Tuesday, January 26, 2016

ஓஷோ thought

முல்லா நஸ்ருதீன் தன் கடையில் யாராவது ஏதாவது வாங்க வருவாரா என்று பார்த்துக் காத்திருந்தார்.

ஒரு ஆள் வந்தான்.முல்லா தன் கடையில் என்னென்னவெல்லாம் விற்பனைக்கு உள்ளன என்று பேச ஆரம்பித்தவர் பேசிக்கொண்டே இருந்தார்.

வந்தவன் ஒரு வார்த்தை சொல்லவும் சந்தர்ப்பம் தரவில்லை.

கைவீச்சில் அந்த ஆளை ஒரு நாற்காலியில் உட்கார சொல்லி விட்டு டெலிபோனை எடுத்து, "அப்படியா ஒரு கோடிதானே! வாங்கிக்கொள்" என்றார்.

வந்தவனால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை.

"பொறு...பொறு...டெலிபோனுக்கு கனெக்ஷன் கொடுக்க டெலிபோன் கம்பெனியிலிருந்து தான் நான் வந்திருக்கிறேன்" என்றான்.

டெலிபோனுக்குக் கனெக்ஷனே கொடுக்கவில்லை.ஒரு கோடியாவது ஒன்றாவது...பம்மாத்துப் பண்ணினார்.

தொடர்புகள் அறுந்துவிட்ட உணர்வு வந்துவிட்டதா? சரிதான்.அந்தத் தொடர்புகளே மயக்கங்களாகத்தானே இருந்து விட்டன.!

தொடர்பே இல்லை.ஆனால்,பிரார்த்தனைகளைச் சொல்லி நேரடியான லைனில் கடவுளோடு பேசிக்கொண்டு இருந்து விட்டீர்கள்.

திடீரென நான் வந்து உன் டெலிபோனுக்கு இன்னும் கனெக்ஷனே கொடுக்கவில்லை என்பதை உணர வைத்து விட்டேன்.

யாரிடம் நீ பேசிக்கொண்டிருக்கிறாய்? கனெக்ஷன் தராத டெலிபோனில் பிரார்த்தனைகளைக் கொட்டிக் கொண்டிருக்கிறாய்.

வாழ்வோடு தொடர்புடையவனாகிக் கொள்.

ஒரே வழி உனக்குள் போவதுதான்.

ஏனென்றால்,உன்னுடைய அந்த மையத்தில்தான் உன் தொடர்பு இருக்கிறது.

பிரபஞ்சத்திலிருந்து நீ பிரிந்துவிட்டவனல்லன்.பிரபஞ்சத்தோடான உனது தொடர்பே பிரக்ஞை.

அதை உன்னால் பார்க்க முடியாது.

அதனால்,மிகவும் எச்சரிக்கையோடு,கவனிப்போடு,சாட்சியாக நின்றிக்கும் உணர்வோடு ஆழத்துக்கு-அடி ஆழத்துக்குப் போகும்போது அந்த கனெக்ஷனை கண்டுபிடித்து விடுவாய்.

புத்த நிலைதான் அந்த கனெக்ஷன்.

--ஓஷோ--

No comments:

Post a Comment