1."நீங்கள் மகத்தானவர்" என்பதைத்தான் இந்த பிரபஞ்சம் நம்பிக் கொண்டிருக்கிறது.
2."நீங்கள் அன்பானவர்" என்பதால்தான்
முன்பின் தெரியாத ஒரு குழந்தை கூட உங்களை கண்டவுடன் சிரிக்கிறது.
3."நீங்கள் நம்பிக்கை மிகுந்தவர்" என்பதால்தான் மீண்டும் மூச்சை வெளிவிடுவீர்கள் என்று
சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
4."நீங்கள் வலிமையானவர்" என்பதால்தான்
பல இன்னல்கள் தரப்பட்டு உங்கள் திறமை பாராட்டப்படுகிறது.
5."நீங்கள் புனிதமானவர்" என்பதால்தான் உங்கள் பயணமும் மற்றவர்களின் பயணமும் பல போக்குவரத்து பயணங்களில் ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது.
6."நீங்கள் சாதனைச் செய்ய பிறந்தவர்" என்பதால்தான் ஒவ்வொரு விடியலும் வாய்ப்பை வழங்கி வருகிறது.
7."நீங்கள் சுறுசுறுப்பானவர்"
என்பதால்தான் பசி ஏற்பட்டுக்
கொண்டே இருக்கிறது.
8."நீங்கள் பாசமானவர்"என்பதால்தான்,
உறவினர்களின் அழைப்பிதழ்கள் தேடிப்பிடித்து உங்கள் இல்லம் தேடி
வருகிறது.
9."நீங்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்"என்பதால்தான் தினசரிகளைப்
படிக்கிறீர்கள்.
10."நீங்கள் காலத்திற்கேற்ப மாறுபவர்"என்பதால்தான் fb, whatsapp என தொடர்பு இருக்கிறது.
11."நீங்கள் பல்சுவைமிக்கவர்" என்பதால்தான்
புதியதாகத் தேடுதலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.
12."நீங்கள் பொறுமை மிக்கவர்"
என்பதால்தான், திருமண வாழ்க்கையை
விரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
13."நீங்கள் மனிதநேயமிக்கவர்"
என்பதால்தான், உங்களிடம் அமைதி குடி
கொண்டிருக்கிறது.
14."நீங்கள் தியாகசீலர்"என்பதால்தான்,
உங்களின் குழந்தைகளின் தேவையையும், உங்களைவிட முதியோரின் தேவையையும் பூர்த்தி செய்து நேரத்தை தந்து கொண்டிருக்கிறீர்கள்.
15."நீங்கள் நன்றியுடையவர்" என்பதால்தான், பிறர் உங்களைப் பாராட்டுவதற்கு முன்பு, அவரைப் பாராட்ட
முற்படுகிறீர்கள்.
16."நீங்கள் சிறந்த சிந்தனையாளர்"என்பதால்தான், படித்ததை எல்லாம் நம்பாமல், கேட்டதை எல்லாம் சொல்லாமல், கவனித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
17."நீங்கள் சிறந்த நண்பர்"... என்பதால்தான், நான் எழுதியதைப் படித்து
தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும், சரியென்றால் தட்டிக்கொடுக்கவும் தயாராகிவிட்டீர்கள்...!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment