Wednesday, May 4, 2016

எண்ணம் சீர்பட தற்சோதனை :

எண்ணம் சீர்பட தற்சோதனை :
------------------------------------------
.

"எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.. எப்படி?
.

எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும்.

எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித்தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட முடியும்.

எண்ணத்தை ஆராய வேண்டுமென்றால் எண்ணத்தால் தான் ஆராய வேண்டும்.

எண்ணத்திற்குக் காவலாகவும் எண்ணத்தையே தான் வைக்கவேண்டும்.

எண்ணத்திற்கு நீதிபதியாகக்கூட எண்ணத்தையேதான் நியமித்ததாக வேண்டும்.

எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக்கொண்டு இருக்கவேண்டும்.

இதுதான் "தற்சோதனை (Introspection)." தற்சோதனையோடு கூடவே நாள்தோறும் பழகி வரும் அகத்தவமாகிய (Simplified Kundalini Yoga) "குண்டலினியோகம்" மன வலிமையை கூட்டி, மனதை பண்படுத்தி சீர்திருத்திக்கொள்ள பேருதவியாக இருக்கும்".
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
.

எண்ணம் சீர்பட தற்சோதனை:
------------------------------------------
.

"அறிவு தன் தேவை பழக்கம், சந்தர்ப்பம்

அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி

அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்

அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள

அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;

ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற

அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை

அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment