Monday, December 12, 2016

இளைஞர்களைவைத்து_சகாயம்_செய்யும்_சகாயம்


#

நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாருங்கள் என்று கூப்பிட்ட இளைஞர்களின்  குரலுக்கு

அரசியலுக்கு வந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா  அரசியலுக்கு வராமலேயே நம்மால் நண்மைகளைச் செய்ய முடியும் என்றுக்கூறிய திரு சகாயம் ஐ ஏ எஸ் இன்று  அதை நிரூபித்தும் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

ஆம் மக்களுக்காக இன்று அவர் சத்தமே இல்லாமல் தொடங்கி இருக்கும் ஒரு செயல்தான் இந்த  'ஜெனரிக்'

என்ன அது 'ஜெனரிக்'

இன்று உலகில் இருக்கக்கூடிய பலத்தரப்பட்ட மக்கள் நோய்வாய்ப்படு அதிகமாக இறப்பதற்குக்காரணம் மருத்துவக்குறைபாடு அல்ல மாறாக  மருத்துவத்திற்கான மருந்துவாங்க போதிய பொருளாதார வசதி அவர்களிடம் இல்லாததே
இதற்கு ஏதாவது மாற்றுவழி இருக்காதா என எண்ணிய திரு சகாயம் ஐ ஏ எஸ் தமிழ்நாட்டிலேயே எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத ஏன்  தமிழ்நாட்டிலேயே எந்த ஒரு முதல்வரும் செய்யாத ஒரு அற்புதத் திட்டத்தை தொடங்கி இருக்கிறார் அதுதான் இந்தியாவிலேயே குறைவான விலையில்  இல்லை இல்லை இந்தியாவிலேயே மிக மிகக்  குறைவான விலையில் மருந்துகள் விற்கக்கூடிய ஜெனரிக் மருந்துக்கடை
புரியும்படிக்கூற வேண்டுமென்றால் சாதாரண 'மெடிக்கல்' எனக்கூறப்படும் கடையில் வாங்கும்  மருந்து ஆயிரம் ரூபாய் எனில் அதே மருந்தை இந்த ஜெனரிக் மருந்தகத்தில் வாங்கும்பொழுது அதன்  விலை நூறு ரூபாய் மட்டுமே அதாவது சாதாரண விலையை விட 90 சதவிகிதம் குறைவாக

இது எப்படிச்சாத்தியம் ?

இந்தியாவில் மக்களின் இரத்தத்தை உறிந்துக் குடிக்கும் அரசியல்வாதிகளும் வியாபாரிகளையும் தாண்டிச் சில நல்ல நபர்கள் இருந்தால் இதுவும் சாத்தியமே

சிவகங்கை மாவட்டத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஜெனரிக் மருந்தகம் இன்னும் விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டுவர மக்கள் பாதை இளைஞர்களின் மூலம் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
ஆனால் வருத்தம் என்னெவெனில் எந்த ஒரு மீடியாவும் இதைப்பற்றிக் கடுகளவும் வாயைத்திறக்கவில்லை

காரணம் பெரும்புள்ளிகளின் வியாபாரம் நஷ்டமடையும் என்பதால்

ஆனால் இன்று நான் இதை உங்கள் பார்வையில் விட்டுவிடுகிறேன் இச்செய்தியை  மக்களின் முன்னால் எப்படியாவது கொண்டு சேர்த்துவிடுங்கள்

         By
           SAGAYAM IAS

No comments:

Post a Comment