Friday, December 16, 2016

முதுகு வலியால் அவஸ்தையா? இதனை செய்யவும்!

!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் கணனி முன் அமர்ந்து வேலை செய்வதால் முதுகு வலி, கழுத்துவலியால் அவஸ்தைப்படுகின்றனர்.

இதற்காக பல்வேறு மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் அர்த்த சக்ராசனம் என்ற உடற்பயிற்சியை செய்வதன் மூலம் முதுகு வலியிலிருந்து விடுபடலாம்.

விரிப்பின் மீது கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து நின்று கொள்ள வேண்டும்.

கைகளால் இடுப்பை பிடித்து கை கட்டை விரல்களால் முதுகை அழுத்தி பின்னோக்கி முடிந்த அளவிற்கு வளைய வேண்டும்.

ஆனால் கால் முட்டிகளை வளைக்கக் கூடாது. அப்படியே 20 எண்ணிக்கையில் இருக்க வேண்டும், சாதாரணமாக மூச்சு விட வேண்டும், கண்கள் திறந்திருக்க வேண்டும், அடுத்து மெதுவாக நிமிர்ந்து நிற்கவும்.

கைகளை இடுப்பிலிருந்து பிரித்து தளரவிட்டு சிறது ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வாறு இந்த ஆசனத்தை 5 முதல் 7 முறை செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஆஸ்துமா, கீழ் முதுகுவலி ஆகியவை குணமாகின்றன.

தொடை, கெண்டைக் கால் பகுதியில் ஏற்படும் தசைப் பிடிப்பு நீங்குகிறது.

சுவாச உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன, உடம்பின் முன்புறத்தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் வலுப்பெறுகின்றன.

இதய நோய் உள்ளவர்கள் இதனை மெதுவாக செய்யவேண்டும். மெலிந்த உயரமான உடல்வாகு அல்லது பலவீனமானவர்கள் அதிகமாய் வளைவதை தவிர்க்கவும்.

முதுகெலும்பு மற்றும் கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment