மனதை ஓய்வு பெறச் செய்யும் ஆம் மந்திர யோகா !!
செய்முறை :
விரிப்பில் கண்களை மூடி, கைகளில் சின் முத்ரா வைத்து, 10 நிமிடங்கள் மூச்சைக் கவனிக்க வேண்டும். இது, யோகா செய்வதற்கு முன் மனதை ஓய்வுபெறச் செய்ய உதவும்.
தரையில் அமர்ந்து நெஞ்சுக்கூட்டில் வணக்கம் வைத்து, ஆம் (Aum) சப்தம்… அதாவது ‘ஆஆ…உஉ…ம்ம்…’ என்று சொல்ல வேண்டும். இப்படி, ஒன்பது முறை உச்சரிக்க வேண்டும். ‘ஆ’ என்பது அடிவயிற்றில் தொடங்கி, ‘உ’ நெஞ்சுப் பகுதியில் அதிர்ந்து, ‘ம்’ தோள்பட்டை வழியாகத் தொண்டைக்குழியில் முடிவதை உணர முடியும்.
பலன்கள் :
நெஞ்சுக்கூட்டையும் செரிமான மண்டலத்தையும் பிரிக்கும் உதரவிதான (Diaphragm) அசைவுகள் நன்றாக நடக்கும். நாம் சுவாசிக்கும்போது நுரையீரலின் கீழ் அறைகளுக்குக் காற்று செல்வது மிகமிகக் குறைவாக இருக்கும். இந்தப் பயிற்சி செய்யும்போது, கீழ் அறைகளுக்கும் காற்று செல்லும். இதனால், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் அதிக அளவில் உடல் முழுவதற்கும் கொண்டு செல்லப்படும். மனதுக்கு அமைதியும், உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
Good
ReplyDelete