=========
இந்தியா என்பது எப்போதுமே முனிவர்கள், சாதுக்கள் மற்றும் ஆத்மா பலம் நிறைந்த பூமியாக விளங்குகிறது. சாதுக்கள் என்று எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் பல வகையான சாதுக்களை சேர்ந்தவர்களாக விளங்குவார்கள். சிலர் காவி நிற ஆடையணிவார்கள், சிலர் கருப்பு நிற ஆடையணிவார்கள். இன்னும் சிலரோ ஆடையே அணியாத நிர்வாண நிலையில் இருப்பார்கள். சாது என்றால் யார் என்ற கேள்வி வரும் போது, உலக சந்தோஷங்களை துறந்து மோட்சம் அடைவதற்கு தங்கள் வாழ்க்கையை கடவுளுக்கு அர்பணித்தவர்கள் என்று தான் நாம் கூறுவோம்.
ஆனால் கடவுளை அடைய சில சாதுக்கள் வழக்கத்திற்கு மாறான சில பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரமான இடமாக பிறரால் பார்க்கப்படுகிற இடங்களிலே இவர்கள் வாழ்வார்கள். அதில் ஒன்று தான் மயான பூமி. இவ்வகையான சாதுக்கள் பிணங்களின் சாம்பலை தங்கள் உடல் முழுவதும் பூசிக்கொண்டு, மனித மண்டை ஓட்டில் பானம் பருகி, மனித தசைகளை உட்கொண்டு வருவார்கள். ஆம், நாங்கள் கூறுவது இந்தியாவை சேர்ந்த அகோரிகள் தான்.
தன்னின மாமிச உண்ணும் பழக்கங்கள், விலங்குகளை பலி கொடுப்பது மற்றும் இதர விந்தையான சடங்குகளை செய்வதற்கு பெயர் பெற்றவர்கள் அகோரிகள். பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானின் தீவிர பக்தர்கள் இவர்கள். மறுபிறப்பில் இருந்து விடுபட்டு மோட்சத்தை அடையும் நோக்கில் மற்றும் தன் சுய அடையாளத்தை புரிந்து கொள்ளும் நோக்கில் தான் அவர்கள் வாழ்க்கை பயணிக்கிறது. மாறுபட்ட நிலையிலான மன உணர்வில் வாழ்பவர்கள் இவர்கள். சமுதாயத் தீய பழக்கங்களை வேரறுத்து, இருமை இயல்பற்றதை (அத்வைதா) உணர்வதே அவர்களின் உச்சகட்ட குறிக்கோளாகும்.
இருப்பினும், அகோரிகள் என்பவர்கள் சிவநேத்ராக்களை விட மாறுபட்டவர்கள். சிவநேத்ராக்கள் தீவிர டமாஸிக் பழக்க வழக்கங்களில் ஈடுபடாதவர்கள். சிவநேத்ராக்களும் சிவபெருமானை தான் வழிபடுவார்கள், ஆனால் சட்விக் வடிவத்தில். அகோரி என்ற வார்த்தை அகோர் என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். அதற்கு இருளற்றது என்பதே பொருளாகும். இயற்கை நிலையிலான உணர்வை உட்குறிப்பவர்களே அகோரிகள். அந்த உணர்வில் பயமோ வெறுப்புணர்ச்சியோ துளியும் இருப்பதில்லை. அதனால் பயம் இல்லாமலும் பாரபட்சம் பார்க்காமலும் இருப்பவரே அகோரி.
அகோரி சாதுக்களைப் பற்றி, அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கை ஆகியவைகளை பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக பார்க்கலாம்.
உலகத்தில் எதுவுமே அசுத்தமில்லை என்பது அகோரிகளின் நம்பிக்கையாகும். சிவபெருமானிடம் இருந்து வந்த அனைத்தும் அவரிடமே செல்கிறது. அதனால் உலகத்தில் உள்ள அனைத்தும் தூய்மையானதே. அழிக்கும் கடவுளான சிவபெருமான் மயான பூமியல் தான் வாழ்கிறார் என நம்பப்படுகிறது. அதனால் தான் மயான பூமிக்கு அருகில் வாழ்கின்றனர் அகோரிகள். எரித்த சடலத்தின் சாம்பல் தான் உலகத்திலேயே தூய்மையானது என அவர்கள் கருதுவதால் அதனை உடல் முழுவதும் பூசிக் கொள்வார்கள் அவர்கள். உலகத்தில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதையும், வாழ்க்கை முடிந்தவுடன் அனைத்துமே சாம்பலாகி விடும் என்பதையும் குறிக்கிறது இந்த சாம்பல்.
இறந்த மனிதர்களின் எலும்புகள் மற்றும் மண்டை ஓட்டை அகோரிகள் பயன்படுத்தி வருகிறார்கள் அகோரிகள். அதனை அணிகலன்களாகவும் கிண்ணமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். மோட்சத்திற்காக கங்கையில் வீசப்படும் எஞ்சியிருக்கும் மனித சடலத்தின் எலும்புகளை சேகரித்து வைத்துக் கொள்வார்கள். புனித நபர்கள், கர்ப்பிணி பெண்கள், பாம்பினால் கடிபட்டவர்கள், பிறக்காத சிசுக்கள் போன்றவர்களின் சடலங்களை எரிக்க கூடாது என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் வழக்கமாகும். அவர்களை கங்கையின் புனித நீரில் மூழ்கடித்து விட வேண்டும். இந்த சடலங்களை பலிபீடமாக பயன்படுத்தி கொள்வார்கள் அகோரிகள். ஏன், இறப்பை நினைவூட்டும் விதமாக அதனை உண்ணவும் செய்வார்கள்.
பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானை உச்ச சக்தியாக நம்புகின்றனர் அகோரிகள். நிபந்தைகள், விளைவுகள் மற்றும் தாக்கங்கள். உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் சிவபெருமான் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்த ஆத்மா அனைத்தும் உலகளாவிய 8 பிணைப்புகளால் (அஷ்டமஹாபாஷா) மூடப்பட்டிருக்கிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர். சின்றின்பம், கோபம், பேராசை, மன உறுத்தல், பயம் மற்றும் வெறுப்பே அந்த எட்டு பிணைப்புகலாகும். இந்த பிணைப்புகளை நீக்கும் திசையில் தான் அனைத்து அகோரிகளும் தங்களின் வழக்கங்களை மேற்கொண்டுள்ளனர்.
நம்பிக்கைகள்
சிவபெருமானை மனிதர்கள் உணர்ந்து கொள்ள தடையாக இருக்கும் இந்த 8 பிணைப்புகளையும் நீக்கும் திசையில் தான் அகோரிகளின் அனைத்து வழக்கங்கள் அமைந்திருக்கும். மயான பூமியில் செய்யப்படும் சடங்குகள் மனிதர்களின் மிகப்பெரிய பயமான மரண பயத்தை அளித்திடும். பாலியல் சம்பந்தப்பட்ட சடங்குகள் ஒருவரை சிற்றின்ப எண்ணங்களை நீக்கும். நிர்வாணமாக இருப்பது வாழ்க்கையின் அடிப்படை தேவைகளுடன் கூடிய அன்பு மற்றும் மன உறுத்தல்களை அழிக்கும். இந்த 8 பிணைப்புகளும் ஆன்மாவை விட்டு நீங்கினால், அவன் சதாசிவாவுடன் சேர்ந்து மோட்சத்தை பெறுவான் என அகோரிகள் நம்புகின்றனர்.
மாய வித்தை நம்பிக்கை
அகோரிகளின் விந்தையான குணாதிசயங்களை பார்த்து, அதனை மாய வித்தையுடன் ஒப்பிட்டு பார்க்கின்றனர் மக்கள். ஆனால் அது உண்மையல்ல. அவர்களிடம் அளவுக்கு அதிகமான இயற்கைக்கு மாறான சக்திகள் உள்ளது. அதற்கு காரணம் நீண்ட காலமாக அவர்கள் செய்து வரும் யோகாசனங்கள். ஆனால் அவர்கள் எந்த ஒரு மாய வித்தைகளையும் செய்வதில்லை. அவர்களின் சடங்குகளும், பழக்க வழக்கங்களும், மோட்சத்தை அடைவதிலும், சிவபெருமானின் உண்மையான இயல்பை உணர்வதிலுமே அடங்கியிருக்கும்
யாரை வழிப்படுவார்கள் அகோரிகள்?
சிவபெருமானையும், காளி தேவியையும் வணங்குவார்கள் அகோரிகள். காளி தேவி அல்லது தாரா என்பவர் 10 மகாவித்யாக்களில் (அறிவை கொடுக்கும் கடவுள்கள்) ஒருவராகும். இக்கடவுள் இயற்கைக்கு மாறாக அதீத சக்திகள் கொண்டுள்ள அகோரிகளை மட்டுமே ஆசீர்வதிப்பார்கள். துமாவதி, பகளமுகி மற்றும் பைரவி வடிவில் இருக்கும் இக்கடவுளை இவர்கள் வணங்குகிறார்கள். மஹாகல், பைரவா மற்றும் வீரபத்ரா போன்ற மிகவும் கடுஞ்சினத்துடன் கூடிய வடிவத்தில் இருக்கும் சிவபெருமானையும் வணங்குவார்கள். அகோரிகளின் காப்பாளர் கடவுளாக விளங்குவது ஹிங்க்லஜ் மாதா
எளிய தத்துவம்
அகோரிகளின் தத்துவப்படி, அவர்களுக்குள் தான் இந்த அண்டம் குடி கொண்டுள்ளது. நிர்வாணமாக இருப்பதால் அவர்களே உண்மையான மனித வடிவின் பிரதிநிதித்துவம். நாம் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்திற்குள் நுழைகிறோம். அதே போல் இந்த கோலத்தில் தான் இந்த உலகத்தை விட்டு வெளியேறுகிறோம். அதனால் நிர்வாணமாக இருப்பதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. காதல், வெறுப்பு, பொறாமை மற்றும் தற்பெருமை போன்ற உணர்சிகளுக்கு அப்பர்ப்பட்டவர்கள் அவர்கள். அனைத்திலும், ஏன் தூய்மையில்லாத மற்றும் சுத்தமில்லாதவற்றிலும் கூட கடவுள் இருக்கிறார் என்பதே அவர்களின் நம்பிக்கையாகும்.
அகோரிகள் என்பவர்கள் மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர்களை பெரும்பாலும் மாய வித்தைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள் மக்கள். அதற்கு காரணம் அவர்கள் இறந்த சடலங்களுடன் சேர்ந்து வாழ்வதால். ஆனால் அவர்களோ கடவுளை தேடும் காரணத்தினால் தீவிரமான வழிமுறைகளை பின்பற்றி வாழும் புனிதமான எளிய மனிதர்களாகும். குணமாக்கும் சக்தியையும் அவர்கள் பெற்றிருக்கிறார்கள். நோயாளிகளின் உடலில் இருந்து மாசுக்களை நீக்கி மீண்டும் பழைய ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு வரும் "உருமாற்றும் குணமாக்கல்" சக்தியை அகோரிகள் பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கும் மாய வித்தைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. அகோரிகளின் உயரிய நிலையிலான உடல் மற்றும் மனதே, அவர்களுக்கு இவ்வளவு சக்தியை அளித்துள்ளது.
அகோரி சாதுக்கள் பற்றிய விந்தையான உண்மைகள்
மனித வரலாற்றில் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டுச் சடங்குகள் எதுவும் குழப்பங்கள், வெறுப்பு, பயம், அருவெறுப்பு போன்றவைகள் சரிசமமான அளவில் நமக்கு ஏற்படுத்தியிருக்காது. அப்படி ஏற்படுத்தும் சடங்குகளைப் பின்பற்றுபவர்கள் தான் இந்தியாவில் உள்ள நரமாமிசம் உண்ணும் அகோரிகள் (அகோரி சாதுக்கள்) ஆவார்கள்.
அகோரிகள் யார்?
நர மாமிசம் உண்ணுவது மட்டுமல்லாது, இறந்த பிணங்களுடன் உடல் உறவு கொள்வதற்காகவும் அகோரிகள் அறியப்படுபவர்கள். அதேப்போல் பல வித சடங்குகளுக்கு மனித மண்டை ஓடுகளையும் பயன்படுத்துபவர்கள் அவர்கள். ஆனால் அகோரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால் இதோடு நின்று விட முடியாது.
சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!
அவர்களைப் பற்றி பேச இன்னும் ஏராளமான விஷயம் உள்ளது. அவற்றைத் தான் நாம் பார்க்கப் போகிறோம். அகோரிகளைப் பற்றிய விந்தையான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...
