Wednesday, January 13, 2016

ஆன்மாவும் கற்பும்

ஆன்மாவும் கற்பும்

நாம் எல்லோரும் கற்பு என்றவுடன் அது பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்றே கருதுகின்றோம்

பொதுவாக கற்பு நெறி தவறியவள் என்றாலே , ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் உடல் ரீதியாக தொடர்பு உடையவள் என்றே கருதுகின்றோம்

அதே சமயம் – கற்புடை மகளிர் எது கூறினாலும் அது உடனே நடந்து விடும் என்ற நம்பிக்கையும் நம்மிடையே நிலவுகின்றது – அவர்களை ” கற்புக்கரசி ” என்றே பெருமைப்படுத்துகின்றோம்

கற்புக்கரசியர் வரிசை : கண்ணகி, சீதை, திரௌபதி , வாசுகி என்று தான் கூறுகின்றோமே அல்லாது நம் சொந்தப் பெண்கள் நமக்கு நினைவில் வருவதில்லை

உண்மையில் கற்பு என்றால் என்ன ??

கற்பு என்பது : எப்படி மேற்கூறிய பெண்கள் தங்கள் கணவர்களையே தெய்வமாக கொண்டாடியதால் , அந்த எண்ணத்தின் / பாவனையின் சக்தியினாலும் , அவர்கள் வார்தைகள் அப்படியே நடந்தது

அவர்கள் மற்ற ஆண்களை ஏறெடுத்தும் பார்க்காமல், தங்கள் கணவன் ஒருவனே தெய்வம் என்ற ” ஒருமை ” நிலையில் இருந்ததால் , இயற்கையாகவே , அந்த ஒருமை அவர்களுக்கு – நினைத்ததை நடத்திக் கொடுக்கும் சக்தி வழங்குகின்றது

நமது எண்ணங்கள்/ஆசைகள் ஏன் நிறைவேறுவதில்லை ?? நாம் நினைப்பது ஏன் நடப்பதில்லை ??
ஏனெனில் நமது எண்ணங்களுக்கு பலம் இல்லை

நம் மனமானது ஐந்து இந்திரியங்களுடன் சம்பந்தப்பட்டு எல்லா சக்தியும் வீணாகிவிடுவதால் , நினைக்கும் எண்ணத்திற்கு பலம் இல்லாமல் , எதுவும் நடக்காமலே போகின்றது

அதே சமயம் , மனமானது அசையாமலும் , புலன்களை விட்டுப் பிரிந்து இருந்தாலும், ஆன்மாவை நோக்கி இருந்தாலும் . அதன் சக்தி பன்மடங்கு பெருகி , எண்ணத்திற்கு பலம் கூடி, அது உடனே நிறைவேற்றிக் கொடுக்கின்றது

ஆன்மா அசையாமலும் , தனித்தும் , எண்ணம் எதுவும் இல்லாமல் இருப்பதால் , அந்நிலையே , கேட்டதைக் கொடுக்கும் கற்பகத்தரு – கல்ப விருக்ஷம் என்று கூறுகின்றார்கள்

இதுவே கற்பு – கற்பு நெறி ஆகும்

ஜீவ நிலை – நினைப்பது எதுவும் நடப்பதில்லை

” ஆன்ம நிலையில் – நினைப்பது யாவும் நடக்கும் – அதுவும் இனிதே நடக்கும் ”

ஆக, ” ஆன்மா = கற்பகம் – கற்பகத்தரு – கல்பவிருக்ஷம் – காமதேனு ”

நினைப்பது யாவும் நடப்பதற்கு – ” ஒருமை என்னும் மாபெரும் நிலையாகிய ஆன்ம நிலை வரவேண்டும் ”

No comments:

Post a Comment