Monday, May 9, 2016

சளிக்கு தீர்வு தரும் மருந்துகள்!!!

சளிக்கு தீர்வு தரும் மருந்துகள்!!!

1. குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும்.
2. தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து 1ஸ்பூன் அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும்.
3. ஈரப்பதம் இல்லாமல் மார்பில் தங்கிய சளியை விரட்ட இஞ்சி சாறு அல்லது தேன் சாப்பிட்டால் சளியை வெளியேற்றும். எலுமிச்சை கலந்த தண்ணீரில் நீராவி பிடிக்கலாம். வெந்நீரில் குளிப்பது, குடிப்பது நோய்கிருமிகளை விரட்டும்.
4. கற்பூரவல்லி, துளசி, காம்பு மற்றும் நடு நரம்பு நீக்கிய வெற்றிலை இலைகளை துண்டுகளாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
நெய்யை வாணலியில் விட்டு துண்டுகளாக்கப்பட்ட மூன்று இலைகளையும், மிளகையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
வதங்கிய கலவையை தண்ணீர் விட்டு துவையலாக அரைக்க வேண்டும். அதனுடன் தேவைப்படும் அளவு தேன் சேர்த்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு வழங்கினால், குழந்தையின் நெஞ்சில் கட்டிய சளியும், கோழையும் சுத்தமாக கரைந்து வெளியேறி விடும். குழந்தையும் சுகமாகும்.

http://www.tamilserialtoday.org/

No comments:

Post a Comment