அகோரிகள் அழிக்கும் கடவுளான சிவபெருமான் அல்லது அவருடைய துணைவியான காளி தேவி அல்லது சக்தியின் பக்தர்கள் ஆவார்கள். இச்சை அடக்கம், குடிப்பழக்கத்திலிருந்து விலகியிருத்தல் போன்றவற்றை முழுமையாக பின்பற்றும் பிற சாதுக்களைப் போல் அல்லாமல் அகோரிகள் வேறுபட்டிருப்பார்கள். அவர்களை பொறுத்த வரை, மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், உடலுறவு கொள்ளுதல் போன்றவைகள் எல்லாம் தேவியை திருப்தி படுத்துவதற்கான செயல்களாகும். மேலும் அனைத்திலும் கடவுள் இருக்கிறார் என நம்புபவர்கள் அவர்கள். அதனால் மனித கழிவு, மனித நீர்மம் மற்றும் அழுகும் நிலையில் உள்ள மனித சவம் ஆகியவைகளையும் கூட அவர்கள் உண்ணுவார்கள். இப்படிச் செய்வதால் விஷயங்களில் உள்ள ஒருமையை (புனித மற்றும் புனிதமற்ற) தன்மயமாக்க முயற்சி செய்வார்கள். இதன் மூலம் அழகின் உண்மையான புலனுணர்வை வரையறுப்பார்கள்.
அகோரிகளின் மிகவும் நெறி தவறிய வழக்கமாக கருதப்படுவது பிணத்தைப் புணருவது. அவர்களை பொறுத்த வரையில், காளி தேவி உடலுறவில் திருப்தியை எதிர்ப்பார்க்கிறார். அதனால் தகுந்த பிணம் ஒன்றினை கண்டுப்பிடித்து, அதனுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். புகழ் பெற்ற புகைப்படக்காரரான டேவர் ரோஸ்டுஹர் ஒரு அகோரியை பேட்டி எடுக்கையில், அந்த அகோரி கூறியதாவது, "வெளி உலகத்திற்கு மூர்க்கத்தனமான தெரியும் காரியங்களை நாங்கள் செய்வதற்கான காரணம் மிகவும் சாதாரணமானது. அருவெறுப்பான விஷயத்தில் புனிதத்தைக் கண்டுபிடிப்பதே அதற்கான காரணம்! ஒரு பிணத்துடன் உடலுறவு கொள்ளும் போதோ அல்லது மனித மூளையை உண்ணும் போதோ ஒரு அகோரி கடவுள் மீது தன் கவனத்தை வைத்திருந்தால், அவன் சரியான பாதையில் செல்கிறான் என அர்த்தமாகும்."
பில்லி சூனியம் மற்றும் இயற்கையை மீறிய சக்திகளில் அகோரிகள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். பிணத்தைப் புணரும் போது, அவர்கள் அதிர்ச்சி ஊட்டும் சடங்குகளில் ஈடுபடுவார்கள். இறந்த சடங்களுடன் உடலுறவு கொள்ளும் போது, இயற்கையை மீறிய சக்திகள் தங்களுக்கு அதிகரிக்கும் என அவர்கள் நம்புகின்றனர். அதனால் அகோரிகளின் கூட்டம் இந்த சடங்கினை செய்திட இரவு நேரத்தில் கல்லறையில் ஒன்று கூடுவார்கள். எரிக்கப்பட்ட சவத்தின் சாம்பலை தன் உடலின் மீது அகோரி பெண்கள் பூசிக் கொள்வார்கள். கொட்டு அடிக்கப்பட்டு, மந்திரங்கள் ஓதப்பட்டு, கன்னியிழப்பு நடைபெறும். இந்த செயல் நடைபெறும் போது, அந்த பெண் மாதவிடாய் காலத்தில் இருப்பது அவசியமாகும்.
அகோரிகள் தங்கள் மனதில் பகையையோ அல்லது வெறுப்பையோ வைத்திருக்க மாட்டார்கள். வெறுப்பை கொண்டிருந்தால் தியானத்தில் ஈடுபட முடியாது என்பது அவர்களுடைய நம்பிக்கையாகும். அதேப்போல் தங்கள் உணவை தாங்கள் உண்ணும் கிண்ணத்திலேயே நாய்களுக்கும் மாடுகளுக்கும் பகிர்ந்து உண்ணுவது அவர்களை மகிழ்விக்கும். இவ்வகையான எதிர்மறையான எண்ணங்களை (மிருகங்கள் தங்கள் உணவை அசுத்தம் செய்வது) நீக்கினால் தான், சிவபெருமானுடன் ஐக்கியமாகும் தங்களின் ஒரே குறிக்கோளின் மீது கவனத்தை செலுத்த முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
மிகச்சிறய சணல் கோவணத்தை தவிர அவர்கள் உடலில் எந்த துணியும் அணியாமல் தான் அலைவார்கள். சில நேரங்களில் இறந்த மனித உடலின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொண்டு நிர்வாணமாகவும் கூட சுற்றுவார்கள். சாம்பல் என்பது வாழ்க்கையின் 5 அதிமுக்கிய பொருட்களை கொண்டு செய்யப்படுவது. அதனால் நோய்கள் மற்றும் கொசுக்களிடம் இருந்து அது அகோரிகளை பாதுகாக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். பொதுவாக சிவபெருமானின் தோற்றத்தைப் போல நடந்து கொள்ளவே அவர்கள் இப்படி செய்கிறார்கள்.
கபாலம் என்றழைக்கப்படும் மனித தலையை உடைமையாக வைத்திருப்பதே அகோரியின் உண்மை ன சின்னமாகும். அதற்காக கங்கை நீரில் மிதந்து செல்லும் பிணங்களை அவர்கள் கைப்பற்றிக் கொள்வார்கள். அதன் பின் அந்த மண்டை ஓட்டை கொண்டு மதுபானம் குடிக்கவோ அல்லது உணவருந்தவோ அல்லது பிச்சை பாத்திரமாகவோ பயன்படுத்துவார்கள்
தூய்மை மற்றும் தூய்மையற்ற, புனிதம் மற்றும் புனிதமற்ற, சுத்தம் மற்றும் அசுத்தத்திற்கு இடையே உள்ள விதிமுறைகளை உடைப்பதன் மூலம் குணப்படுத்தும் அதிசய சக்தியை தாங்கள் பெறுவதாக அகோரிகள் நம்புகின்றனர். இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிய பிறகு, சுடுகாட்டில் அவர்கள் அமைதியான முறையில் தியானம் செய்வார்கள்.
சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காததன் மூலம் நிர்வாணம் மற்றும் ஆத்மாவின் மோட்சத்திற்கு பாதை கிடைக்கும் என இந்த இனம் நம்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் சமயத்தின் புனிதத் தன்மைக்கு மதிப்புக் கொடுக்காமல், காரணமே இல்லாமல் மிக சத்தமாக சபிப்பார்கள். இந்த ஒரே வழியில் தான் அகோரிகளால் அறிவொளியை அடைய முடியும்.
மனித மண்டை ஓடுகளை ஓரி அணிகலனாக தங்கள் கழுத்தில் மாலையாக அணிவித்திருப்பதை நாம் காண நேரிட்டிருக்கலாம். மனித மண்டை ஓடுகளை கொண்டு செய்த இந்த ஒரே அணிகலனை தான் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர். எரிக்கப்பட்ட பிணங்களின் தொடை எலும்பையும் கூட நடை குச்சியாக சில அகோரிகள் பயன்படுத்துவார்கள். இது அகோரியின் சின்னமாகும். அவர்கள் தங்களது தலை முடியை வெட்டவோ அல்லது குளிக்கவோ மாட்டார்கள். அதனால் தான் இயற்கையான ஜடாமுனி அவர்களுக்கு ஒரு அடையாளமாகவே விளங்குகிறது.
அகோரிகள் கஞ்சாவை புகைப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள். அதற்கு காரணம், அவர்கள் விடாமல் கடைப்பிடிக்கும், விடாமுயற்சியுள்ள தியானத்தில் மனதை ஒருநிலைப்படுத்த அது உதவும் என நம்புகின்றனர். சொல்லப்போனால், எப்போதுமே அவர்கள் கஞ்சாவின் தாக்கத்திலேயே தான் இருப்பார்கள். இருப்பினும் பார்ப்பதற்கு அமைதியாகவே காணப்படுவார்கள். இந்த போதை வஸ்து கொடுக்கும் பிரமை, மிக உயரிய ஆன்மீக அனுபவங்களாக கருதப்படுகிறது.
குறிப்பு
அதிர்ச்சியூட்டும் தங்களின் பழக்கங்களை ஒருவர் ஒத்துக்கொண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி, இந்தியாவில் அகோரிகள் தன்னினம் உண்ணுவதும், பில்லி சூனியத்தில் ஈடுபடுவதும், வழிபாட்டுச் சடங்குகளை நடத்துவதும் நடந்து கொண்டு தான் உள்ளது. இவையெல்லாம் உடனே நிற்கக்கூடிய விஷங்களும் அல்ல. சரி, இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் வழியிலான வாழ்க்கையினால் அவர்கள் தேடும் அறிவொளியை அவர்களால் அடைய முடியுமா? உங்கள் கருத்துக்களை பகிரவும்.
No comments:
Post a Comment