நான் பழனி செல்லும் போதெல்லாம்
தரிசனம் முடிந்தவுடன் உடனே ஒருவரை சந்திக்க ஓடுவேன்.
அவர் மெளன சுவாமிகள்.
யாரிடமும் எதுவும் பேச மாட்டார். ஒரு காவி வேட்டி மட்டுமே. அமர்வதற்கு ஒரு பாய். செம்பில் தண்ணீர் வைத்திருப்பார்.
கீழ் பிரகாரத்தில் ஒரு தூண் அருகே அமைதியாக நல்ல தேஜசுடன் பளிச்சென்று வெண்தாடியும் நெற்றி நிறைய திருநீறுமாக அமர்ந்திருப்பார்.
நான் அடிக்கடி அவரை சந்திப்பதால் அன்போடு புன்முறுவல் செய்வார். தேவஸ்தான நிர்வாகிகள் பெரும் அன்போடும் பாசத்துடன் அவரை கவனித்து கொள்வார்கள்.
பழனி மலை மேலேயே, போகர் சன்னதிக்கு நேர் கீழே உள்ள ஹாலில் அமர்ந்திருப்பார்.
உலகத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத ஞானி போல் அமர்ந்திருப்பார்.
கேள்வி கேட்டால் பதில் தரையில் சாக்பீஸால் எழுதிக் காட்டுவார்.
நான் ஒரு முறை கேட்டேன். வாழ்க்கை என்றால் என்ன?
புன்முறுவலோடு குறும்பாக சிரித்தபடி "வெங்காயம் என்று எமுதிக் காட்டினார். புரியவில்லை என்றேன்.
அவருக்கு ஆங்கிலமும் தெரியும்.
When you peel off onion,you will find layers after layers and finally nothing Empty என்று எழுதிக் காட்டினார்.
வாழ்க்கைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றேன். சிரித்தவாறே எழுதிக் காட்டினார்.
When you remove all your blankets ego,desire,anger,lust etc one by one,finally
You are nothing,,empty .Then you are God
என்று குறும்பாக சிரித்தார்.
ஞான மார்க்கம். மெய் சிலிர்த்தது.
இது நடந்து பல ஆண்டுகள் ஓடி விட்டது. இப்போது அவர் அங்கே இல்லை. சரியான தகவலும் கிடைக்கவில்லை.
குருவே சரணம்,,
No comments:
Post a Comment