Wednesday, January 13, 2016

காயகற்பப் பியிற்சி ."

"காயகற்பப் பியிற்சி ."
.

"உலக சமுதாய சேவா சங்கத்தில் (World Community Service Centre)  "மனவளக்கலையில்"  காயகற்பப் பியிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது.  விந்து, நாதம் எனும் மூலப் பொருட்களைத் தூய்மை செய்து அவற்றின் வலுவையும் அளவையும்,  தரத்தையும் உயர்த்தும் எளிய பயிற்சி ஆகும் அது.  நாம் உண்ணும் உணவு :
.

1) ரசம்,

2) ரத்தம்,

3) சதை,

4) கொழுப்பு,

5) எலும்பு,

6) மஜ்ஜை, மற்றும்

7) சுக்கிலம்.
.

என்ற  ஏழு தாதுக்களாக, முறையே ஒன்றிலிருந்து மற்றொன்றாக இறையாற்றளால் மாற்றப்படுகின்றன.  இந்த உடலியக்க விஞ்ஞானத்தைப் பற்றி சிந்தனையாளர்களுக்கும் மருத்துவ விஞ்ஞானிகட்கும் நன்கு தெரியும்.
.

இவற்றில் சுக்கிலம் (விந்து - நாதம்) எனும்  'சீவ இன அனைத்தடக்கப் பொருள்' தான் மனித உடலினது தோற்றம், தன்மை, வளர்ச்சி, இயக்கம் விளைவுகள் அனைத்துக்கும் அடிப்படை ஆற்றலான மிக "மதிப்புடைய" பொருளாகும்.  உயிரினங்களின் பிறப்பு, இறப்பு இரண்டு நிகழ்ச்சிகட்கும் வித்து எனும் சீவசக்தியே காரணம் ஆகும்.  ஒரு விதையில் ஒரு முழு மரம் காந்த அலைவடிவில் சுருங்கி இருப்பதைப் போலவே, விந்து நாதக் குழம்பில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் மனித வடிவமே சுருங்கி இருக்கிறது.  மேலும் பரிணாமத் தொடராக வரும் செயல்கள், எண்ணம் இவற்றின் அலைகளைச் சுருக்கிப் பதிவாக வைத்திருக்கும் கருமையத்தைத் தாங்கிக் கொண்டு இருக்கும் தெய்வீகத் திரவமும் வித்துவே (Sexual Vital Fluid), விந்து நாதத் திரவமே ஆகும்.
.

இத்தகைய மதிப்பு வாய்ந்த, வாழ்க்கை நல நிதியான விந்துநாதத் திரவங்களை மனிதவள மதிப்பறியாமல் மக்களில் பெரும்பாலோர் வீணாக்கியும் கெடுத்தும் விடுகிறார்கள்.  இந்தக் குறைபாடு மனித வளத்தை மிகவும் தாக்கிச் சீரழிக்கின்றது.  இதனால் தான் தனிமனிதன்,  குடும்பம், சமுதாயம், உலகம் என்ற அளவில் மனித இன வாழ்வில் கணிக்க முடியாத எண்ணிக்கையில் சிக்கல்களையும் துன்பங்களையும் விளைவிக்கின்றன.  இந்த உண்மைகளை அறிந்த 'சித்தர்கள்' எனும் 'மனிதவள விஞ்ஞானிகள்' வித்துவைத் தூய்மை செய்து வளப்படுத்தும் பயிற்சியை உலக மக்களுக்கு வழங்கியுள்ளார்கள்.  இந்தப் பயிற்சி தான் "காயகற்பம்" எனும் மனித வளப் பயிற்சியாகும்.
.

நீண்ட காலமாக இந்தக் காயகற்ப பயிற்சியானது மிகவும் ரகசியமாக வைக்கப்ட்டிருந்தது. எல்லாச் சித்தர்களுமே அவரவர்கள் எழுதிய நூல்களில், இந்தப் பயிற்சியைப் பற்றிச் சில குறிப்புகளை எழுதி உள்ளார்கள்.  எனினும் இதனைப் பயின்று பயன் பெற்றவர்கள் நேர்முகமாகக் கற்றுக் கொடுத்தால் அல்லாது, எவருக்கும் எழுத்தின் மூலம் இந்தப் பயிற்சியினை விளங்கிக் கொள்ளமுடியாது.
.

உதாரணமாக ,

"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லீரேல்,
விருத்தரும் பாலராவார்.  மேனியும் சிவந்திடும்.
அருள்தரித்த அம்மைபாதம் ஐயன்பாதம் உண்மையே"!
.

காயகற்ப பயிற்சியைப் பற்றி சித்தர்கள் எழுதி உள்ள பாடல்களில் நீங்கள் படிக்கும் மேலே உள்ள கவியும் ஒன்று.  இது சுத்த தமிழ்தான் என்றாலும் இதனைப் படித்து விட்டுக் காயகற்பப் பயிற்சியை ஒருவர் தெரிந்து பழக முடியாது.  எனவே குரு என்னும் ஒரு நபரிடமிருந்து நேர்முறைப் பயிற்சி தான் தேவையாகின்றது.'
.

"மனவளக்கலை மன்றங்களில்" உறுப்பினராகி  "வாழ்க்கைவள விஞ்ஞானம்" பயில்வோர்களுக்கு இந்தப் பயிற்சியும் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது.  முறை தவறிய வழிகளில் விந்துவை நாசப்படுத்திக் கொண்டு படிப்பில் விருப்பமில்லாமலும், நினைவாற்றல் குறைந்து, வாழ்வில் சோர்வும் ஏமாற்றமும் காண்கின்ற இளைஞர்களுக்கு அவர்கள் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள இது ஓர் உயர்ந்த "சாதனைவழி".  "ஆண் பெண்" இருபாலரும் வயது பதினான்கு பதினைந்துக்கு மேல் காயகற்பப் பயிற்சியைக் கற்றுப் பயனடையலாம்.  குடும்ப வாழ்வில் உள்ள இருபாலருக்கும், திருமணம் வேண்டாம் என்று பொது நல ஆன்மீகத் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இந்த அறிய "காயகற்பக் கலை" நல்லதோர் உயிர்த் தோழனாகப் பயன்படும்.
.

காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம்.  உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும்.  மரபு வழியாக வந்த நோய்களைக்கூட, சில மாதங்களில் போக்கி நலமடையலாம்.  ஆகவே "மனவளக்கலையில்" உடற் பயிற்சி என்பது முதல் கட்டமான வாழ்க்கைத் திருத்தச் செயல்.  இதற்கு அடுத்தபடியாகத்தான் ஒருவர் ஏற்கவேண்டிய பொறுப்பு  "மனவளம்"  ஆகும்.
.

காயகற்பம்:

"ஆயகலை கள்மொத்தம் கணக்கெ டுத்தோர்
அறுபத்தி நாலுஎன்றார் அனைத்தும் கற்றும்,
காயகற்ப மெனும்கலையைக் கற்கா விட்டால் ,
கற்றதெல்லாம் மண்புக்கும்.  உடல்வி ழுந்தால்;
மாயமெனும் காந்தம்உயிர் வித்து மூன்றில்
மறைந்துள்ள இரகசியங்கள் விளங்கி வாழ்ந்தால்,
தீயவினை கள்கழிய உலகுக் கென்றும்
தெளிவான அருள்ஒளியாய் நிலைக்கும் ஆன்மா".
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment