❤
ஒரு அழகான முகம்
ஒரு அழகான உடல்
நீ அதை பார்க்கிறாய், அதை அன்போடு பார்ப்பதாக உணர்கிறாய்.
ஆனால் நீ ஏன் அதை பார்க்கிறாய்?
நீ அதிலிருந்து எதையாவது அடைய விரும்புகிறாயா?
அப்படியானால் அது காமம்.
நீ அதை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறாயா?
அப்படியானால் அது காமம்.
எப்படி அதை சொந்தமாக்கிக் கொள்வது
எப்படி அதை என்னுடைய சந்தோஷத்திற்கான கருவியாக அந்த உடலை மாற்றுவது, என்று யோசிக்கிறாய்.
உன்னுடைய சந்தோஷத்திற்காக ஏதாவது ஒன்றை எப்படி பயன்படுத்துவது என்பது காமம்.
உன்னுடைய சந்தோஷத்தைப் பற்றி சிறிதும் அக்கரைப்படாதது என்பது அன்பு.
உண்மையில் எதையாவது பெறுவது என்பது காமம்
எதையாவது கொடுப்பது என்பது அன்பு.
காமத்தில் நீயே முக்கியம் ஆகிறாய்
அன்பில் அடுத்தவரே முக்கியமாகிறார்
காமத்தில் மற்றவரை பலி கொடுக்கிறாய்.
அன்பிலர உன்னையே தியாகம் செய்கிறாய்.
அன்பு ஒரு சரணாகதி
ஆழமான அன்பு கொண்டு ஒருவரை உன்னால் நேசிக்க முடிந்தால் நீ அங்கு மையம் கொள்கிறாய்.
அங்கே ஆனந்தம் உன்னை அடைகிறது.
அது உன்னால் நிகழவில்லை,
அது அன்பினால் நிகழ்ந்தது
ஆகவே அன்பு கொள்.
ஓஷோ
❤
No comments:
Post a Comment