Monday, December 12, 2016

அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா...? !!!!!!

அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா...? !!!!!!

அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது....
அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,
"ஆப்ரஹாம்... உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது" என்றாராம்.

அதற்கு ஆப்ரஹாம் லிங்கன்.....
" நண்பரே என் தந்தை இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள்...
நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன்.
.
எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும்... நாட்டை ஆளவும் தெரியும்..!!" என்று பதிலுரைத்தாராம்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது.

பதவியில் இருக்கும் போதும் அவமான படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமான படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன்...!
அனைவரையும்   நேசிப்போம் .....
நம்மை   வெறுப்பவர்களை   மிக  அதிகமாக   நேசிப்போம் !!
வாழ்த்துக்கள்  ....!!

No comments:

Post a Comment