுக்குச் சென்று தவம் செய்வதில் முழுமையான பலனை அடைய முடியாது. ஆன்மீக அறநெறி அறிவில் தெளிந்த மதம் சாராத மகான்களின் சமாதியில் தவம் (தியானம், Meditation) செய்வது மேலானது.சிறந்தது.

     வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment