.!!!
• உதடு கருமையை போக்க விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேய்த்தால் வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
• சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும். விளக்கெண்ணெயை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வர சருமத்தில் உள்ள அழுக்கு வெளியேறும்.
• தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து வந்தால், அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்
• தினமும் சம அளவு விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் இளமையான சருமம் கிடைக்கும்.
• ஒரு உருளை கிழங்கை வட்ட வடிவில் துண்டாக்கி அதில் விளக்கெண்ணெய் தடவி கண்கள் மீது வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களில் உள்ள கருவளையம் மறையும்.
• விளக்கெண்ணெயுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3 நாட்கள் செய்து வர முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து பொலிவுடன் காணப்படும்.
No comments:
Post a Comment